Top posting users this month
No user |
Similar topics
இடைக்கால வரவு செலவுத் திட்டம்! 13 அத்தியாவசியப் பொருட்கள் விலை குறைப்பு- 10,000 ரூபாய் சம்பள உயர்வு
Page 1 of 1

அரச ஊழியர்களுக்கான சம்பளம் 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
அரச ஊழியர்கள் தற்போது பெற்று வரும் சம்பளம் அவர்களது வாழ்க்கைத் தர முன்னேற்றத்திற்கு போதுமானதாக இல்லை என்பதால் அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவால் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை உரையாற்றும் போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கு பெப்ரவரி மாதம் 5000 ரூபாவும் ஜூன் மாதம் மிகுதி 5000 ரூபாவும் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 47% சம்பள அதிகரிப்பு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுவதாக அவர் அறிவித்தார்.
இதேவேளை, தனியார் துறை ஊழியர்களின் சம்பளங்களை உயர்த்துமாறு தனியார்துறை நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தைப் போன்று இந்த அரசாங்கம் தனியார் துறை முயற்சியான்மையாளர்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக்கப் போவதில்லை எனவும் அந்த நலன்களை ஊழியர்களுக்கு வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி அலுவலகத்தின் கடந்த கால செலவுகள் 2009ம் ஆண்டு 634 கோடி ரூபாய், 2010ம் ஆண்டு 756 கோடி ரூபாய், 2011ம் ஆண்டு 5063 கோடி ரூபாய், 2012ம் ஆண்டு 5936 கோடி ரூபாய், 2013ம் ஆண்டு 8244 கோடி ரூபாய், 2014ம் ஆண்டு 10,494 கோடி ரூபாவாகவும் காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 2015ம் ஆண்டுக்காக 9593 கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், பின் மைத்திரிபால சிறிசேன அரசால் அது 256 கோடியாக குறைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று நள்ளிரவு தொடக்கம் 12.5 கிலோ கேஸ் சிலின்டர் விலை 300 ரூபாவால் குறைக்கப்படும் எனவும் அதன்படி 1596 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என்றும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.
இலங்கையின் கல்வித் துறைக்கு தேசிய வருமானத்தில் 6% நிதி ஒதுக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
மண்ணெண்னை லீட்டருக்கு மேலும் 6 ரூபா குறைக்கப்படும் என்றும் அதன்படி 59 ரூபாவிற்கு மண்ணெண்னை ஒரு லீட்டர் கொள்வனவு செய்ய முடியும் என்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.
ஏப்ரல் மாதம் தொடக்கம் ஓய்வூதியம் 1000 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் 20,000 கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் வங்கிகளில் பெற்ற கடனில் 50% குறைப்பு செய்யப்படும் என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
வரவு செலவுத்திட்டத்தில் மேலும்....
விவசாயிகளின் கடனில் 50 வீதம் இரத்துச் செய்யப்படும்
சிரேஷ்ட பிரஜைகள் வர்த்தக வங்கிகளில் வைப்புச் செய்துள்ள நிரந்த வைப்புகளுக்கான வட்டி 15 வீதமாக அதிகரிக்கப்படும்.
எரிவாயுவின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது
எரிவாயுவின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 1596 ரூபாவாகும். அண்மையில் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தின் நூறு நாள் திட்டத்திற்கு அமைய மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
சீனி கோதுமை மா பாண் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது
சீனி கோதுமை மா பாண் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக 2015ம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றி வரும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சீனியின் ஒரு கிலோவின் விலை 10 ரூபாவினாலும் கோதுமை மா ஒரு கிலோ கிராமின் விலை 12.5 ரூபாவினாலும் 400 கிராம் எடையுடைய பால் மாவின் விலை 100 ரூபாவினாலும், பயறு ஒரு கிலோவின் விலை 40 ரூபாவினாலும், டின் மீனின் விலை 60 ரூபாவினாலும் உழுந்து ஒரு கிலோவின் விலை 60 ரூபாவினாலும் மாசி ஒரு கிலோ கிராமின் விலை 100 ரூபாவினாலும் காய்ந்த மிளகாயின் விலை 25 ரூபாவினாலும் குறைக்கப்பட உள்ளது.
இவ்வாறு பொருட்களுக்கான விலையை குறைப்பதனால் அரசாங்கத்தின் வரி வருமானம் குறைவடைகின்றது. எனினும் மக்களுக்கு நலன்களை வழங்கும் நோக்கில் இவ்வாறு சலுகைகள் நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன.
பத்து பொருட்களின் விலைகளையே குறைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தோம். எனினும் 13 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு: நிதியமைச்சர்
» இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் சலுகைகள் ஒரே பார்வையில்!
» மக்களை தோற்கடித்து வரவு செலவுத் திட்டம் வெற்றி! முன்னிலை சோசலிஷக் கட்சி குற்றச்சாட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum