Top posting users this month
No user |
Similar topics
வரம் பெற்ற வாழ்க்கை நெப்போலியன் ஹில்லின் கதை
Page 1 of 1
வரம் பெற்ற வாழ்க்கை நெப்போலியன் ஹில்லின் கதை
வரம் பெற்ற வாழ்க்கை நெப்போலியன் ஹில்லின் கதை
விலைரூ.200
ஆசிரியர் : அகிலன்
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்
பகுதி: கதைகள்
ISBN எண்: -
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
‘மனிதர்கள் பிறக்கும்போது, தங்கள் கையில் இரண்டு உறைகளுடன் பிறக்கின்றனர். ஓர் உறையில் மனதின் திறனை உணர்ந்து பயன்படுத்தாதற்கான தண்டனைகள் இருக்கின்றன. மற்றொரு உறையில் மனதின் திறனை உணர்ந்து பயன்படுத்துவதற்கான பரிசுகள் இருக்கின்றன (பக்.290) என்ற நெப்போலியன் ஹில்லின் வரலாற்றைத் தமிழில் படைத்துள்ள நூலாசிரியர், மூல நூலைப் படிக்கத் தூண்டுமளவுக்குச் சிறப்பாகப் படைத்துள்ளார்.
‘மனம் தரும் பணம்’ என்ற நூல் வாயிலாக, உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர், 87 ஆண்டுகள் வரை வாழ்ந்து எண்ணற்ற வெற்றிக்கு வழிகாட்டும் நூல்கள் மூலம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைப் பாதையை மடை மாற்றம் செய்து செல்வ வளங்கொழிக்கச் செய்தவர்.
சமூக விரோத செயல்களில் சிறுவயதில் ஈடுபட்டிருந்த ஹில், ‘நீ துப்பாக்கியைப் போல் தட்டச்சு இயந்திரத்தையும் பயன்படுத்தக் கற்றுக் கொண்டால் பணக்காரனாக, புகழ் பெற்றவனாக ஆவாய். உலகம் முழுவதும் அறியப்படுவாய் (பக்.22) என்ற சிற்றன்னை மார்த்தாவின் அறிவுரையால் மனம் மாறி, ‘ஒரு மனிதனின் மனத்தில் கருக்கொண்டு, ஒரு நாள் உருக்கொள்ளும்’ என்ற சொற்றொடரை பின்னாளில் உலகம் வியக்க பிரபலமாக்கி வாழ்ந்து காட்டினார். முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய வாழ்க்கை வரலாற்று நூல் இது.
பின்னலூரான்
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum