Top posting users this month
No user |
Similar topics
மனித எலும்புக்கூடுகளால் நிறைந்த மர்ம ஏரி
Page 1 of 1

இமயமலைக்கு மிக அருகே மனித எலும்புக்கூடுகள் நிறைந்த மர்ம ஏரி ஒன்று காணப்படுகிறது.
உத்தரகண்ட் மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 16,500 அடி உயரத்தில் “ரூப்குந்த்” என்னும் மர்ம ஏரி அமைந்துள்ளது.
பனிகளால் சூழப்பட்ட, 2 மீட்டர் ஆழம் கொண்ட இந்த ஏரியில், சுமார் 600க்கும் மேல்பட்ட மனிதர்களின் எலும்புக்கூடுகள் உள்ளதாக கூறப்படுகிறது.
1942ம் ஆண்டு ஒரு பிரிட்டிஷ் காட்டுப் பாதுகாவலர் ஒருவர் அந்த ஏரியில் எலும்புக் கூடுகள் இருப்பதை கண்டறிந்து தெரிவித்துள்ளார்.
பின்னர் பனிக்காலத்தை விட கோடைக்காலத்தில் பனி உருகத்தொடங்கிய போதுதான் அதன் உண்மை நிலவரம் அனைவருக்கும் தெரியவந்துள்ளது.
ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் இதனைப் பற்றி பல கருத்துக்கள் கூறப்பட்டு வந்தாலும் 9ம் நூற்றாண்டிற்கு முன்பிலிருந்தே இவை இங்கு கிடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த எலும்புகளை ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி குழுவினர் ஆராய்ந்த போது அது 850ம் வருடத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என தெரிவித்தாலும் எதுவும் உறுதியாக தெரியவில்லை.
டி.என்.ஏ. சான்றுகளின்படி, அவர்கள் ஒரே குடும்பம் அல்லது நெருங்கிய குழுக்களைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று ஊகிக்கப்பட்டதோடு, அதே இடத்தில் காணப்படும் மூங்கிலால் செய்யப்பட்ட தடிகள், வளையங்கள் மற்றும் ஈட்டிகள் அவர்கள் அங்கு வாழ்ந்ததை உறுதி செய்கிறது.
மேலும் அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக தலையில் அடிபட்டு இறந்துள்ளனர் எனவும் கண்டறியப்பட்டுள்ளதால், அந்தக் காலகட்டத்தில் பந்து அளவிலான பனிக்கட்டிகள் நிறைந்த பனிமழையால் அவர்கள் இறந்திருக்க வேண்டும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் ஊகித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 28வது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழு அங்கு கூடியிருக்கும் பல வெளிநாட்டமைச்சர்கள், இராஜதந்திரிகள், மனித உரிமைகள் நிபுணர்கள் மற்ற
» மர்மம் நிறைந்த வர்மக்கலை
» அற்புதங்கள் நிறைந்த அபூர்வக் கோயில்கள்
» மர்மம் நிறைந்த வர்மக்கலை
» அற்புதங்கள் நிறைந்த அபூர்வக் கோயில்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum