Top posting users this month
No user |
Similar topics
திருகோணமலையில் காணாமற்போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!
Page 1 of 1

திருகோணமலையில் காணாமல் போனோரின் உறவுகள் இன்று காலை 10 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
திருகோணமலை, இந்து கலாச்சார மண்டபத்துக்கு முன்னால் உள்ள விளையாட்டு மைதானத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் உறவுகளை மீட்டுத் தருமாறு இதன்போது கோரிக்கை விடுத்தனர்.
இந்நிகழ்வினை நாங்கள் என்ற அமைப்பினரும், கடத்தப்பட்டோர் காணாமல் போனோர் உறவுகளின் அமைப்பும், திருகோணமலை அமரா குடும்ப தலைமை தாங்கும் பெண்கள் ஒன்றியமும், திருகோணமலை மாவட்ட பெண்கள் சமாஜம ஒன்றியமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
மூதூர், குச்சவெளி, தம்பலகாமம், கிண்ணியா, வெருகல், பட்டினமும் சூழலும் ஆகிய பிரதேசங்களிலிருந்து தமது உறவுகளை தேடும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இவ்வார்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜனார்த்தனன், உள்ளூராட்சி மன்ற நகரசபை தலைவர் செல்வராசா மற்றும் உறுப்பினர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், பல்கலைகழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது தம்மிடம் ஏற்கனவே இருந்த 200 க்கும் மேற்பட்ட கடத்தப்பட்டோர், காணாமல் போனோரின் விபரங்கள் மற்றும் இன்றைய தினம் புதிதாக பதியப்பட்டவர்களின் தகவல் அடங்கிய மகஜர் ஒன்றினை தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதியூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் அவ்வமைப்பின் முக்கிய பேச்சாளரொருவர் குறிப்பிட்டார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» திருகோணமலையில் காணாமற்போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!
» அரசியல் கைதிகள் என்ற சொற்பிரயோகமே இருக்கக் கூடாது: வவுனியாவில் காணாமல் போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்
» திருகோணமலையில் வெடிபொருட்கள் மீட்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum