Top posting users this month
No user |
Similar topics
இனரீதியான பிரச்சினை தமிழர்களை பல வழிகளில் பின்னடைய செய்துள்ளது: த.கலையரசன்இனரீதியான பிரச்சினை தமிழர்களை பல வழிகளில் பின்னடைய செய்துள்ளது: த.கலையரசன்
Page 1 of 1

இந்த நாட்டிலே பல துறையில் அரச நியமனங்கள் வழங்கப்பட்டபோது திட்டமிட்ட முறையில் திறமையான தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். அந்தப் பாதிப்பின் விரக்தி தமிழ் மக்களின் மனங்களில் இருந்து இன்னும் அகலவில்லை என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் நேற்று அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதில் ஆசிரிய ஆலோசகர் கே.சங்கரலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அவர் தொடர்ந்து பேசுகையில்,
சமூகத்திலே தற்போது மாற்றங்கள் ஏற்பட்டாலும் கல்வியால் தான் இந்த சமூகத்தை கட்டியெழுப்பவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
எமது சமூகம் கடந்த கலத்தில் ஏனைய சமுகங்களைவிட அனைத்துத்துறைகளிலும் முன்னோடிகளாக இருந்திருக்கிறார்கள். அது இன்று திட்டமிட்டமுறையில் குறைக்கப்பட்டு இருக்கிறது. இன்று இனரீதியான பிரச்சினை தமிழ் மக்களை பல வழிகளில் பின்னடைய செய்திருக்கிறது.
இன்று கிழக்கு மாகாண சபையிலே உறுப்பினர்களாக இருந்தாலும் நாங்கள் பாடசாலை நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டும் என்றால் வலயக்கல்வி பணிப்பாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், ஆளுநரிடம் அனுமதி பெறவேண்டிய நிலை இருந்தது. இது ஆரோக்கியமான நிருவாக நடவடிக்கைக்கு சிறந்ததல்ல.இந்தநாட்டிலே கல்வி நிருவாக சேவையாக இருக்கலாம். பொது நிருவாக சேவையாக இருக்கலாம். ஏனைய உத்தியோகத்தர்களாக இருக்கலாம். அனைத்தும் அடக்குமுறைக்கும் அஜாரகத்திற்கும் உடையதாகவே அரசு முன்னெடுத்து இருந்தது.
அரசியல் ரீதியாக அதிகாரிகள் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டனர்.
வடக்குக் கிழக்கு தமிழர்களின் உரிமைப் பிரச்சினைக்கு சாதகமான பதில் வெளியாகிக்கொண்டிருக்கிறது. 13 வது திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்தக்கூடிய சாதகமான பதிலை புதிய பிரதமர் வெளியிட்டு இருக்கிறார். அவ்வாறு உரிமைப் பிரச்சினை தீர்க்கப்படும் வரை எந்த அமைச்சுப்பதவியையும் கூட்டமைப்பு பெறாது.
கிழக்கு மாகாணத்தில் 40 வீதம் இருந்து கொண்டிருக்கிறோம். 36வீதம் முஸ்லிம்களும் ஏனைய வீதம் சிங்களவர்களும் வாழுகின்றனர். யுத்தத்தினால் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழுகின்றனர் திட்டமிட்ட விகிதாசாரத்தில் தமிழர்கள் திட்டமிட்டு குறைக்கப்பட்டு இருக்கின்றனர்.பல சிக்கல்கள் இருந்தும் இந்த நாட்டு அரசுடன் எச்சந்தப்பத்திலும் இணைந்து செயற்படவில்லை. சிறுபான்மை சமூகத்திற்காக குரல் கொடுக்கும் கட்சியாகவே இருந்துகொண்டிருக்கிறோம்.
2015 ஆண்டு தமிழ்மக்கள் கிழக்கு மாகாணத்தில் ஆட்சியினை நிறுவலாம் என முயற்சித்தபோது முஸ்லிம் காங்கிரஸ் தங்களுக்கு அனைத்தையும் தரவேண்டும் என கேட்கின்றனர். இது எந்தவகையில் நியாயமாகும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தநாட்டிலே இல்லாவிட்டால் சிறுபான்மை சமூகம் இருக்கிறதா என்ற கேள்வி அனைவரிடத்திலும் கேட்கும் நிலை வந்திருக்கும் என தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நல்லாட்சி அரசாங்கம் நாடு திரும்பிய 10 தமிழர்களை கைது செய்துள்ளது: ஜே.டி.எஸ்.
» பரிந்துரை செய்யாதவர்களையும் அமைச்சு இடமாற்றம் செய்துள்ளது: பொலிஸ் மா அதிபர்
» பிரதமர் மோடி தமிழர்களை கைவிட்டு விட்டார்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum