Top posting users this month
No user |
Similar topics
மைத்திரி ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி சூடு!- பிரதியமைச்சர் பிரேமலாலை கைது செய்ய உத்தரவு
Page 1 of 1

ரிபொருள் மற்றும் மின்சக்தி பிரதியமைச்சர் பிரேமலால் ஜெயசேகரவைக் கைது செய்து, நீதிமன்றில் ஆஜர்படுத்தும்படி பெல்மடுல்ல மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் மீது கஹவத்தையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலேயே, பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மட்டுமன்றி, இவர் வெளிநாடுகளுக்கு தப்பிப் போகாமல் வெகு கவனமாக இருக்கும்படியும், மத்தள மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையங்களின் குடிவரவு மற்றும் குடியகல்வுப் பிரிவினருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
மின்வலு மற்றும் எரிசக்தி பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை கைது செய்யுமாறு பெல்மடுல்லை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இரத்தினபுரி கஹாவத்தை பிரதேசத்தில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார மேடை மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரிகள், சம்பவத்துடன் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர, சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் நிலாந்த ஜயகொடி, கஹாவத்தை பிரதேசசபையின் தலைவர் வஜிர சில்வா ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறி நீதிமன்றத்தில் பீ அறிக்கையை தாக்கல் செய்தனர்.
இதனடிப்படையில் சந்தேக நபர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அவர்கள் நாட்டில் இருந்து வெளியேறுவதை தடுக்கும் வகையில் கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களின் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» செம்மரம் வெட்டியதாக கைது செய்யப்பட்ட 5 தமிழர்கள்: துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு
» மைத்திரியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்
» மட்டக்களப்பில் மைத்திரியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்! ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum