Top posting users this month
No user |
இன,மத,மொழி வேறுபாடுகளை துறந்து ஒரு மக்களாய் அணிதிரள்வோம்: யு.எல்.எம்.என்.முபீர்
Page 1 of 1

இன,மத,மொழி வேறுபாடுகளைத் துறந்து ஒரு தாய் மக்களாய் அணிதிரண்டு, இந்த ஒற்றுமையினை உறுதிப் படுத்தி உண்மையான சமாதானம் மற்றும் நல்லிணக்கம் மூலம் நிரந்தர அமைதிச் சூழலை உருவாக்கும் பொறுப்பு நாட்டின் தலைவரான ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு உள்ளது என மு.கா கொள்கை பரப்பு செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இனப்பிரச்சினையின் எதிர் பாராத விளைவான உள் நாட்டு யுத்தம் ஈற்றில் கோரமுகங் கொண்டு குடி மக்களை வதம் செய்தது.
முப்பது ஆண்டு கால உள் நாட்டு யுத்தத்தை முடித்து வைத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தின் ரணங்களை சுமந்த மக்களின் மனங்களை மேலும் ரணமாக்கி விட்டார்.யுத்தத்தின் பின்னரான ஐந்து ஆண்டுகளில் நல்லிணக்க செயற்பாடுகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.
இன முரண்பாடுகளால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட உண்மையை கண்டறியும் செயன் முறை, பொது இடத்தில் தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளல். சுதந்திர காணி ஆணைக்குழுக்களுக்கு ஊடாக காணி பிணக்குகளைத் தீர்த்தல், இராணுவ கெடுபிடிகளில் இருந்து மக்களை மீட்டு சிவில் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் செயற்திட்டம், அதிகார கையளிப்பு உள்ளிட்ட எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.
மாறாக நாட்டின் வாழும் இனங்கள் திட்ட மிட்ட அடிப்படையில் பிரிக்கப்பட்டனர். பெரும்பான்மை சிறுபான்மை என்ற பிரிவு நிலை ஊக்கப்படுத்தப்பட்டது. பெருந் தேசியவாதத்தை முன்னிலைப்படுத்தி அதிகாரத்தை அடைய துவேசக்கருத்துக்கள் விதைக்கப்பட்டன.
நாட்டிற்குத் தேவையான நல்லிணக்கத்தை மறந்து மக்களைப் பாதித்து நாட்டைக் குட்டிச் சுவராக்கும் செயற்பாடுகளே அரங்கேறின. இன்று சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து நமது நாட்டுப் பற்றை நிரூபித்து நல்லாட்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
சிங்கள மக்கள் பெரும்பான்மையாகக் கொண்ட பல மாவட்டங்களில் மஹிந்த நிராகரிக்கப்பட்டுள்ளார். கம்பஹா, கொழும்பு, புத்தளம், கண்டி, பதுளை, நுவரலியா, பொலன்னறுவை உள்ளிட்ட சிங்களப் பெரும்பான்மை மாவட்டங்களில் மஹிந்தவின் கொள்கைகள் தோற்றுள்ளன.
சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டில் நல்லாட்சியையும் ஜனநாயகத்தையும் நிறுவியுள்ளனர். இன்று நல்லிணக்கத்தை அனைத்து மக்களும் எதிர் பார்க்கின்றனர். இன,மத,மொழி வேறுபாடுகளைத் துறந்து ஒரு தாய் மக்களாக நம் மக்கள் அணிதிரண்டுள்ளனர்.
இவ்வொற்றுமையை உறுதிப் படுத்தி உண்மையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் எற்படுத்தி நிரந்தர அமைதிச் சூழலை உருவாக்கும் முக்கிய பொறுப்பு நாட்டின் தலைவரான மேதகு ஜனாதிபதி மற்றும்பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் கைகளிலேயே தங்கியுள்ளது என முபீன் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum