Top posting users this month
No user |
Similar topics
இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் நிவாரணங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை: எதிர்க்கட்சித் தலைவர்
Page 1 of 1

முன்னைய வரவு செலவுத் திட்டத்தில் சிறிய மாற்றங்கள் செய்தே இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிவாரணங்களுக்காக போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதை நாம் எதிர்க்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்க்கட்சி ஆதரவு வழங்கும் எனவும் கூறினார்.
இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், மக்களுக்கும் அரசாங்க ஊழியர்களுக்கும் நிவாரணம் கிடைப்பதை நாம் எதிர்க்கவில்லை. அதனை வரவேற்கிறோம். ஆனால் எதிர்க் கட்சியின் அனுமதியின்றி இந்த வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியாது. எமது ஆதரவின் மூலமே இந்த நிவாரணங்கள் மக்களை சென்றடையும். எந்த திட்டத்திற்கு நாம் ஆதரவு வழங்கினாலும் விமர்சன ரீதியான ஆதரவையே வழங்குவோம்.
இதிலுள்ள விடயங்கள் எவ்வளவு தூரம் யதார்த்தமானது என்ற பிரச்சினை காணப்படுகிறது நிவாரணம் வழங்குவதற்கு ஒதுக்கிய பணம் போதுமானதா என்ற சிக்கல்கள் காணப்படுகின்றன. வருடாந்தம் எமது நாட்டில் 3 இலட்சத்து 60 ஆயிரம் முதல் 4 இலட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. கர்ப்பிணி தாய்மார்களுக்கு வருடாந்தம் 20 ஆயிரம் ரூபா வழங்க ரூபா 8 கோடி தேவை ஆனால் ஒரு கோடி ரூபாவே இதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கசினோ சூதாட்டத்தை முற்றாக நிறுத்துவதாக கூறினாலும் கசினோவுக்கு விசேட வரி இடப்பட்டுள்ளது. இதனூடாக கசினோவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கசினோ சூதாட்டம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கை என்ன என்பதை வெளியிட வேண்டும். மதுபான உற்பத்திக்கு பாரிய வரி அறவிட முடிவு செய்யப்பட்டதினூடாக சிறிய மதுசார உற்பத்திகளை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பாரிய உற்பத்தியாளர்களின் ஏகபோக உரிமைக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. மாளிகை வரி தொடர்பில் தெளிவான முறைமை முன்வைக்கப்படவில்லை.
நெல் கொள்வனவிற்கான உத்தரவாத விலை 50 ரூபாவாக உயர்த்தப்பட்டாலும் இதற்கான முறைமை எதுவும் தயாரிக்கப்பட்டுள்ளதா? கோதுமை விலை குறைக்கப்பட்டதால் உள்நாட்டு விவசாயம் பாதிக்கப்படும். கடந்த காலத்தில் அரிசி பாவனை அதிகரித்திருந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் சலுகைகள் ஒரே பார்வையில்!
» மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க இடைக்கால வரவு செலவுத் திட்டம்!
» இடைக்கால வரவு செலவுத் திட்டம்! 13 அத்தியாவசியப் பொருட்கள் விலை குறைப்பு- 10,000 ரூபாய் சம்பள உயர்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum