Top posting users this month
No user |
Similar topics
மட்டக்களப்பு வாவியில் ஆணின் சடலம் மீட்பு
Page 1 of 1

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பாய்ந்தவர் இன்று சடலமாக மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சடலம் இன்று புதன்கிழமை காலை சீலாமுனை பகுதியில் உள்ள வாவிப்பகுதியில் மிதப்பதை கண்ட அப்பகுதி மீனவர்கள் மட்டக்களப்பு பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட சடலம் அம்பாறை மாவட்டத்தின் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அன்னமலையை சேர்ந்த நிரஞ்சன் நோனிஸ் (26வயது) ஒரு பிள்ளையின் தந்தையென பொலிஸார் தெரிவித்தனர்.
பெரும்பான்மையினத்தை சேர்ந்த இவர் அன்னமலையில் தமிழ் யுவதி ஒருவரை திருமணம் செய்துள்ளதாகவும் ஏறாவூர் பகுதியில் உள்ள அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் கடந்த இரண்டாம் திகதி கல்லடி பாலத்தில் இருந்து குதித்தது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை அடிப்படையில் கடற்படையினரின் உதவியுடன் தேடுதல் நடத்தப்பட்டுவந்தது.
எனினும் சடலம் கண்டுபிடிக்ப்படாத நிலையில் இன்று காலை வாவிக்குள் சடலம் மிதப்பதனைக்கண்ட மீனவர்கள் அதுதொடர்பில் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவந்ததை தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டது.
சடலம் மட்டக்களப்பு போதான வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பாராளுமன்ற வாவியில் ஆணின் சடலம் மீட்பு
» கிரகரி வாவியில் சடலம் மீட்பு
» கிளிநொச்சியில் ஆணின் சடலம் மீட்பு- மின்னல் தாக்கி இளைஞன் பலி
» கிரகரி வாவியில் சடலம் மீட்பு
» கிளிநொச்சியில் ஆணின் சடலம் மீட்பு- மின்னல் தாக்கி இளைஞன் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum