Top posting users this month
No user |
Similar topics
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தயா கமகேவிற்கு வழங்கப்படக் கூடாது: கூட்டமைப்பு
Page 1 of 1

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தயா கமகேவிற்கு வழங்கப்படக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான தயா கமகேவிற்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டுமென்ற யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த யோசனைத் திட்டத்தை எதிர்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தமிழ் பேசும் ஒருவருக்கே வழங்கப்பட வேண்டும் எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அந்தப் பதவி வழங்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு 11 ஆசனங்கள் உண்டு. முஸ்லிம் காங்கிரஸ் எட்டு ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி நான்கு ஆசனங்களையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இரண்டு ஆசனங்களையும் கொண்டுள்ளன.
இந்த அனைத்து தரப்பினரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்க எடுத்தத் தீர்மானத்தை தொடர்ந்து கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடமிருந்து பறிபோனது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் பதவியை தயா கமகேவிற்கு வழங்கப்பட வேண்டுமென யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் 11 உறுப்பினர்களைக் கொண்ட தமக்கு முதலமைச்சர் பதவியை வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.
முதலமைச்சர் பதவியை யாருக்கு வழங்குவது என்பது குறித்து அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கூடி ஆராய்ந்துள்ளனர்.
இந்த சந்திப்பின் போது இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி யாருக்கு?
» கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் பதவியை கூட்டமைப்பு கோருவதில் தவறில்லை: அரியம் எம். பி
» கிழக்கு மாகாண சபையில் ஐ.ம.சு.கூட்டமைப்பு உறுப்பினர்கள் சதி செய்வார்கள்: அரியம் எம்.பி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum