Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கனடாவுக்குச் செல்லவிருந்த மகனை இராணுவம் கடத்திச் சென்றுவிட்டது: கண்கலங்கிய தாய்

Go down

கனடாவுக்குச் செல்லவிருந்த மகனை இராணுவம் கடத்திச் சென்றுவிட்டது: கண்கலங்கிய தாய் Empty கனடாவுக்குச் செல்லவிருந்த மகனை இராணுவம் கடத்திச் சென்றுவிட்டது: கண்கலங்கிய தாய்

Post by oviya Tue Dec 15, 2015 1:38 pm

கனடா நாட்டிற்குச் செல்வதற்கான ஒழுங்குகளைச் செய்து கொண்டிருந்த மகனின் தேசிய அடையாள அட்டையினை பறித்துச் சென்ற இராணுவம், மறுநாள் கடைக்குப் போன என் மகனை கடத்திச் சென்றுவிட்டது.
இராணுவ உயர்பாதுகாப்பு வலையமாக இருந்து விடுவிக்கப்பட்ட வசாவிளான் பாடசாலையின் சுவற்றில் எனது மகனின் கையெப்பத்தினை கண்டேன்.

அங்கிருந்தவர்களை விசாரித்தால் உண்மை தெரியவரும். இவ்வாறு ஜனாதிபதி ஆணைக்குழு முன் தங்கவேல் விமலாதேவி என்னும் தாய் கண்கலங்கிச் சாட்சியமளித்துள்ளார்.

பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நேற்று காணமல் போனவர்களை கண்டறிறும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நடைபெற்றது.

இவ்விசாரணைக்கு வருகைதந்த தாயே இவ்வாறு சாட்சியமளித்துள்ளார். அவர் தனது சாட்சியத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

பருத்தித்துறை கற்கோவளப் பகுதியில் என்னுடன் இருந்த எனது மகன் த.கிருபாகரன் (வயது 22) என்பவர் கடந்த 2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இங்கு இருந்து இறுக்கமான சூழ்நிலை காரணமாக வெளிநாட்டுக்குச் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

இதனடிப்படையில் கனடா நாட்டிற்குச் செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தது அவருக்கு. இதனால் அங்கு செல்வதற்கான முயற்சிகளை அவர் செய்து வந்தார்.

இந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் 2 ஆம் திகதி எனது மகனின் தேசிய அடையாள அட்டையினை இராணுவம் பறித்துக் கொண்டு சென்று விட்டது. ஆனால் மறுநாள் அவரை தேடி வந்த இராணுவம் அடையாள அட்டையினை கொடுத்துவிட்டது.

இதன் பின்னர் 14 ஆம் திகதி கொழும்பு செல்வதற்காக இராணுவத்தினால் வழங்கப்படும் கிளியரன்ஸ் எடுத்திருந்தார்.

இந்நிலையில் 20 ஆம் திகதி பருத்தித்துறை நகரிக்கு சி.டி எடுப்பதற்காக சென்ற போது காணமல் போய்விட்டார்.

எமது வீட்டிற்கு பின்புறமாக பாரிய படைமுகாம் ஒன்று இருந்தது. அதில் இருந்து இராணுவத்தினரே எனது மகனை கடத்திச் சென்றிருப்பார்கள் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.

அவரை தேடி நான் எல்லா இடத்திற்கும் சென்றேன். ஆனால் தகவல் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் பூசா சிறைச்சாலைக்கு சென்ற போது அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் பெயர் விபரங்கள் காண்பிக்கப்பட்டது.

அதில் தங்கவேலாயுதம் கிருபாகரன் என்ற பெயர் இருந்தது. எனது மகனுடைய பெயர்தான் மாறிப் பதிவு செய்து விட்டது. அவரை காண்பித்தால் நான் என் மகனா, இல்லையா, என்பதை உறுதிப்படுத்தேவன் என்று கேட்டேன். அதற்கு அங்கிருந்தவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை.

எனது மகனின் புகைப்படத்தினையும் காண்பித்தேன். இவர் எங்களிடம் இல்லை என்று செல்லி கலைத்து விட்டார்கள் என்னை.

மேலும் 2011 ஆம் ஆண்டு வலி.வடக்கு வசாவிளான் பாடசாலை 20 வருடங்களின் பின்னர் விடுவிக்ப்பட்டிருந்தது. அப்போது வடமாகாண ஆளுநராக இருந்து சந்திரசிறி விடுவிக்கப்பட்ட பாடசாலையினை பார்வையிட்டார்.

ஆளுநர் பார்வையிட்டது தொடர்பாக பாத்திரிகையில் புகைப்படத்துடன் செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த செய்தியில் இருந்த புகைப்படத்தில் காணப்படும் பாடசாலையில் ஜன்னலுக்கு அருகில் கிருபா என்று எனது மகனிக் கையெப்பம் காணப்பட்டிருந்து.

அவரின் கடவுச் சீட்டில்ம இருந்த கையெப்பத்தினைப் பிரதியிட்டது போன்ற கையெப்பம் அதில் காணப்பட்டிருந்தது. எனது மகன் அங்கிருந்த இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தகம் எழுந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு எனது மகனை கண்டுபிடித்து தாருங்கள் என்று அந்த தாய் மன்றாட்டமாக கேட்டுக் கொண்டார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum