Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஐ.நா நோக்கி விடுதலைச்சுடர் போராட்டம்: 4வது நாள்

Go down

ஐ.நா நோக்கி விடுதலைச்சுடர் போராட்டம்: 4வது நாள் Empty ஐ.நா நோக்கி விடுதலைச்சுடர் போராட்டம்: 4வது நாள்

Post by oviya Sun Feb 08, 2015 11:06 am

ஐ.நாவை நோக்கி பிரித்தானியாவிலிருந்து பெப்ரவரித் திங்கள் நான்காம் நாள் ஆரம்பமான விடுதலைச்சுடர் போராட்டம் 4வது நாளாகத் தொடர்கிறது.
சிறீலங்கா இனப்படுகொலை அரசை உலக நீதியின் முன்னிறுத்தவும் தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி ஆகியவற்றை அங்கீகரித்தல், தமிழ் மக்கள் தமது அரசியல் பெருவிருப்புகளை வெளிப்படுத்தக் கூடிய வகையில் தாயகமாகிய புலத்திலும் (தமிழீழத்திலும்) தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் புகலிட நாடுகளிலும் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படல் உட்பட 5 கோரிக்கைகளை முன்வைத்துத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இவ்விடுதலைச்சுடர் போராட்டமானது நேற்று Wembley Park இல் ஆரம்பமானது.

தமிழ் இளையோரமைப்பு உறுப்பினர் கே சதாபாலன் அவர்கள் விடுதலைச்சுடரினையும் சுடர்போராட்டத்திற்கான பிரித்தானிய ஒருங்கிணைப்பாளர் உதயனன் அவர்கள் தமிழீழத் தேசியக் கொடியையும் ஏந்தியவாறு செல்ல, வடமேற்கு லண்டன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் கோபிநாத் நித்தியானந்தம் அதே பகுதி செயற்பாட்டாளர் நவரட்ணசிங்கம் கந்தையா (சின்னராசு) ஆகியோர் நேற்றுக் காலை நேரப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

Lady Margret Road ஊடாக முன்னெடுக்கப்பட்ட காலை நேரப் போராட்டம் மதியம் 12 மணி 30 நிமிடமளவில் Swiss Cottage இல் இடைநிறுத்தப்பட்டது.

இதன்போது liberal Democrat கட்சியைச் சேர்ந்த Brent பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் Ms Sarah Teather , Labour கட்சியைச் சேர்ந்த Hampstead, Kilburn பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் Ms Glenda Jackson ஆகியோரிடமும் மனுக்கள் சேர்ப்பிக்கப்பட்டன.

இப்போராட்டத்தின் நோக்கத்தினை விளக்கிய சிறுவெளியீடுகளும் மக்களிடம் கொடுக்கப்பட்டன.

பிற்பகல் 2.30 அளவில் வடகிழக்கு லண்டன் பகுதி Enfieldல் மீண்டும் ஆரம்பமான விடுதலைச்சுடர் போராட்டத்தின் போது, விடுதலைச்சுடரினை கே. கௌத்தமன் அவர்களும் தமிழீழத் தேசியக்கொடியினை கே.விபுல் அவர்களும் ஏந்தியவாறு செல்ல, வடகிழக்கு லண்டன் மாவீரர் பணிகள் செயலகப் பொறுப்பாளர் பிரேம், அரசியல் பரப்புரை செயற்பாட்டாளர் சசி, முரளி, பேரின்பராசா, வடகிழக்கு லண்டன் ஒருங்கிணைப்பாளர் பகீர், சுடர்போராட்டத்திற்கான பிரித்தானிய ஒருங்கிணைப்பாளர் உதயனன் ஆகியோர் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

Edmondon உட்பட பல இடங்கள் ஊடாகச் சென்று Walthamstrow என்னும் இடத்தில் மாலை 6 மணி 30 நிமிடமளவில் அளவில் நான்காம் நாள் விடுதலைச்சுடர் போராட்டம் நிறைவு பெற்றது.

இப்போராட்டத்தை முன்னெடுக்கும் செயற்பாட்டாளர்களுடன் அவ்வப்பகுதி மக்களும் இணைந்து கொண்டனர்.

Enfield வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர் திரு Nick De Bois, Edmondon நாடாளுமன்ற உறுப்பினர் Andy Love, Walthamstrow நாடாளுமன்ற உறுப்பினர் Ms Stella Creasy ஆகியோரிடம் மனுக்கள் கையளிக்கப்பட்டன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum