Top posting users this month
No user |
Similar topics
100 நாள் திட்டத்திற்கு ஆதரவளிப்பவர்கள் ஷிராணியின் நியமனத்தை எதிர்ப்பது ஏன்? சுமந்திரன் கேள்வி
Page 1 of 1

புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என அனைத்துத் தரப்பும் உறுதியளித்த நிலையில், 94வது விடயமாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஷிராணி பண்டாரநாயக்கவின் நியமனத்தை எதிர்க்கட்சியினர் எதிர்ப்பது ஏன் என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஷிராணி பண்டாரநாயக்க சட்டப்படி பதவியிலிருந்து நீக்கப்படவில்லை. அதேபோல மொஹான் பீரிஸ் முறையாக நியமிக்கப்படவில்லை.
மொஹான் பீரிஸின் நியமனத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தரப்பினர் கவனத்தில் எடுக்கவோ அல்லது அவரை உத்தியோகபூர்வமாக வரவேற்கவோ இல்லை.
குறிப்பாக, ஒட்டுமொத்த நீதித்துறையும் ஷிராணியின் பின் நிற்கின்றது.
அவர் பதவியேற்பதற்கு உயர் நீதிமன்ற வளாகம் வந்தபோது, உயர்நீதிமன்ற நீதியரசர்கள், மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் என அனைவரும் திரண்டிருந்தனர்.
புதிய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் 94 ஆவது விடயமாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஷிராணி பண்டாரநாயக்கவின் நியமனத்தை எதிர்க்கட்சியினர் எதிர்ப்பது ஏன்?
மொஹான் பீரிஸின் நியமனத்தைத் தொடர்ந்து நீதித்துறை மீது மக்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மை காணப்பட்டது.
எனினும், நாட்டில் ஏற்பட்ட மாற்றத்துடன் மேற்படி நிலையும் மாற்றமடைந்தது. அரசமைப்பின் 107 ஆம் உறுப்புரையின் பிரகாரம் பிரதம நீதியரசர் நியமிக்கப்படுகின்றார்.
ஜனாதிபதியின் மேற்படி சிபாரிசுக்கு நாடாளுமன்றப் பேரவை ஒப்புதல் வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஜனாதிபதி தனித்தே நியமித்தால் அத்தகைய நியமனம் தவறாகும். அதேபோல், நீதியரசர் ஒருவரை ஜனாதிபதி தனித்து அகற்றவும் முடியாது.
நீதியரசர் ஒருவரை நீக்குவதற்குத் தேவையான பிரேரணையை நிறைவேற்றி நாடாளுமன்றம் அவருக்கு அனுப்பிவைக்க வேண்டும். இது விடயத்தில் நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் இல்லாவிட்டால் அது செல்லுபடியற்றதாகிவிடும்.
பிரதம நீதியரசரை நியமித்தல், அகற்றல் ஆகிய விவகாரத்தில் மேற்படி நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும். அந்த வகையில், பிரதம நீதியரசராக இருந்த ஷிராணி பண்டாரநாயக்கவை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்படவில்லை.
அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்குத் தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு கோரும் யோசனையே ஒழுங்குப் பத்திரத்தில் இருந்தது. எனவே, ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்குவதற்கான விதிமுறை பின்பற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஆசிரிய உதவியாளர் நியமனத்தை 100 நாள் வேலைத்திட்ட காலத்தில் வழங்க வேண்டும்
» மைத்திரி - பான் கீ மூன் தொலைபேசியில் உரையாடல்! 100 நாள் திட்டத்திற்கு பாராட்டு
» சாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த அற்புத மனிதர்கள் - இன்று கரும்புலிகள் நாள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum