Top posting users this month
No user |
Similar topics
மீரியபெத்தை வீடமைப்பு: புதிய இட தெரிவு குறித்து கலந்தாலோசனை
Page 1 of 1

மீரியபெத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தம் இலங்கை வரலாற்றில் குறிப்பாக மலையக மக்களின் வரலாற்றில் பாரிய அதிர்வை ஏற்படுத்திய ஓர் அனர்த்தமாகும்.
அதில் பாதிப்புற்ற மக்களுக்கு மீளவும் வீடுகளை அமைத்து கொடுக்கும்போது அந்த மக்களின் விருப்பம் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். ஆனால் அண்மையில் அந்த மக்களுக்காக வீடுகளை கட்டுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நிலப்பிரதேசம் தமக்கு பொருத்தமானதல்லவென பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரம் குறித்த பிரதேசத்தில் வீடுகளை அமைப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கைகளை எடுத்துள்ளது எனவே பயனாளிகளான மக்களின் விருப்பத்தையும் தெரிந்து கொண்டு இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு இத்திட்டத்துடன் தொடர்புடைய அரச நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
மீரியபெத்த வீடமைப்பு திட்டம் தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அதிகார சபை தேசிய கட்டிட ஆய்வு மைய பிரதிநிதிகள் கட்டுமான பணியில் ஈடுபடும் இராணுவ பொறியியற் பிரிவு அதிகாரிகள் பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதிய அதிகாரிகள் அமைச்சின் செயலாளர் அமைச்சரின் ஆலோசகர் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஒட்டுமொத்த மலையக மக்களும் சொந்த காணி தனி வீடு என்ற கோரிக்கையின் அடிப்படையிலேயே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு வாக்களித்தனர். ஆனால் மீரியபெத்தையில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருக்கும் வீடமைப்பு முறைமையானது சொந்த காணியோ தனி வீடுட்டு முறையையோ உள்ளடக்கியதாக இல்லை.
இது ஒட்டுமொத்த மலையக மக்களின் கோரிக்கைக்கும் முரணானது. அதேநேரம் பாதிப்புற்ற மீரியபெத்த மக்களின் விருப்பமோ வேண்டுகோள்களோ இடத்தெரிவின்பேர்து கவனம் செலுத்தப்படவில்லை என அறியக்கிடைக்கிறது.
புதிய அரசாங்கம் தோட்ட தொழிலாளர்களுக்கு ஏழு பேர்ச் காணியில் தனி வீடுகளை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் பெருந்தோட்டதுறை அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல ராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் அதனை பெற்று கொடுக்கவும் உறுதியளித்துள்ளனர்.
அதேநேரம் இந்த திட்டத்திற்காக ஏற்கனவே நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அதனையும் வீண்விரயமாக்காத வகையில் தேசிய கட்டிட ஆய்வு மையத்தில் ஆலோசனைகளுடன் மக்களின் விருப்பதிற்கிணங்க புதிய இடத்தை தெரிவு செய்து கட்டுமான பணிகளை துரிதமாக முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இச்சந்திப்பில் கலந்துகொண்ட நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் குறித்த இடம் தேசிய கட்டிட ஆய்வு மையத்தின் அனுமதியுடனேயே பெற்றுக்கொள்ளப்பட்ட போதும் அங்கு வாழும் மக்களின் விருப்பம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதா என்பதை உறுதியாக கூற முடியாது. புதிய இடம் தெரிவு செய்யப்படுமிடத்து அதில் தனி வீடுகளை அமைக்கும் புதிய திட்ட வரைபை வெகு சீக்கிரத்தில் செய்து முடிக்க ஒத்துழைப்போம் என தெரிவித்தார்.
அமைக்கப்படும் வீட்டுத் திட்டமானது தனி வீடாக அமைகின்ற பட்சத்தில் இயற்கை அனத்தம் மற்றும் மின்னொழுக்கு போன்ற காரணங்களினால் ஏற்படகூடிய அழிவுகளை குறைக்க கூடியதாக இருக்கும். ஆனால் ஏற்கனவே மாடி வீடு திட்டத்துக்கென தெரிவு செய்யப்பட்ட இடம் மண்சரிவு ஆபத்துக்கு உரியது அல்ல என்பதை மட்டுமே எம்மால் உறுதி செய்ய கூடியதாக இருந்தது. புதிய இடம் தெரிவு செய்யப்படுமிடத்து அதன் பாதுகாப்பு தன்மை தொடர்பில் உறுதிபடுத்துவதற்கும் தாம் துரிதமாக ஒத்துழைப்போம் என தேசிய கட்டிட ஆய்வு மையத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.
மீரியபெத்தை தோட்ட முகாமையாளர் மீரியபெத்தையில் வீடமைக்க காணித் தெரிவில் தாம் ஒத்துழைப்பு வழங்க தயாராகவிருப்பதாக தெரிவித்தார்.
முடிவாக இந்தவாரத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் தலைமையில் பெருந்தோட்ட ராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் உட்பட நகர அபிவிருத்தி அதிகார சபை தேசிய கட்டிட ஆய்வு மையம் பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியம் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் மீரியபெத்தைக்கு விஜயம் செய்து பாதிப்புற்ற மக்களை சந்தித்து அவர்களின் விருப்பத்தை கேட்டறிவதுடன் அதேநேரம் பாதுகாப்பான இடபிரதேசம் ஒன்றை தெரிவு செய்து பாதிப்புற்ற மக்களுக்கு தனிவீடுகளை பெற்று கொடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரித்தானியாவுக்கான புதிய தூதுவர் தெரிவு
» புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதா என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை: ஜே.வி.பி.
» அரசாங்கத்தின் குறைபாடுகள் குறித்து புதிய ஜனாதிபதியிடமும் தெரிவித்துள்ளேன்: ஹிருனிகா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum