Top posting users this month
No user |
வட மாகாணத்தில் தேர்தல் வன்முறை தொடர்பில் 23 முறைப்பாடுகள்
Page 1 of 1

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் நாளை மறுதினம் நடைபெறவிருக்கும் நிலையில், வடமாகாணத்தில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் 23முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதாக கபே அமைப்பு இன்றைய தினம் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
இன்றைய தினம் யாழ்.நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர்களுடனான சந்திப்பில் கபே அமைப்பின் அதிகாரிகள் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே குறித்த தகவலினை தெரிவித்திருக்கின்றனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாணத்தில் இதுவரையில் 23 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில் 21 முறைப்பாடுகள் யாழ்.மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளில் 13 முறைப்பாடுகள் வன்முறை தொடர்பிலான முறைப்பாடுகளாகவும், 8 முறைப்பாடுகள் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பிலான முறைப்பாடுகளாகவும், உள்ளன.
மேலும் இந்த முறைப்பாடுகள், தேசியளவில் செய்யப்பட்டிருக்கும் முறைப்பாடுகளின் அடிப்படையில் ஒரு வீதம் மட்டுமே என சுட்டிக்காட்டியிருக்கும் கபே அமைப்பு, இந்த முறைப்பாடுகளில் அதிகளவான முறைப்பாடுகள் பொது எதிரணியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
இதேவேளை கடந்தகாலங்களை போன்று அல்லாமல் இம்முறை அதிகளவான தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களும், கண்காணிப்பாளர்களும் களமிறக்கப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் அச்சுறுத்தப்படுவதற்கு எவ்விதமான வாய்ப்புக்களும் கிடையாது என தெரிவித்துள்ளனர்.
மேலும், சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலை தாம் எதிர்பார்ப்பதாகவும், அதற்காக மக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum