Top posting users this month
No user |
மகிந்த, அர்ஜுன மற்றும் கப்ராலுக்கு எதிரான மனுக்கள் வாபஸ்!
Page 1 of 1

மத்திய வங்கி பிணை பத்திர மோசடி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் அவரது மருமகனுக்கு எதிராக மேல் மாகாண சபை உறுப்பினர் ரேணுகா பெரேராவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த புகார் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பில்பிட்டியவினால் இப் புகார் நிராகரிக்கப்பட்டுள்ளது.மனுதாரர் புகாரை மீண்டும் பெற்று கொண்டமை இதற்கு காரணமாக உள்ளது.
இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைகுழுவில் விசாரணை மேற்கொள்ளப்படுவதனால் தான் புகாரினை திரும்ப பெற்று கொள்வதாக மாகாண சபை உறுப்பினர் ரேணுகா பெரேரா நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
மகிந்த, அர்ஜுன மற்றும் கப்ராலுக்கு எதிரான மனுக்கள் வாபஸ்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன மஹேந்திரன் மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு, மீளப் பெறப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேல் மாகாண சபை உறுப்பினர் ரோணுக பெரேராவால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு இன்று மீளப்பெறப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நீதிமன்றத்தில் இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் ஆஜரான சட்டத்தரணி, குறித்த வழக்கானது தமது ஆணைக்குழுவினால் விசாரணை செய்யப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினார்.
இது குறித்த விசாரணைகள் முடிவடையும் வரை தமது மனுவை மீளப் பெறுவதாக மனுதாரரால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
விடயங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பலபிடிய மனுவை மீளப் பெற அனுமதியளித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum