Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மைத்திரி அரசுக்கும் தொடரப் போகும் ஜெனீவா சோதனை!

Go down

மைத்திரி அரசுக்கும் தொடரப் போகும் ஜெனீவா சோதனை! Empty மைத்திரி அரசுக்கும் தொடரப் போகும் ஜெனீவா சோதனை!

Post by oviya Sun Jan 11, 2015 1:09 pm

சர்­வ­தேச அரங்கில், ஜனா­தி­பதி தேர்­த­லுக்குப் பிந்­திய இலங்­கையின் எதிர்­காலம் எவ்­வாறு இருக்கும் என்ற வினா இப்­போது எழுந்­தி­ருக்­கி­றது.
இந்தப் பத்தி எழு­தப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் போது, ஜனா­தி­பதி தேர்தல் முடி­வுகள் வெளி­வந்து கொண்­டி­ருந்­தன.

இந்தப் பத்தி அச்­சுக்கு செல்ல முன்­னரே, புதிய ஜனா­தி­ப­தி­யாக மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வா­கி­விட்டார்.

இந்த ஜனா­தி­பதி தேர்தல் முடிவு என்­பது உலகின் பெரும்­பா­லான நாடு­களால் உன்­னிப்­பாக அவ­தா­னிக்­கப்­பட்டு வந்­தது.

போருக்குப் பின்னர், இலங்­கை­யுடன் கொண்­டி­ருந்த சாத­க­மான அல்­லது பாத­க­மான உற­வு­களைக் கருத்தில் கொண்டே, பெரும்­பா­லான நாடு­களின் கவனம் இலங்கை மீது குவிந்­தி­ருந்­தது,

இந்­தி­யாவைப் பொறுத்­த­வ­ரையில் மஹிந்த ராஜ­பக்ச அர­சாங்கம் சீன சார்பு நிலையில் இருந்­த­தை­யிட்டு கவலை கொண்­டி­ருந்­தது, எனவே, அடுத்து யார் பத­விக்கு வருவார் என்ற கவலை அதற்கு இருந்­தது.

சீனாவைப் பொறுத்­த­வ­ரையில், தமது செல்­லப்­பிள்­ளை­யாக இருந்த மஹிந்த ராஜ­பக்ச அர­சாங்கம் வீழ்ச்சி கண்டுவிட்டால், தமது முத­லீ­டு­களின் எதிர்­காலம் கேள்­விக்­கு­றி­யாகி விடுமே என்று கவலை கொண்­டி­ருந்­தது.

அவுஸ்தி­ரே­லி­யாவைப் பொறுத்­த­வ­ரையில், அக­திகள் பட­கு­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வது தொடர்­பாக மஹிந்த ராஜ­பக்ச அர­சாங்­கத்­துடன் கொண்­டுள்ள உறவு தொட­ருமா என்ற அச்­சத்தில் இருந்­தது.

அமெ­ரிக்கா, பிரிட்டன் உள்­ளிட்ட மேற்­கு­லக நாடு­களைப் பொறுத்­த­வ­ரையில், ஆட்சி மாற்றம் ஒன்று நிகழ்ந்தால், பொறுப்­புக்­கூறல் உள்­ளிட்ட மஹிந்த ராஜ­பக்ச அர­சாங்­கத்­துடன் இது­வரை இழு­ப­றிப்­பட்ட விவ­கா­ரங்­க­ளுக்கு சுமு­க­மாக தீர்வு காணலாம் என்று எதிர்­பார்த்­தன.

ஆக, ஒவ்­வொரு நாடும், தமது நலன் அல்­லது இலங்கை தொடர்­பான தமது கொள்­கையின் அடிப்­ப­டையில், சாத­க­மான விட­யங்கள் பறிபோய் விடுமோ, பாத­க­மான நிலை உரு­வாகி விடுமோ என்று அஞ்­சின.
அல்­லது தமக்குச் சாத­க­மான நிலை உரு­வா­கலாம் என்ற எதிர்­பார்ப்பில் இருந்­தன.

இதனால் தான், உல­கத்தின் பல நாடு­களின் கண்கள் இலங்­கையின் ஜனா­தி­பதி தேர்­தலின் மீது குவிந்­தி­ருந்­தன.

இலங்­கையில் ஆட்­சி­மாற்­றத்தை நிகழ்த்த வெளி­நா­டுகள் சதி செய்­வ­தா­கவும், உள்­நாட்டு விவ­கா­ரங்­களில், தலை­யீடு செய்­வ­தா­கவும், மஹிந்த ராஜ­பக்ச அர­சாங்கம் கடு­மை­யான பிர­சா­ரங்­களை முன்­னெடுத்­தி­ருந்தது.

ஆனால், இந்த தேர்­தலில் சர்­வ­தேச சமூகம் அவ்­வ­ள­வாகத் தலை­யீடு செய்­யவோ, தமது கருத்தைத் திணிக்­கவோ முனை­ய­வில்லை என்­பதே உண்மை.

மஹிந்த ராஜ­பக்ச அர­சாங்­கத்தின் சீன சார்புக் கொள்கை மற்றும், மேற்­கு­ல­குடன் முரண்­படும் போக்கு என்­பன ஆட்­சி­மாற்­றத்­துக்கு வெளியில் இருந்து உந்­துதல் கொடுப்­ப­தற்­கான வாய்ப்பு ஒன்றை உரு­வாக்­கி­யி­ருந்­தது உண்­மையே.

சீன சார்புக் கொள்­கையில் அமிழ்ந்து கொண்­டி­ருந்த இலங்­கையை, அதி­லி­ருந்து மீட்டு, தனது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரு­வ­தற்­காக தலை­யீடு செய்ய இந்­தியா முனை­யலாம் என்­ப­தற்­கான வாய்ப்பும் இருந்­தது.

தாம் ஆட்­சிக்கு வந்தால், சீனா­வுடன் செய்து கொள்­ளப்­பட்ட முறை­கே­டான உடன்­பா­டு­களை ரத்துச் செய்யப் போவ­தா­கவும், கொழும்பு துறை­முக நகர அமைப்புத் திட்­ட த்தை கைவிடப் போவ­தா­கவும், மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளிட்டோர் கூறி வந்­தனர்.

எனவே, தனது உற்ற நண்­ப­னாக விளங்­கிய மஹிந்த ராஜ­பக்ச அர­சாங்­கத்தைப் பாது­காக்க, சீனாவும் தலை­யீடு செய்­வ­தற்கு வாய்ப்­புகள் இருந்­தன.

அது­போ­லவே, மேற்­கு­ல­குடன் முரண்­பாட்டை வளர்த்துக் கொண்­டி­ருந்த இலங்கை, ரஷ்யா, சீனா உள்­ளிட்ட வீட்டோ அதி­காரம் கொண்ட நாடு­களின் நிழலில் இருந்து கொண்டு வாலாட்­டு­வதை அந்த நாடுகள் சகி த்துக் கொண்­டி­ருக்கும் என்றும் கருத முடி­யாது.

எனவே, இலங்­கையை வழிக்குக் கொண்டு வர, ஆட்­சி­மாற்­றத்தை ஏற்­ப­டுத்த மேற்­கு­லக நாடுகள் முயற்­சிக்­கலாம் என்ற வாய்ப்பும் இருந்து வந்­தது.

மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் கொள்ள வேண்டும் என்­பது போல, உலகின் ஒரு பகுதி நாடு­க­ளுடன் சரி­யான உற­வு­களை பேணிக் கொள்ள முடி­யாத இலங்­கைக்கு, வெளி­நாட்டு தலை­யீ­டுகள் குறித்த அச்சம் எழுந்­தி­ருந்­ததில் ஆச்­ச­ரி­ய­மில்லை.

ஆனால், மஹிந்த ராஜ­பக்ச அர­சாங்கம் பிர­சாரக் கூட்­டங்­களில் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­தது போன்று, தேர்தல் நட­வ­டிக்­கை­களில் வெளி­நா­டு­களின் தலை­யீ­டுகள் இருக்­க­வே­யில்லை என்றே கூறலாம்.

இந்­தி­யாவைப் பொறுத்­த­வ­ரையில், மஹிந்த ராஜ­பக்ச அர­சாங்­கத்­தை­யிட்டு அது திருப்தி கொள்ள முடி­யா­விட்­டாலும், மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் மீது முழு­மை­யாக நம்­பிக்கை வைப்­ப­தற்கு அது தயா­ராக இருக்­க­வில்லை.

பல்­வேறு முரண்­பா­டான கொள்­கை­களைக் கொண்ட கட்­சி­க­ளுடன் கூட்­டணி வைத்துக் கொண்­டுள்ள அவரால், இந்­தியா எதிர்­பார்க்கும் அனைத்­தையும் நிறை­வேற்றிக் கொள்ள முடி­யுமா என்ற சந்­தேகம் இந்­தி­யா­வுக்கு இருந்­தது.

எனவே, இந்த தேர்­தலில் யாரையும் ஆத­ரிக்­கவோ, யாரையும் விமர்­சனம் செய்­யவோ இந்­தியா தயா­ராக இருக்­க­வில்லை.

பொறு­மை­யாக இருந்து தேர்தல் முடி­வு­களை அறிந்து ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வா­கின்­ற­வ­ருடன் பேசிக் கொள்­ளலாம் என்ற முடிவை எடுத்து விட்­டது.

2010 ஜனா­தி­பதி தேர்­தலில், சரத் பொன்­சே­கா­வுக்கு அமெ­ரிக்கா ஆத­ர­வ­ளிக்க முனைந்து, இரு­த­ரப்பு உற­வு­களில் முரண்­பா­டுகள் நீடித்து வரு­வதை இந்­தியா அறியும். எனவே தான், இலங்­கை­யுடன் எத்­த­கைய நிலை­யிலும் உற­வுகள் குழப்­ப­ம­டைந்து விடக் கூடாது என்­பதில் இந்­தியா மிகக் கவ­ன­மாக இருந்­தது.

அதே­வேளை, மஹிந்த ராஜ­பக்ச அர­சாங்கம் தோல்வி காணக் கூடாது என்று சீனா விரும்­பி­யி­ருந்­தாலும், வெளிப்­ப­டை­யாக அதற்கு ஆத­ரவு தெரி­விக்க சீனா முன்­வ­ர­வில்லை.

அது மஹிந்த ராஜ­பக்சவை எதிர்க்கும் நாடு­களைத் தூண்­டி­விட்­ட­தாக அமைந்து விடும் என்று சீனா கரு­தி­யி­ருக்­கலாம்.

எனினும், மஹிந்த ராஜ­பக்சவின் வெற்­றிக்­காக சீனா இர­க­சி­ய­மான முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருக்­கலாம் என்ற கருத்து உள்­ளது. அதே­வேளை, அமெ­ரிக்­காவோ, பிரித்­தா­னி­யாவோ, மேற்­கு­லக நாடு­களோ தேர்­தலில் தாக்கம் செலுத்தக் கூடிய வகையில் எந்தக் கருத்­தையும் கூற­வில்லை.

காரணம், இலங்­கை­யுடன், மேற்கு நாடுகள் அர­சியல் ரீதி­யாக நல்­லு­றவை கொண்­டி­ருக்­க­வில்லை.

கடந்த முறை சரத் பொன்­சே­காவை அமெ­ரிக்கா வெளிப்­ப­டை­யாக ஆத­ரிக்க முற்­பட்­டமை, பல எதிர்­வி­ளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

அதை­விட, ஆட்சி மாற்­றத்தை விரும்பும் மேற்குலக நாடு­களின் எந்தக் கருத்­தையும், அர­சாங்கம் திரித்துக் கூறி, பிர­சா­ர­மாகப் பயன்­ப­டுத்திக் கொள்ளும் ஆபத்தும் ஏற்­பட்­டி­ருந்­தது. எனவே தான், பிரித்­தா­னியா எதையும் கூற­வில்லை.

அமெ­ரிக்கா கூட கடைசி நேரத்தில் தான் அமை­தி­யான தேர்­தலை வலி­யு­றுத்­தி­யது.

ஐ.நா. பொதுச்­செ­யலர் பான் கீ மூன் நீதி­யான, நியா­ய­மான, சுதந்­தி­ர­மான தேர்தல் நட த்­தப்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யதைக் கூட ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி கண்­டனம் தெரி­வித்­தி­ருந்­தது. பான் கீ மூனின் சொந்த நாடான தென்­கொ­ரி­யாவில் வாக்­கு­ரிமை அளிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னரே, இலங்­கை­யர்கள் வாக்­கு­ரி­மையை பெற்­று­விட்­டனர்.

அந்­த­ள­வுக்கு முதிர்ந்த ஜன­நா­யகக் கட்­ட­மைப்பைக் கொண்ட எமக்கு ஆலோ­சனை கூற முன்னர், தீர விசா­ரிக்க வேண்டும் என்று பதி­லடி கொடுத்­தி­ருந்­தது ஆளும்­கட்சி.

மீண்டும் அதே கருத்தை ஐ.நா. பொதுச்­செ­ய­லரின் பேச்­சாளர் கூறிய போது, ஆளும்­கட்சி கூறிய பாணி­யி­லேயே வெளி­வி­வ­கார அமைச்சும் பதில் கொடுத்­தது.

அது­போ­லவே, சுதந்­தி­ர­மான வெளிப்­ப­டை­யான தேர்­தலை வலி­யு­றுத்தி ஐரோப்­பிய ஒன்­றியம் வெளி­யிட்ட அறிக்­கைக்கும் வெளி­வி­வ­கார அமைச்சு பதி­லடி கொடுத்­தி­ருந்­தது.

அதா­வது தேர்தல் தொடர்­பாக இலங்­கையின் எல்­லை­க­ளுக்கு வெளியே இருந்து எந்தக் கருத்து வந்­தாலும் அதனை விச­னத்­து­ட­னேயே பார்த்­தது மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம்.

இத்­த­கைய நிலையில் பெரும்­பா­லான நாடு கள் எந்தக் கருத்­தையும் கூறாமல் அமை­தி­யாக இருந்து விட்­டன.

அர­சாங்கம் பிர­சாரம் செய்­தது போன்று, இந்த தேர்­தலில் வெளி­நாட்டுத் தலை­யீ­டுகள் ஏதும் இருக்­க­வில்லை என்றே கூறலாம்.

ஆனாலும், இந்த தேர்­தலில் இப்­போது எதி­ர­ணியின் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்­றி­பெற்று விட்­டாலும், சர்­வ­தேச சமூகத்துக்குப் பதிலளிக்க வேண்டிய சில பிரச்சினைகளை அவர் எதிர்கொண்டேயாக வேண்டும்.

அதில் முக்­கி­ய­மா­னது, தற்­போது ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­ய­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும், போர்க்­குற்­றங்கள் குறித்த விசா­ரணை.

இந்த விசா­ரணை அறிக்கை வரும், மார்ச் மாதம் 25ம் திகதி ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

மைத்­தி­ரி­பால சி­றி­சே­னவின் அர­சாங்கம் ஜெனீவா­வு­டனோ அல்­லது ஐ.நாவு­டனோ ஒத்­ து­ழைக்கும் அள­வுக்கு இணங்கிப் போகப் போவ­தில்லை என்­பதே உண்மை.

சர்­வ­தேச விசா­ர­ணையை அவர் ஏற்­க­னவே நிரா­க­ரித்து விட்டார்.

அதே­வேளை, உள்­நாட்டுப் போர்க்­குற்ற விசா­ரணைப் பொறி­முறை ஒன்றை உரு­வாக்­கு­வ­தாக கூறி­யி­ருந்­தாலும் அதனை அவரால் உட­ன­டி­யாகச் செய்­வது கடினம்.

இந்­த­நி­லையில், ஜெனீவா என்பது அவரது அரசுக்கும் சோதனைக்குரிய களமாகவே இருக்கப்போகிறது.

oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum