Top posting users this month
No user |
Similar topics
எனக்கு முதலிரவே நடக்கவில்லை: கலெக்டரிடம் புகார் கொடுத்த விவசாயி
Page 1 of 1

சேலம் மாவட்டத்தில் விவசாயி ஒருவர், தனக்கு இதுவரை முதலிரவே நடக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பெரிய கிருஷ்ணாபுரம் மத்தூர் வடக்குகாடு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன்.
இவர் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு சென்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, எனக்கும் ஆத்தூர் அருகே உள்ள சார்வாய்புதூரை சேர்ந்த ரங்கநாதன் என்பவரது மகள் சோலையம்மாள் (28) என்பவருக்கும் கடந்த 15.11.2013 அன்று திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்ததும் சோலையம்மாளை எங்கள் வீட்டிற்கு முறைப்படி அழைத்து வந்தோம். அன்றைய தினம் நடக்க வேண்டிய சாந்திமுகூர்த்தம் எங்களுக்குள் நடக்கவில்லை.
மேலும் சோலையம்மாள் யாரிடமும் பேசாமல் இருந்தார். அவருக்கு சமைக்கவும் தெரியவில்லை. தாம்பத்ய உறவு பற்றிய எந்த விவரமும் தெரியாமல் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார்.
இதையடுத்து திருமணம் முடிந்து 3 நாட்கள் மட்டுமே வீட்டில் இருந்து விட்டு சோலையம்மாள் அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
அந்த நேரத்தில் எனது தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் நாங்கள் மருத்துவமனையில் வைத்து அவரை கவனித்து கொண்டோம். பின்னர் மீண்டும் சென்று சோலையம்மாளை அழைத்து வந்தேன்.
அப்போதும் 3 நாட்கள் மட்டுமே இருந்து விட்டு மீண்டும் சென்று விட்டார். எங்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில் பெண் வீட்டார் அடிக்கடி ரூ. 5 லட்சம், ரூ. 10 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.
நான் விவாகரத்து கேட்டு பத்திரத்தில் கையெழுத்து போட சொன்னால் மிரட்டுகிறார்கள். எனவே துரித நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு தாருங்கள்.
திருமணமாகி ஒன்றரை ஆண்டு ஆகியும் எங்களுக்குள் முதரலிவு நடக்கவில்லை என்றும் சோலையம்மாள் எனக்கு ஒரு டீ கூட போட்டு தராத நிலையில் எப்படி நான் ரூ. 5 லட்சம் கொடுக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» என்னை தற்கொலைக்கு அனுமதியுங்கள்! கலெக்டரிடம் மனு கொடுத்த பெண்
» நித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் மர்ம மரணம்! புகார் கொடுத்த தந்தை
» சிறுமி பலாத்கார வழக்கில் திருப்பம்: புகார் கொடுத்த அத்தை 16 வயது மகனுடன் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum