Top posting users this month
No user |
Similar topics
குரோதப் பேச்சுக்களுக்கு எதிரான சட்டமூலம் வாபஸ்! நல்லாட்சி அரசாங்கத்தின் கோழைத்தனம்
Page 1 of 1

குரோதப் பேச்சுக்களுக்கு எதிரான சட்டமூலம் வாபஸ் பெறப்பட்டுள்ளமையானது நல்லாட்சி அரசாங்கத்தின் கோழைத்தனமான செயற்பாடாகும் என்று கலாநிதி றியாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமாதான கற்கைகளுக்கான தேசிய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி றியாஸ் இதுகுறித்து அறிக்கையொன்றை விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறைவடைந்து தற்போதைக்கு ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரானதாக பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தம் நடைபெற்ற வேளையில் பாதுகாப்புத் தரப்பினரால் மாத்திரமன்றி சிங்கள சிவில் சமூகத்தினராலும் நிழல் மறைவில் மேற்கொள்ளப்பட்ட தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான யுத்தம் காரணமாக தமிழ் பேசும் மக்கள் பெரும் இன்னல்களை எதிர் கொண்டனர். இனவாத ஏளனங்கள் மற்றும் பாகுபாடுகளை எதிர்கொண்டனர்.
இவ்வாறான நிலையை தொடர்ந்தும் மேற்கொண்டு தமிழ் பேசும் மக்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு அடக்கியாளும் போக்கை மஹிந்த அரசாங்கம் கடைசி வரை மேற்கொண்டது. அதன் காரணமாகவே கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் சுதந்திரக் கட்சி மண்ணைக் கவ்வ நேரிட்டது.
அது மாத்திரமன்றி எங்கள் வாக்குப் பலத்தை வைத்து மஹிந்த தரப்பை முதுகில் அறைந்து முகம் குப்புறவீழ்த்தியுள்ளோம். இருந்தும் முகம்குப்புற வீழ்ந்தவனின் முனகல் போன்று, மஹிந்தவின் வால்கள் இன்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக இனவாதம் கக்கிக் கொண்டிருக்கின்றன. அண்மையில் கூட களுத்துறையில் சிங்கள மக்கள் ஒன்றிணைந்து அப்பாவி தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள முயன்றிருந்தனர்.
பெயரளவில் விடுதலைப் புலிகளுக்கு எதிரானதாகவும், யதார்த்தத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு எதிரானதாகவும் முன்னெடுக்கப்பட்ட போரில் மிருசுவில் படுகொலைகள் முக்கியமானவை.அதன் சூத்திரதாரிகளில் ஒருவரான சுனில் ரத்நாயக்க என்ற சிப்பாய் பத்துவருடங்கள் நடைபெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் தமிழ் தரப்பின் கடுமையான முயற்சிக்குப் பின்னரே தண்டிக்கப்பட்டுள்ளார்.
எனினும் அப்பாவி தமிழ் மக்களை கொன்றொழித்த கொடுங்கோலன் சுனில் ரத்நாயக்கவை சிங்கள மக்களின் வீரனாக சித்தரித்து மேன்முறையீட்டின் மூலம் விடுவிக்கும் முயற்சிகளை பொதுபலசேனா தரப்பு பகிரங்கமாக மேற்கொண்டுள்ளது.
இதன் மூலம் அந்த அமைப்பு நீதித்துறைக்கே சவால் விடத் தொடங்கியுள்ளது. மறுபுறத்தில் காலம் கடந்தாயினும் வழங்கப்பட்ட நீதியின் தீர்ப்பு நிரந்தரமானது என்று தமிழ் பேசும் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட முடியாத சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.
இவற்றின் பின்னணியை ஆராய்ந்தால் தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடும் அமைப்புகள் மற்றும் முக்கியஸ்தர்களின் முகமூடிச் செயற்பாடுகளே இவை என்பது நன்கு தெளிவாகும்.
எனவே இனக்குரோத கருத்துக்களை வெளியிடும் இவ்வாறான அமைப்புகளின் முதுகெலும்பை உடைக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டமூலம் தமிழ் பேசும் மக்களாகிய எங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அடிப்படைவாதிகள் மற்றும் மதவாதிகளின் அழுத்தம் காரணமாக அதனை வாபஸ் பெற்று நல்லாட்சி அரசாங்கமும் தனது கோழைத்தனத்தை பறைசாற்றியுள்ளது.
மூர்க்க ஆட்சியாளன் மஹிந்த வை முகம் குப்புற வீழ்த்திய எங்கள் வாக்குகளின் தியாகம் இவ்வாறான செயற்பாடுகளினால் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது. எங்கள் அர்ப்பணிப்புகளின் பிரதிபலன் அநீதியாக கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. நாங்கள் நம்பிய நல்லாட்சி அரசாங்கமும் எங்களை கைவிட்டுள்ளது.
எதிர்காலம் குறித்து எந்தவித எதிர்பார்ப்புகள் இல்லாது போயினும் தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் எந்தவொரு அடக்குமுறை அல்லது அதற்குத் துணை நிற்கும் சக்திகளுக்கு எதிராகவும் நாங்கள் மீண்டுமொரு ஜனநாயக ரீதியாக அணிதிரளத் தயங்கமாட்டோம்.
மஹிந்த அரசாங்கம் அழித்துச்சிதைத்த எங்கள் சமூகங்களின் இருப்புக்கான கனவுகள் மீது கட்டித்தந்த பாலத்தைக் கொண்டு கரைசேர்ந்த நல்லாட்சி அரசாங்கம் இதனை தீவிரமாக கவனத்தில் எடுக்க வேண்டும்.
எதிர்காலத்திலும் நல்லாட்சி என்ற பெயரளவிலான ஆட்சி தொடரவும், உங்களுடைய வரப்பிரசாதங்களை தக்கவைத்துக் கொள்ளவும் உண்மையாகவே அக்கறை இருக்குமானால், அதற்கான குறைந்த பட்ச நன்றிக்கடனாகவேனும் உங்களை அரியணையில் அமர்த்திய தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, எங்களுக்கு எதிரான குரைப்புகளை அடக்கி வைக்க முயற்சிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என்றும் கலாநிதி றியாஸ் தனது அறிக்கையில் கடுமையாக கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரதமர் ரணிலுக்கு எதிரான வழக்கு வாபஸ்!
» நல்லாட்சி அரசாங்கத்தின் முடிவு இன்றுடன் ஆரம்பம்: ஜே.வி.பி
» கட்சித்தாவலை நீக்க விசேட சட்டமூலம்
» நல்லாட்சி அரசாங்கத்தின் முடிவு இன்றுடன் ஆரம்பம்: ஜே.வி.பி
» கட்சித்தாவலை நீக்க விசேட சட்டமூலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum