Top posting users this month
No user |
Similar topics
யாழில் காணாமல்போனோர் தொடர்பில் 2 ஆயிரத்து 539 முறைப்பாடுகள்: ஜனாதிபதி ஆணைக்குழுவில் பதிவு
Page 1 of 1

காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இம்மாத நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில இடம்பெறவுள்ள நிலையில் யாழிலிருந்து 2 ஆயிரத்து 539 பேர் தமது முறைப்பாடுகளை ஆணைக்குழுவில் பதிவு செய்துள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், இம்மாதம் 11 ஆம் திகதியில் இருந்து 16 ஆம் திகதி வரை யாழ் மாவட்டத்தில் காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவில் 501 பேரும், வேலணை பிரதேச செயலர் பிரிவில் 219 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 558 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 561 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 463 பேரும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 237 பேருமாக இதுவரை யாழ்மாவட்டத்தில் 2 ஆயிரத்து 539 பேர் காணாமற்போனோர் தொடர்பாக தமது முறைப்பாடுகளை ஜனாதிபதி ஆணைக்குழுவில் பதிவுசெய்துள்ளனர்.
இவர்களுக்கான படிவங்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் அனுப்பி வைக்கப்ட்டுள்ள நிலையில் இவர்களுக்கான விசாரணைகள் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை குறிக்கப்பட்ட ஒவ்வொரு பிரதேச செயலத்திலும் நடைபெறவுள்ளது.
அதன்படி யாழ்ப்பாணம், நல்லூர் ஆகிய பிரிவை சேர்ந்தவர்களுக்கு வரும் 11ம் திகதி யாழ்ப்பாண பிரதேச செயலகத்திலும், 12 ஆம் திகதி நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்துறை, காரைநகர் ஆகிய பிரிவை சேர்ந்தவர்களுக்கு வேலணை பிரதேச செயலகத்திலும், 13 ஆம் திகதி சண்டிலிப்பாய் சங்கானை, உடுவில், தெல்லிப்பழை ஆகிய பிரிவை சேர்ந்தவர்களுக்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திலும், 14 ஆம் திகதி வடமராட்சி கரவெட்டி, மருதங்கேணி, பருத்தித்துறை ஆகிய பிரிவை சேர்ந்தவர்களுக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்திலும், 15 ஆம் திகதி தென்மராட்சி பிரிவை சேர்ந்தவர்களுக்கு சாவகச்சேரி பிரதேச செயலகத்திலும், 16 ஆம் திகதி வலிகிழக்கு பிரிவை சேர்ந்தவர்களுக்கு கோப்பாய் பரதேச செயலகத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.
முறைப்பாடுகளை பதிவு செய்தவர்கள் தமது பெயர் விபரங்களை பரிசீலனை செய்ய விரும்பினால் அந்தந்த பிரதேச செயலகங்களில் சென்று பரிசீலிக்க முடியும் என அவர் தெரிவித்தார்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 400 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு - 53 பேர் கைது
» தேர்தல் தொடர்பில் இதுவரை 304 முறைப்பாடுகள் - 60 பேர் கைது
» தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழு ஒன்று அமைக்க திட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum