Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இனப்படுகொலை அரசை உலக நீதியின் முன் நிறுத்தக் கோரி ஐ.நா நோக்கி விடுதலைச்சுடர் போராட்டம்

Go down

இனப்படுகொலை அரசை உலக நீதியின் முன் நிறுத்தக் கோரி ஐ.நா நோக்கி விடுதலைச்சுடர் போராட்டம் Empty இனப்படுகொலை அரசை உலக நீதியின் முன் நிறுத்தக் கோரி ஐ.நா நோக்கி விடுதலைச்சுடர் போராட்டம்

Post by oviya Thu Feb 05, 2015 12:58 pm

பிரித்தானியாவிலிருந்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கி செல்லும் விடுதலைச்சுடர் போராட்டம் நேற்று புதன்கிழமை மாலை 4.00மணிக்கு, இலக்கம் 10,DOWNING STREET முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.
பிரித்தானியா இலங்கைக்கு விடுதலை வழங்கிய 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் நாளிலிருந்து, ஈழத்தமிழினம் பேரினவாத சிங்கள அரசின் திட்டமிட்ட இனக்கருவறுப்பால் சிதைக்கப்பட்டு வருகின்றது.

அரச பயங்கரவாதத்தால் தமிழினத்தை கருவறுக்கும் சிறீலங்கா அரசை உலகநீதியின் முன் நிறுத்தக் கோரியும், தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி ஆகியவற்றை அங்கீகரிக்க வேண்டும், தமிழ் மக்கள் தமது அரசியல் பெருவிருப்புகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் தமிழீழத்திலும், புலம்பெயர்நாடுகளிலும் சர்வசனவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் உட்பட ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

லண்டனில் நேற்று ஆரம்பமான இப்போராட்டம் வரும் பெப்ரவரி திங்கள் 14ஆம் நாள் வரை லண்டனில் பல பகுதிகளிலும் மற்றும் லண்டன் புறநகர்ப்பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட உள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்த விடுதலைச்சுடர் போராட்டம் பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஜேர்மனி ஊடாக, மார்ச் திங்கள் 16ஆம் நாள் சுவிஸ் ஜெனீவா ஐக்கியநாடுகள் சபை முன்பாக நடைபெற உள்ள மாபெரும் கொட்டொலிப் போராட்டத்துடன் இணைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இக்கவனயீர்ப்புப் போராட்டத்தின் முதல்நாளான இன்று பெப்ரவரி 4ஆம் நாள் கணிசமான அளவில் மக்கள் கலந்து கொண்டனர்.

மாலை 4.00மணியளவில் ஆரம்பமான இப்போராட்டத்தில்,

Srilanka’s LLRC Report is the Blue Print For Genocide of Eelam, Tamil Nation, Our Peaceful Campaigns For Free TamilEelam are not Terrorism, TamilEelam is the only Solution, Tamils demand referendum என்ற பதாதைகள் உட்பட பல பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் உரத்த குரல்களில் கொட்டொலிகளை எழுப்பினர்.

இதன்போது இன்று சிறீலங்காவின் சுதந்திரதின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் உருவப்படங்களும் போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களால் ஆவேசத்துடன் கொழுத்தி எரிக்கப்பட்டது.

1972ஆம் ஆண்டிற்குப் பின்னர் தமிழர்கள் கறுப்புப்பட்டி அணிந்து துக்கநாளாகக் கடைப்பிடிக்கும் சிறீலங்கா சிங்கள அரசின் சுதந்திரநாள் நிகழ்ச்சியிலே தமிழ் அரசியல் தலைவர்கள் எனத் தம்மை இனங்காட்டும் சம்பந்தனும் சுமந்திரனும் கலந்து கொண்டமையானது ஏற்படுத்திய கோபாவேசத்தைப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வெளிப்படுத்தினர்.

சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் மீது மட்டுமன்றி ஏனைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் மக்கள் தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

மாலை 6.00 மணியளவில் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளர் திரு கந்தையா இராஜமனோகரன் அவர்களின் உரையைத் தொடர்ந்து, வடமேற்கு லண்டன் மாவீரர் செயலகப் பொறுப்பாளரும் மாவீரர் 2ஆம் லெப்டினன்ட் பெரியதம்பியின் மகனுமாகிய திரு பிறேம் அவர்கள் விடுதலைச்சுடரை ஏற்றி வைக்க, பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தென்மேற்கு லண்டன் செயற்பாட்டாளர் திரு சிவானந்தம் செல்வக்குமரன் அவர்கள் விடுதலைச்சுடரேந்தி போராட்டத்தை முன்னெடுத்தார்.

தொடர்ந்து விடுதலைச்சுடரேந்திய பேரணி நாடாளுமன்ற சதுக்கத்தை நோக்கி நகர்ந்தது. விடுதலைச்சுடரேந்தி திரு செல்வக்குமரன் நடந்து செல்ல, கொட்டொலிகளை எழுப்பியபடி கைகளில் தமிழீழத் தேசியக்கொடியை ஏந்தியவாறு மக்கள் நடந்து சென்றனர். நாடாளுமன்ற சதுக்கத்தை சென்றடைந்த விடுதலைச்சுடரேந்திய நேற்றைய போராட்டம் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளர் திரு கந்தையா இராஜமனோகரன் அவர்களின் உறுதியுரையுடன் நிறைவுக்கு வந்தது.

மீண்டும் இன்று காலை 10 மணிக்கு விடுதலைச்சுடர் போராட்டம் r நாடாளுமன்ற சதுக்கத்திலிருந்து ஆரம்பித்து வடமேற்கு லண்டன் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum