Top posting users this month
No user |
Similar topics
முதலமைச்சர் பதவி தொடர்பில் கிழக்கு மாகாண சபை இன்று கூடுகின்றது- சபை 10ம் திகதி வரை ஒத்திவைப்பு
Page 1 of 1

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவி தொடர்பாக நேற்று கொழும்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.
முஸ்லிம் காங்கிரசின் சிரேஸ்ட பேச்சாளர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கிமிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்று ஒரு இனக்கபாடின்றி முடிவு பெற்றதாகவும் தெரிவித்தார்.
37 உறுப்பினர்களை கொண்டுள்ள கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெற்றுள்ளது. 22 உறுப்பினர்களை கொண்டுள்ளது. மாகாண சபையின் தற்போதைய முதலமைச்சராக அப்துல் மஜிட் செயற்படுகின்றார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் கோங்கிரசின் 7 உறுப்பினர்களும், அமைச்சர் ரிசாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் கோங்கிரசின் 3 உறுப்பினர்களும் ஆளும் தரப்புக்கு ஆதரவளித்து வந்தனர். கடந்த நாட்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மூன்று உறுப்பினர்களும் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த நிலையில், ரிசாட் பதியுதீனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அதரவளித்த நிலையில் அவர்கள் எதிர்தரப்புடன் இணைந்தனர். அதுபோல் அமைச்சர் ரவுப் ஹக்கிம் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த நிலையில் கோங்கிரசின் 7 உறுப்பினர்களும் எதிர் கட்சியுடன் இணைந்தனர்.
இதேவேளை எதிர் கட்சியை பிரதிநிதித்துவபடுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 11 உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் 4 உறுப்பினர்களுக்கு மேலதிகமாக 10 பேர் தற்போதைய நிலையில் எதிர் கட்சியுடன் இணைந்து செயற்படுகின்றனர்.
மாகாண சபையின் ஆட்சி அமைக்கு அதிகாரத்தை எதிர் கட்சி கொண்டுள்ள நிலையில், முதலமைச்சரை நியமிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிற்கும் இடையில் தற்போது பேச்சு வார்த்தை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் பதவியை வழங்குவதற்கு கட்சி உறுப்பினர்கள் ஆயத்தமாக இருப்பதாக மாகாண கல்வி அமைச்சர் விமல் வீர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கிழக்கு மாகாண சபை இன்று கூடுகின்றது.
கிழக்கு மாகாண சபை 10ம் திகதி வரை ஒத்தி வைப்பு
கிழக்கு மாகாணசபை அமர்வு எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.
இன்று காலை கட்சி தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமையவே சபை ஒத்தி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று காலை 8.30மணி தொடக்கம் 9.30மணிவரை நடைபெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தில் எந்தவி தீர்மானங்களும் எடுக்கப்படாத நிலையில் கிழக்கு மாகாணசபை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பதற்கான கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி யாருக்கு?
» தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு! ஊவா மாகாண முதலமைச்சர் பாராட்டு
» ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு நிறைவடைந்தது! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு [ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 05:53.58 AM ] [Photo] ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணை இன்று நிறைவடைவதால் வழக்கின் தீர்ப்பு திகதி இன்று

Permissions in this forum:
You cannot reply to topics in this forum