Top posting users this month
No user |
Similar topics
தமிழக மீனவர்களுக்கு இலங்கை அதிபர் கொலை மிரட்டல்! மத்திய அரசு கண்டிக்க வேண்டும்
Page 1 of 1

தமிழக மீனவர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ள இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவை மத்திய அரசு வன்மையாக கண்டிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் இது தொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழக மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி உரிமை உள்ள பகுதியில் மீன்பிடித்தால் கைது செய்வோம், படகுகளை பறிமுதல் செய்வோம் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன ஆணவத்தோடு பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இது தமிழக மீனவர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் கொலை மிரட்டலாகவே கருத முடியும்.
இலங்கை தலைநகர் கொழும்பில் வடக்கு மாகாண தமிழ் மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.
இந்தக் கூட்டத்தில் பேசிய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் தமிழக மீனவர்களை படகுகளுடன் கைது செய்து சிறையில் அடைப்போம் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.
மேலும் இனிமேல் தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்தால் அவற்றை திருப்பி ஒப்படைக்கப் போவதில்லை என்றும் கொக்கரித்திருக்கிறார்.
தமிழகம் மற்றும் ஈழத் தமிழ் மீனவர்களிடையே சுமூக நிலையை உருவாக்கவும் இருநாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டுவதற்காகவும் இதுவரை 3 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
இப்பேச்சுவார்த்தை நியாயமாக தமிழக மீனவர்களை கைது செய்கிற இலங்கை அரசுடன் இந்திய அரசுதான் நடத்தியிருக்க வேண்டும்.
இருப்பினும் ஏதோ ஒருவகையில் சுமூக தீர்வு காணப்பட்டுவிடாதா என்ற அடிப்படையில் தமிழக மீனவர்களும் 3 கட்ட பேச்சுவார்த்தைகளிலும் பங்கேற்றனர்.
இருதரப்பு மீனவர் பேச்சுவார்த்தை முற்று முழுவதுமாக முடிவடையாத நிலையிலேயே ஈழத் தமிழ் மீனவர்களை தமிழக மீனவர்களுடன் மோத விடும் வகையில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியிருக்கிறார்.
கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிப்பது என்பது தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையாகும். இதை எந்த அரசாங்கங்களாலும் தடுத்து தட்டிப் பறித்துவிட முடியாது.
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தமிழக மீனவர்களை சுட்டுப் படுகொலை செய்வேன் என்று கொக்கரித்தபோது மிகக் கடுமையாக இந்திய மத்திய அரசு கண்டித்திருக்க வேண்டும்.
இதனால் தற்போது இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவும் தமிழக மீனவர்களை கைது செய்வோம்- படகுகளை பறிமுதல் செய்வோம் என்று மிரட்டுகிறார்.
இலங்கை அதிபரின் இந்த ஆணவப் பேச்சுக்கு இந்திய மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசும் மத்திய அரசுக்கு மிகக் கடுமையான அழுத்தங்களைக் கொண்டு இலங்கைக்கு வன்மையான கண்டனத்தை தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கச்சதீவை மீளப்பெற இந்திய மத்திய அரசு ஆவணம் செய்ய வேண்டும்: தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள்
» எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்: நடிகை ரோஜா பரபரப்பு பேட்டி
» முஸ்லீம்களுக்கு மறைமுகமாக குறி வைக்கும் மோடி: அல்கொய்தா விடுத்த கொலை மிரட்டல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum