Top posting users this month
No user |
Similar topics
தமிழ் மக்கள் அழுத கண்ணீரே மகிந்தவை மண் கெளவ வைத்தது
Page 1 of 1

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டியுள்ளார். தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது.
சிங்கள மக்களின் கணிசமான வாக்குகள் மகிந்த ராஜபக்சவுக்கு அளிக்கப்பட்டுள்ளதை தேர்தல் முடிவுகள் சுட்டி நிற்கின்றன.
சிங்கள மக்களின் கணிசமான வாக்குகள் மகிந்த ராஜபக்சவுக்கு சேரும் என மைத்திரிபால சிறிசேன தரப்பு எதிர்பார்த்திருக்கவில்லை.
சில வேளைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் கட்சிகளும் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக அறிவித்ததை அடுத்து, சிங்கள மக்கள் தங்களின் முடிவை மாற்றி மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிப்பது எனத் தீர்மானித்தனரோ என்று நினைக்கும் அளவில் நிலைமை உள்ளது.
எனினும் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் மிகப்பெரிய கவசமாக இருந்ததன் காரணமாக இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற அதி உயர் பதவியை மைத்திரிபால சிறிசேன பெற்றுக் கொண்டார்.
ஆக, இலங்கையில் ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் மகா சக்தியை இம்முறை சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் பெற்றிருந்தமை சிங்களப் பேரினவாதிகளுக்கு பேரிடியாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழ், முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது வாக்குகளை வழங்குவது என்ற முடிவில் மிகவும் இறுக்கமாக இருந்தனர்.
இத்தகையதொரு முடிவை எடுப்பதற்குக் காரணம் சிறுபான்மை இனங்கள் பற்றிய மகிந்த ராஜபக்சவின் அலட்சியப் போக்கு என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.
பொதுவாக தமிழ் மக்களின் வாக்களிப்பு என்பது வடக்கு மாகாண சபைத் தேர்தல் தவிர்ந்த வேறு எந்தத் தேர்தலிலும் முதன்மை பெற்றிருக்கவில்லை.
ஆனால் நேற்று முன்தினம் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தமிழ் மக்கள் காட்டிய ஆர்வம் வித்தியாசமானது.
குறிப்பாக வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற வாக்களிப்பில் தமிழ் மக்களின் ஒவ்வொரு வாக்குகளும் பிரமாஸ்திரம் போன்றவை.
இறைவா! எங்கள் உறவுகளின் இழப்புகளுக்கு வழி வகுத்த ஆட்சிக்கு முடிவு கட்டு. எங்கள் குடும்பம் கண்ணீரும் கம்பலையுமாக இருப்பதற்குக் காரணமாக இருந்தவருக்குப் பாடம் புகட்டு. நாங்கள் அளிக்கின்ற வாக்குகளுக்கு பெறுமதியைக் கொடு என்ற பிரார்த்தனையோடுதான் தமிழ் மக்கள் வாக்களித்தனர்.
இவர்களின் பிரார்த்தனை, தேர்தலின் மறுநாளாகிய நேற்றைய தினம் காலைப் பொழுதில் மகிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் இருந்து வெளியேற்றியது.
சிங்களத் தலைவர்கள் எவரும் எங்களுக்கு எதையும் பெரிதாக செய்து விடவில்லை. அந்த வகையில் சிங்களம் என்றால் எல்லாம் ஒன்றுதான்.
ஆனால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எங்கள் இனத்திற்குச் செய்த கொடுமை இருக்கிறதே! இதற்கு எங்களிடம் மன்னிப்புக் கிடையாது.
அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ செல்வத்தைத் தேய்க்கும் படைக்கலம் என்றால் எங்களை அழ வைத்தவருக்கு வேட்டு வைக்கும் ஆயுதமாக எங்கள் வாக்குகள் அமையட்டும் என்ற நினைப்போடு தமிழ் மக்கள் மைத்திரிக்கு அளித்த வாக்குகள் மகிந்தவை தோற்கடித்தது.
விடுதலைப் புலிகளை தோற்கடித்த இறுமாப்பில், எக்காலத்திலும் நானும் எனது குடும்பத்தினருமே ஜனாதிபதிப் பதவியை தக்க வைத்திருப்போம் என்று எண்ணிய மகிந்த ராஜபக்ச மண் கெளவிப் போனதற்குக் காரணம் தமிழ் மக்கள் விட்ட கண்ணீர் என்று கூறினால் அது மிகப் பொருத்தமுடையதாகும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஒரு மாதம் கடந்தும் மகிந்தவை சந்திக்க மக்கள் மெதமுல்லைக்கு படையெடுப்பு
» கடந்த காலங்களில் தொழில் தேடி திரிந்த மக்கள் இப்பொழுது மகிந்தவை தேடி திரிகின்றார்கள்: ரோஹித்த
» தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் தின நிகழ்வு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum