Top posting users this month
No user |
Similar topics
வடமாகாண கால்நடை வைத்திய அலுவலகங்களின் பயன்பாட்டுக்கென புதிய வாகனங்கள் கையளிப்பு!
Page 1 of 1

வடமாகாண கால்நடை வைத்திய அலுவலகங்களின் பயன்பாட்டுக்கெனப் புதிய வாகனங்களை நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்று நடைபெற்ற வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு கால்நடை வைத்திய அதிகாரிகளிடம் கையளித்துள்ளார்.
வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சுக்குட்பட்ட கால்நடை அபிவிருத்திச் சுகாதாரத் திணைக்களங்களில் வாகனங்களுக்குப் பற்றாக்குறைவு நிலவி வருகின்றது. இதனால், கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் குறித்து முறைப்பாடுகள் செய்தாலும் வைத்திய அதிகாரிகளினால் உரிய நேரத்துக்கு முறைப்பாட்டாளர்களின் வீடுகளுக்குச் சென்று கால்நடைகளுக்குச் சிகிச்சை வழங்க முடியாதுள்ளது.
இவற்றைக் கருத்திற் கொண்டு வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சு மத்திய கால்நடை அபிவிருத்தி அமைச்சிடம் வாகனங்கள் கேட்டு விண்ணப்பித்திருந்தது. இதையடுத்து மத்திய கால்நடை அபிவிருத்தி அமைச்சு மிற்சுபிசி ரக வாகனங்கள் எட்டினை வடமாகாண அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளது.
மத்திய அமைச்சால் வழங்கப்பட்டுள்ள இவ் எட்டு வாகனங்களில் ஏழு வாகனங்கள் வேலணை, மருதங்கேணி, சாவகச்சேரி, பூநகரி, கிளிநொச்சி, ஒட்டுசுட்டான், மடு ஆகிய பிரதேசங்களுக்குரிய கால்நடை வைத்தியர் அலுவலகங்களுக்கும் மற்றும் ஒரு வாகனம் வவுனியாவில் உள்ள கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் அலுவலகத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ் வாகனங்கள் குறிப்பிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த வைத்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
வாகனங்களைக் கையளிக்கும் நிகழ்ச்சியில் வடக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சர் பொ.ஐங்கரநேசனோடு, வடமாகாண சபை உறுப்பினர்கள் விந்தன் கனகரத்தினம், அ.பரஞ்சோதி, பிரதம செயலாளர் அ.பத்திநாதன் அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் சி.வசீகரன் ஆகியோரோடு கால்நடை வைத்தியர்களும், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தார்கள்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கிழக்கு மாகாண சபை புதிய உறுப்பினர் அருண சிறிசேன ஆவணங்களை தவிசாளரிடம் கையளிப்பு
» வில்பத்து அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
» இராணுவ கனரக வாகனங்கள் தயார் நிலையில்!
» வில்பத்து அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
» இராணுவ கனரக வாகனங்கள் தயார் நிலையில்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum