Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


27 வருடங்களாக நீதிமன்றுக்கு சமூகமளிக்க தவறிய பெண் விளக்கமறியலில்

Go down

27 வருடங்களாக நீதிமன்றுக்கு சமூகமளிக்க தவறிய பெண் விளக்கமறியலில் Empty 27 வருடங்களாக நீதிமன்றுக்கு சமூகமளிக்க தவறிய பெண் விளக்கமறியலில்

Post by oviya Tue Jun 16, 2015 2:59 pm

ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய வழக்கில் 27 வருடங்களாக நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காத பெண் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.



அவரை நீர்கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் பணித்துள்ளார்.

பொலிகண்டியைச் சேர்ந்த குறித்த பெண் 1988 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமான நிலையத்தின் ஊடாக சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினை கடத்தி வந்தபோது விமான நிலைய சுங்க பிரிவினரிடம் பிடிபட்டுள்ளார்.

இவருக்கு எதிராக நீர்கொழும்பு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் பிணையில் வெளிவந்த இவர் கடந்த 27 வருடங்களாக வழக்குகளுக்கு சமூகமளிக்காமல் இருந்து வந்துள்ளார்.

இதனையடுத்து இவருக்கு எதிராக பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த சந்தேக நபரை பொலிகண்டியில் வைத்துக் கைது செய்த பொலிஸார் நேற்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

வழக்கை விசாரித்த நீதவான் மா.கணேசராசா அவரை நாளை புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அதனை அடுத்து நீர்கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிடடுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum