Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மோடியை சந்தித்தார் இலங்கை அதிபர்: அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது

Go down

மோடியை சந்தித்தார் இலங்கை அதிபர்: அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது Empty மோடியை சந்தித்தார் இலங்கை அதிபர்: அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது

Post by oviya Mon Feb 16, 2015 1:05 pm

4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் மோடியை சந்தித்தார்.
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை வீழ்த்தி வெற்றி பெற்ற சிறிசேனா, அதிபரானதற்குப் பின் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

அதன்படி, இன்று பகல் 12 மணியளவில் பிரதமர் மோடியை ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பில் இலங்கை அதிபர் சிறிசேனா மற்றும் பிரதமர் மோடி இருவரும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும், அணுசக்தி ஒத்துழைப்பு, கலாச்சாரம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கான நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் குறித்தும் விவாதித்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்தார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் இரு நாட்டு தலைவர்களும் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான விவரத்தை தெரிவித்ததோடு, மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று மோடி உறுதியளித்துள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்புக்கு பின்னர் மாலை குடியரசு தலைவர் அளிக்கும் விருந்தில் இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்கிறார்.

மேலும், நாளை பீகார் மாநிலம், புத்தகயாவுக்கு சென்று புத்த மத தலத்தில் வழிபாடு செய்யும் அவர் இரவு திருப்பதி கோயிலுக்கு சென்று அங்கிருந்து கொச்சி வழியாக இலங்கை செல்கிறார்.

இலங்கை அதிபராக பதவியேற்ற பின்பு, சிறிசேனா மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum