Top posting users this month
No user |
Similar topics
சரத் பொன்சேகா 6 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்?
Page 1 of 1

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்வரும் 6 ஆம் திகதி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்வார் என நாடாளுமன்றத்தின் உட்தரப்பு வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபாநாயகரின் ஆலோசனைக்கு அமைய நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய ராஜபக்ச அரசாங்கத்தினால், சரத் பொன்சேகாவிடம் இருந்து பறிக்கப்பட்ட குடியுரிமை, இராணுவ பதவிப்பட்டங்கள், ஓய்வூதியம் என்பன அவருக்கு திரும்ப வழங்கப்பட்டன.
சரத் பொன்சேகாவை சகல குற்றச்சாட்டுக்களிலும் இருந்து ஜனாதிபதி விடுதலை செய்தார்.
ஜனநாயக தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த கெட்டகொட பதவியை ராஜினாமா செய்ய உள்ளதுடன் அந்த இடத்திற்கு சரத் பொன்சேகா நியமிக்கப்பட உள்ளார்.
2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜனநாயக தேசியக் கூட்டணியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட சரத் பொன்சேகா 98 ஆயிரம் வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
வெள்ளைக் கொடி வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வெறுமனே நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள மகிந்தவுக்கு ஏன் இத்தனை பாதுகாப்பு: ஜனாதிபதி சீற்றம்
» பீல்ட் மார்சலாக தரம் உயர்த்தப்பட்டார் சரத் பொன்சேகா
» மீண்டும் யுத்தம் இடம்பெறாது: சரத் பொன்சேகா
» பீல்ட் மார்சலாக தரம் உயர்த்தப்பட்டார் சரத் பொன்சேகா
» மீண்டும் யுத்தம் இடம்பெறாது: சரத் பொன்சேகா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum