Top posting users this month
No user |
Similar topics
அடுத்த கட்டம் என்ன? எப்படி வீழ்த்தப்பட்டார் மஹிந்த?
Page 1 of 1

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக அதிகாரத்திலிருந்து கொண்டு மீண்டும் போட்டியிட்ட, ஜனாதிபதி ஒருவர், மக்களால் தோற்கடிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட்ட சம்பவம் கடந்த வாரம் நிகழ்ந்தது.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான திருப்பமாக இந்த தேர்தல் அமைந்திருந்தது.
போர் வெற்றியைப் பயன்படுத்தியும், சக அரசியல் கட்சிகளை வளைத்துப் போட்டும், பெற்றுக்கொண்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வைத்துக் கொண்டு, தாம் நினைத்தால் எதையும் செய்யலாம் என்று இறுமாந்திருந்த ஓர் அரசாங்கத்துக்கு தகுந்த பாடம் மக்களால் கற்பிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு தகுந்த பாடம் புகட்டுவதற்காக காத்திருந்த மக்களுக்கு இவ்வளவு விரைவாக, அந்த வாய்ப்புக் கிட்டும் என்று எவரும் நினைத்துக் கூடப் பார்த்திருக்கமாட்டார்கள்.
இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவியில் இருக்கும் வாய்ப்பிருந்தும், விட்டில் பூச்சியாக மஹிந்த ராஜபக்ச இந்தப் பொறியில் வந்து விழுவார் என்று யாரும் நம்பியிருக்கவில்லை.
அண்மைக்காலத்தில், தனது கட்சி சரிவுகளைக் கண்டு வருவதைக் கருத்தில் கொண்டோ, அல்லது அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு பதவியில் நீடித்துவிட வேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாடாகவோ, அல்லது ஜோதிடர்களின் ஆலோசனையைக் கேட்டோ அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம்.
அடுத்த தேர்தலைச் சந்திக்க எடுக்கும் முடிவுதான், தனது வீழ்ச்சிக்கு வழிவகுக்கப் போகிறது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.
அதனை அவரது ஜோதிடர்களாலும் கணித்துக் கூற முடியவில்லை.
ஜோதிடர்களின் அறிவுரையைக் கேட்டு, கண்ணைக் கட்டிக் கொண்டு கிணற்றில் விழுந்த கதையாக முடிந்திருக்கிறது மஹிந்த ராஜபக்சவின் நிலை.
தனது அரசியல் பலம், மக்கள் ஆதரவு, கட்சியின் பலம், கொள்கை ஆகியவற்றை வைத்துக்கொண்டு அவர் இந்த தேர்தலைச் சந்தித்திருக்கவில்லை.
அவர் முழுமையாக நம்பியது, ஜோதிடர்களையும், குறுக்குவழியில் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக வழிமுறைகளை யும் தான்.
தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது தொடக்கம், வேட்புமனுவைத் தாக்கல் செய்தது, பிரசாரங்களை செய்தது மட்டுமன்றி, மெதமுலனவில் வாக்களிக்கச் சென்ற நேரத்தை தீர்மானிப்பதிலும் கூட, ஜோதிடம் தான் ஆதிக்கம் செலுத்தியது.
மஹிந்த ராஜபக்ச இந்த தேர்தலை வெற்றிக்கான போராட்டமாக நடத்தினார் என்று கூறமுடியாது.
இந்த தேர்தல் தோல்வியைத் தவிர்ப்பதற்கான ஒரு போராட்டமாகவே நடத்தப்பட்டது.
ஆரம்பத்தில் வெற்றி குறித்த மிகையான நம்பிக்கைகளுடன் களமிறங்கியிருந்தாலும், போகப்போக அதற்கான வாய்ப்புகள் அருகத் தொடங்கியதை மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் உணரத் தொடங்கியிருந்தது என்பதை மறுக்க முடியாது.
அதனால் எப்பாடுபட்டாவது தோல்வியைத் தவிர்த்து விட வேண்டும் என்ற வெறி மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்திடம் ஊறிப் போயிருந்தது.
அதற்காக, எல்லாவிதமான வழிகளையும் கையாள்வதற்கு அவர்கள் தயங்கவில்லை. இந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தனது வெற்றியின் மீதும், கொள்கையின் மீதும் நம்பிக்கை வைத்துப் போட்டியிட்டிருக்கவில்லை.
அவ்வாறு போட்டியிட்டிருந்தால், நிச்சயமாக, கொள்கை ரீதியான ஓர் ஆரோக்கியமான போட்டியாக இந்த தேர்தல் மாறியிருக்கும். அது நாட்டுக்குப் புதிய முன்மாதிரியாகவும் அமைந்திருக்கும்.
குறிப்பாக, மைத்திரிபால சிறிசேனவையும், மஹிந்த ராஜபக்சவையும், ஒரே மேடையில் நேரடி விவாதம் ஒன்றை நடத்த வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அதற்கு மஹிந்த ராஜபக்ச இணங்கவில்லை.
மேலை நாடுகளில் இதுபோன்ற நேரடி விவாதங்களே, எந்தக் கட்சியையும் சாராத வாக்காளர்களின் வாக்குகளைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகிறது.
அத்தகையதொரு வாய்ப்பு இம்முறை இலங்கை வாக்காளர்களுக்கு கிடைக்காமல் போனது துரதிஷ்டமே.
அதேவேளை, மஹிந்த ராஜபக்ச இந்த தேர்தலில் தனது வெற்றி உறுதி என்று மேடைகளில் பிரசாரங்களை மேற்கொண்டாலும், உள்ளூர அத்தகைய நம்பிக்கை அவரிடத்திலோ, அவரது கட்சியினரிடத்திலோ இருந்திருக்கவில்லை.
அதனால் தான் குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி, வெற்றி பெறும் முயற்சிகள் அவர்களால் முன்னெடுக்கப்பட்டன.
இந்தத் தேர்தலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு கிடைக்கும் வாக்குகளை உயர்த்த முடியாது என்பதை உணர்ந்து கொண்ட அரசதரப்பு. ஒரு கட்டத்துக்கு மேல், எதிரணியின் வாக்குகளை சிதைப்பதிலும், குறைப்பதிலுமே கவனம் செலுத்தியது.
வடக்கு கிழக்கில், தமிழ், முஸ்லிம்களின் வாக்குகள் மீது நம்பிக்கை கொள்ளாத அரசாங்கம், அங்கு வாக்களிப்பு அதிகளவில் இடம்பெறாமல் தடுப்பதற்கு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயகப் பிரிவைப் பயன்படுத்தியும், சுவரொட்டிகளை ஒட்டியும் துண்டுப்பிரசுரங்களை கொடுத்தும் வாக்களிக்க வெளியே வரவிடாமல் தடுக்க முயற்சிக்கப்பட்டது.
குண்டுகளை வீசியும், வாக்காளர்களை மிரட்டியும், வாக்களிக்க விடாமல் தடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இவையெல்லாம், அதிகளவு வாக்குகள் வடக்கு கிழக்கில் பதிவானால், அது மஹிந்த ராஜபக்சவின் வெற்றியைப் பாதித்து விடும் என்ற அச்சத்தில் செய்யப்பட்ட முயற்சிகளேயாகும்.
சமுர்த்தி பயனாளிகளுக்கு காசோலை கள் வழங்கப்பட்டு தேர்தலில் வாக்களிக்க கோரப்பட்டதும், யாழ்ப்பாணத்தில் நடந்தது.
சம்பூரில், இடம்பெயர்ந்த மக்களை சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவதாக கூட்டிச் சென்று, தேர்தல் பிரசாரக் கூட்டத்தை நடத்தி விட்டு, தேர்தல் முடிந்த பின்னர் வாருங்கள் குடியமர்த்துகிறோம் என்றும் ஏமாற்றிய சம்பவமும் நிகழ்ந்தது.
அதேபோல, ஐ.தே.க. பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயரைப் பயன்படுத்தி சுவரொட்டிகளை ஒட்டியும், அவரது பெயரில் போலியான தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தியும், தெற்கில் மைத்திரிபாலவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் அரசாங்கம் கோரிப் பார்த்தது.
மைத்திரிபால சிறிசேனவைப் போன்ற உருவ ஒற்றுமை கொண்டவரைப் போட்டியிட வைத்து வாக்காளர்களைக் குழப்பியது போதாதென்று, அவரைப் போல உடை அணிய வைத்து, வாக்குச்சாவடிக்கு தானே அழைத்துச் சென்ற கோமாளித்தனத்தையும் அரங்கேற்றினார் மஹிந்த ராஜபக்ச.
அத்துடன் இந்த தேர்தலில், அரச தொலைக்காட்சிகளும், ஊடகங்களும் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றியிருக்கவேயில்லை. அது வழக்கமானதும் கூட.
ஒரு கட்டத்தில் சஜித் பிரேமதாச பற்றி செய்யப்பட்ட பிரசாரத்தை திருத்துவதற்காக, தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, தனது தேர்தல் வேலைகளை விட்டு விட்டு ரூபவாஹினியின் வாசற்படி யில் ஏற வேண்டியும் ஏற்பட்டது.
முல்லைத்தீவு மக்களிடம் போய் கடந்த காலத்தை மறந்து விடுங்கள், என்று கூறி பிரசாரம் செய்த மஹிந்த ராஜபக்ச, தெற்கில் குண்டு வெடிப்புகளையும், கோரக் காட்சிகளையும் போர் வெற்றியையும் நினைவுபடுத்தியே வாக்குகளைக் கேட்டார்.
இவையெல்லாமே, கொள்கை சார்ந்து தேர்தலை எதிர்கொள்ளும் வழிமுறைகளல்ல - குறுக்குவழியில் வெற்றியைத் தேடும் முயற்சிகள் என்பதை எவரும் ஒப்புக்கொள்வர்.
ஆனாலும், மக்களின் சக்திக்கு முன்பாக, அவர்களின் கருத்துக்கு முன்பாக, இந்தக் குறுக்குவழி முயற்சிகளால் நின்று பிடிக்க முடியாது போனது.
தமிழ்மக்களுக்கு எதிராக ஒரு கொடிய போரை நடத்தியது போதாதென்று, அதனை வைத்தே இந்த ஆறு ஆண்டுகளாக அரசியல் பிழைப்பும் நடத்தி வந்த அரசாங்கத்துக்குத் தான் மக்கள் முடிவு கட்டியிருக்கிறார்கள்.
2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் எல்லாத் தேர்தல்களையுமே, போர் வெற்றியை வைத்து தான் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் எதிர்கொண்டிருந்தது.
சிங்கள மக்களிடம், போர் வெற்றி என்ற போதையை ஊட்டி மயக்கி வந்த அரசாங்கத்துக்கு, சிங்கள மக்கள் மட்டுமன்றி சிறுபான்மையின மக்களும் இணைந்தே சரியான பாடம் கற்பித்துள்ளனர்.
கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், முடிக்கப்பட்ட போரை வைத்து இனியும் அரசியல் பிழைப்பு நடத்த முடியாது என்ற நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
உண்மையில், கடும்போட்டி நிலவுவதை, புரிந்து கொண்டிருந்தாலும், மஹிந்த ராஜபக்ச இவ்வளவு இலகுவாக வீழ்த்தப்படுவார் என்று எவருமே கருதியிருக்கவில்லை.
அதை விட, மைத்திரிபால சிறிசேன அவரைத் தோற்கடித்தார் என்பதை, சர்வதேச ஊடகங்களால் இன்னமும் நம்ப முடியாமலேயே இருக்கிறது.
அதனால் தான், கறுப்புக் குதிரை (Dark Horse) வென்று விட்டதாக பல சர்வதேச ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
மஹிந்த ராஜபக்ச மிகப்பலம் வாய்ந்த ஒருவராக வெளிநாட்டு ஊடகங்களால் கருதப்பட்டவர் என்பதால் தான், அவரது தோல்வியை அவற்றினால் இலகுவாக நம்ப முடியாதிருக்கிறது.
மஹிந்த ராஜபக்சவின் தோல்வி, அவரது குடும்ப அரசியல் ஆதிக்கத்துக்கு மட்டும் முடிவு கட்டியிருக்கவில்லை.
அதற்கும் அப்பால் அவரது குடும்பத்தின் அரசியல் எதிர்காலத்தையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
மைத்திரிபால சிறிசேனவுடன், அவர் அடுத்த கட்டமாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக்காக போராட வேண்டிய நிலை ஒன்று உருவாகலாம்.
ஏனென்றால், மைத்திரிபால சிறிசேனவை, பொதுவேட்பாளராக கொண்டு வந்து அறிமுகப்படுத்திய போதே, மைத்திரிபாலவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக்கும் வரை ஓயமாட்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, குமாரதுங்க குறிப்பிட்டிருந்தார்.
தன்னைப் பழிவாங்கிய மஹிந்த ராஜபக்சவுக்கு, சந்திரிகா குமாரதுங்க, இப்படியொரு ஆப்பை வைப்பார் என்று எவரும் கருதியிருக்கவில்லை.
மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக, மைத்திரிபால சிறிசேனவை, கொண்டு வந்து நிறுத்தி, ஆச்சரியத்தை ஏற்படுத்திய அவர், இன்று அவரையே ஜனாதிபதியாக்கியும் இருக்கிறார்.
இப்போது அவர், நேரடி அரசியலில் இறங்காவிடினும், கிங் மேக்கராக அரசியலில் வகிக்கும் பங்கு, மஹிந்த ராஜபக்சவினதும், அவரது குடும்பத்தினதும் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கக் கூடும்.
மொத்தத்தில் இந்த தேர்தல் மஹிந்த ராஜபக்சவின் குடும்ப அரசியலை மட்டும் புரட்டிப் போடவில்லை. இலங்கையின் அரசியல் வரலாற்றிலும் புதிய திருப்பங்களை ஏற்படுத்தப் போகிறது.
100 நாள் செயற்றிட்டம் ஒன்றை வகுத்துச் செயற்படும் புதிய அரசாங்கம் அடுத்தடுத்து நகர்த்தும் ஒவ்வொரு காய்களும், இன்னும் பல அரசியல் திருப்பங்களுக்கு வழி வகுக்கலாம்.
அதைவிட, பாராளுமன்றத்துக்கான தேர்தலையும் விரைவில் நடத்தும் நிலை ஏற்படலாம்.
மாகாணசபைகளின் அதிகாரங்கள் கைமாறலாம்.
இவையெல்லாம், மஹிந்த ராஜபக்ச என்ற ஒருவர், தனது பதவிக்காலத்தை நீடித்துக் கொள்வதற்காக எடுத்த ஒரு முடிவின் தொடர் விளைவுகளாக அமையப் போகின்றன.
மஹிந்த ராஜபக்சவை சர்வதேச போர்க்குற்ற விசாரணையில் இருந்து பாதுகாக்கப் போவதாக புதிய அரசாங்கம் கூறியிருந்தாலும், மஹிந்த ராஜபக்ச மீதும் அவரது நிர்வாகத்தின் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், குறித்த விசாரணைகள் தொடங்கப்படும் வாய்ப்புகளும் உள்ளன.
அது, கடந்த கால வழக்குகளையும் கூட மீண்டும் கிண்டிக் கிளறும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தக் கூடும்.
ஆக கடந்த வாரம் ஜனாதிபதி தேர்தல் வெறும் ஆட்சி, அதிகார கைமாற்றத்துடன் நின்று போகப் போவதில்லை.
இலங்கையின் அரசியலில் பல புதிய மாற்றங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் வழிவகுக்கும் போலவே தென்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அடுத்த கட்டம் என்ன?
» கருணாவின் அடுத்த இலக்கு என்ன? வெளிவரும்... வெளிவரா...! உண்மைகள்.
» அடுத்த கட்ட நகர்வு குறித்து மஹிந்த தரப்பு அவசர கூட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum