Top posting users this month
No user |
அடுத்த கட்டம் என்ன?
Page 1 of 1
அடுத்த கட்டம் என்ன?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைக்கப்பட்ட புதிய அரசாங்கம் 100 நாட்களைக் கடந்து விட்ட நிலையில், அதன் அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
100 நாள் செயற்றிட்டத்தை முன்வைத்து, இந்த அரசாங்கம் கடந்த ஜனவரி மாத முற்பகுதியில் தனது பயணத்தைத் தொடங்கியிருந்தது.
இந்த 100 நாள் செயற்றிட்டத்தில் அடையப்பட வேண்டிய பல இலக்குகளை அடைந்திருந்தாலும், பிரதான இலக்குகளை அடைவதில் இன்னமும் வெற்றி பெறவில்லை.
அரசியலமைப்பு மாற்றத்துடன் தொடர்புடைய இலக்குகளை எட்டுவதற்கு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒத்துழைப்பு அவசியம்.
ஆனால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் செல்வாக்கு இன்னமும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் இருந்து கொண்டிருப்பதால், எதிர்க்கட்சியின் ஆதரவைப் பெறுவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
அரசியலமைப்பில் 19வது திருத்தத்தை விவாதத்துக்கு எடுத்து நிறைவேற்ற கடந்தவாரம் எடுக்கப்பட்ட முயற்சி, எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தினால், தோல்வியில் முடிந்திருக்கிறது.
இதையடுத்து, ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம் நாளை மீண்டும் கூடும் என்றும், நாளையும் நாளை மறுநாளும் விவாதம் நடத்தப்பட்டு, நாளை மறுநாள் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியோ, 19 ஆவது திருத்தச்சட்டத்துடன், கூடவே, தேர்தல் முறை மாற்றத்தை ஏற்படுத்தும், 20வது திருத்தச்சட்டமும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அழுங்குப் பிடியில் நிற்கிறது.
ஆனால், 20ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு குறைந்தது 3 மாத காலம் தேவைப்படும். அது அரசியலமைப்புக்கு ஏற்புடையதா என்று உயர்நீதி மன்றத்தின் கருத்தை அறிந்த பின்னரே அதனை நிறைவேற்ற முடியும்.
அதற்குப் பின்னர், பாராளுமன்றத்தைக் கலைத்தாலும் கூட, தேர்தல் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.
எதிர்க்கட்சி தரப்பில், முன்வைக்கப்பட்டு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தேர்தல் முறையின்படி, 238 பேர் கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
173 உறுப்பினர்கள் தொகுதிவாரியாகவும், ஏனைய உறுப்பினர்கள் மாவட்ட ரீதியாக விகிதாசார முறைப்படியும், தேசியப்பட்டியல் மூலமும் தெரிவு செய்யப்படுவர். இந்த யோசனையில் சிறுபான்மையினக் கட்சிகள், சிறுகட்சிகளின் நலன் எந்தளவுக்குப் பேணப்படுகிறது என்பது முக்கியமான விடயம்.
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பொறுத்தவரையில், சிறுகட்சிகள் சிறுபான்மைக் கட்சிகளின் நலன்களை கருத்தில் கொள்ளவில்லை.
எல்லாக் கட்சிகளையும் திருப்திப்படுத்த முடியாது என்ற முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்தவின் கருத்து ஒன்றே இதற்கு சாட்சி.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் உள்ள 136 உறுப்பினர்கள் மற்றும் ஐ.தே.க.வில் உள்ள 49 உறுப்பினர்கள் என 185 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலே போதும் இதனை நிறைவேற்றி விடலாம் என்று கணக்குப் போட்டிருக்கிறார் சுசில் பிறேம் ஜெயந்த.
ஆனால், இவற்றில் சிறுகட்சிகள் மற்றும் சிறுபான்மையினக் கட்சிகளின் பிரதிநிதிகளும் உள்ளனர். அவர்கள் இதற்கு ஆதரவளிப்பார்களா என்று பார்க்க வேண்டும்.
எவ்வாறாயினும், சிறு மற்றும் சிறுபான்மையினக் கட்சிகளின் நலன்களைப் புறக்கணித்தே, தேர்தல் முறை மாற்றம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
அதேவேளை, 100 நாட்களை கடந்து விட்ட தற்போதைய அரசாங்கம், நாளை மறுநாள் நடத்தப்படும் 19வது திருத்தச்சட்ட மூலம் மீதான வாக்கெடுப்பில் வெற்றி பெறுமா என்பது முக்கிய கேள்வி.
ஏனென்றால், 19வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதும் பாராளுமன்றத்தை கலைத்து விடுமோ அரசாங்கம் என்ற பயம் எதிர்க்கட்சிக்கு உள்ளது.
20வது திருத்தச்சட்டம் நிறைவேற்றினால் தான், தாம் தப்பிக் கொள்ளலாம் என்று எதிர்க்கட்சி கருதுகிறது.
அதனால், எப்பாடு பட்டாவது, 19வது திருத்தத்தை நிறைவேற்றவிடாமல் தடுக்க முனைகிறது.
நாளை மறுதினமே, 19வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு கடைசி வாய்ப்பு என்றும் இல்லாவிட்டால் பாராளுமன்றத்தைக் கலைப்பதை விட வேறு வழியில்லை என்றும் அமைச்சர் அஜித் பெரேரா போன்றோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே திட்டமிட்டது போன்று 100 நாள் செயற்றிட்டத்தின் முடிவில் நாடாளுமன்றம், கடந்த 23ம் திகதி கலைக்கப்பட்டிருக்க வேண்டும். 19வது திருத்தம் நிறைவேற்றப்படாததால், அது இன்னமும் உயிர் வாழ்கிறது. அதேவேளை, பாராளுமன்றம் எப்போது கலைக்கப்படும் என்ற கேள்விக்குப் பலரும் பல விடைகளைக் கூறி வருகின்றனர்.
அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொண்ட பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று தனது கட்சியினரிடமும், அமெரிக்க, பிரித்தானிய, ஜேர்மனிய தூதுவர்களிடமும், உறுதியளித்திருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
அதேவேளை, அடுத்த மாத துவக்கத்தில் – பெரும்பாலும் மே முதல் வாரத்தில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அவரது பயணத் திகதி இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படா விட்டாலும்,அவரது பயணம் இடம்பெறபோவது உறுதி.
இந்தப் பயணம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
ஏனென்றால், 42 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஒருவர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
கடைசியாக, 1972ம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி, அமெரிக்காவின் 55வது இராஜாங்கச் செயலராக இருந்த வில்லியம் பி. ரோஜர்ஸ், (William P. Rogers) இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
யேமன் செல்லும் வழியில் அவர், கொழும்பில், அப்போது வெளிவிவகார அமைச்சராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
அதற்குப் பின்னர், இலங்கைக்கு வருகை தரவுள்ள அமெரிக்காவின் மிக உயர்மட்டப் பிரமுகராக, ஜோன் கெரியே இருப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் உயர்மட்ட அமெரிக்க அதிகாரியாக இருப்பதால், அவரது வருகை முக்கியமானது.
இவ்வாறான வெளிநாட்டு முக்கிய பிரமுகர்களின் பயணத்தின் போது, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சம்பிரதாயம் நடைமுறையில் இல்லை.
எனவே, ஜோன் கெரி வந்து சென்ற பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படும் என்பது உறுதியாகியிருக்கிறது.
அதேவேளை, எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் தேர்தலை நடத்தும் வகையில் மே மாத முற்பகுதியில் பாராளுமன்றத்தைக் கலைப்பது என்று தேசிய நிறைவேற்றுக் குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது,
எதிர்க்கட்சி தரப்பு உடனடியாக தேர்தல் நடத்தப்படுவதை விரும்பாவிடினும், தற்போதைய நிலையில் அரசாங்கத்துக்கு உள்ள தெரிவு தேர்தல் ஒன்றுக்குச் செல்வதேயாகும்.
ஏனென்றால், எதிர்க்கட்சி தனது பெரும்பான்மை பலத்தை வைத்து சிறுபான்மை அரசாங்கத்தை ஆட்டிப் படைக்கத் தொடங்கி விட்டது.
அற நனைந்தவனுக்கு கூதலும் இல்லை குளிருமில்லை என்பது போல, எதிர்க்கட்சியின் நெருக்கடிகள் எல்லை மீறிவிட்ட நிலையில், அரசாங்கம் பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்துவதை விட வேறு வழியல்லை.
இல்லாவிட்டால் அரசாங்கத்தை முடக்குவது என்ற பெயரில் நாட்டை முடக்கும் வேலையை தான் எதிர்க்கட்சி செய்து விடும்.
எனவே, கூடிய விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியங்களே அதிகமாக உள்ளன.
மே மாதம் முதல் வாரம் மீண்டும் தேர்தல் பரபரப்புகள் சூடுபிடிப்பதற்கான அறிகுறிகளே அதிகம் தென்படுகின்றன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum