Top posting users this month
No user |
நெப்போலியன்
Page 1 of 1
நெப்போலியன்
ஃப்ளேக்கி பஃப் பேஃஸ்ட்ரி (flaky puff pastry) - ஒரு பாக்கெட் (4 ஷீட்ஸ்)
விப்பிங் க்ரீம் (whipping cream) - 300 மி.லி
சோர் க்ரீம் (sour cream) - 125 கிராம்
ஸ்வீட்டன்ட் கண்டென்ஸ்ட் மில்க் - 265 கிராம் (2/3 of the 395g can)
முதலில் மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பேஸ்ட்ரி ஷீட்களை அரை மணி நேரம் முன்பாக ஃப்ரீஸரில் இருந்து வெளியே எடுத்து வைக்கவும். விப்பிங் க்ரீமை எலெக்ட்ரிக் பீட்டரால் இறுக்கமாக வருமாறு நன்கு அடித்து எடுக்கவும்.
சவர் க்ரீமை முட்கரண்டியால் ஒரு முறை மசித்து விட்டு கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்துக் குழைக்கவும். அதிக நேரம் குழைக்க வேண்டாம். இதனை க்ரீம் உள்ள பாத்திரத்தில் கொட்டி மெதுவாகக் குழைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
அவனை 200°C யில் முற்சூடு செய்யவும். மேசையில் மாவு தூவிக் கொண்டு பிரித்து எடுத்த பேஸ்ட்ரி ஷீட்களை மெல்லிதாகத் தேய்த்து வைக்கவும்.
அவன் சூடாகியதும் பேஸ்ட்ரி ஷீட்களை தனித்தனியே பேக்கிங் தட்டுகளில் வைத்து பொன்னிறமாக பேக் செய்து எடுக்கவும். பேக் செய்த ஷீட்களை நன்கு ஆற விடவும்.
ஆறிய பேஸ்ட்ரி ஷீட்கள் அனைத்தையும் ஒரே அளவாக வருமாறு ட்ரிம் செய்து வைக்கவும். வெட்டிய துகள்களை வேறாக எடுத்து வைக்கவும்.
குளிர்ந்து சற்று இறுகி இருக்கும் க்ரீமை, 4 பங்குகளாகப் பிரித்து வைக்கவும். ஒரு பேஸ்ட்ரி ஷீட்டில் ஒரு பங்கு க்ரீமைப் பூசவும்.
அதன் மேல் அடுத்த பேஸ்ட்ரி ஷீட்டை வைக்கவும். இப்படி க்ரீமும் பேஸ்ட்ரியுமாக மாறி மாறி வைத்து அடுக்க வேண்டும்.
இறுதியாக மேலே மீதம் இருக்கும் க்ரீமைத் தடவி, ட்ரிம் செய்யும் போது எடுத்து வைத்துள்ள பேஸ்ட்ரி துகள்களைத் தூவி அலங்கரிக்கவும்.
கத்தியால் விரும்பிய அளவு துண்டுகளாக நறுக்கி பரிமாறவும். மிகவும் சுவையாக இருந்தாலும் கலோரிப் பெறுமானம் மிகவும் அதிகமான இனிப்பு இது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum