Top posting users this month
No user |
Similar topics
ஈழத் தமிழர்களின் தெரிவு மஹிந்தயோ மைத்திரியோ அல்ல: ஈழத்தமிழர்களின் சர்வதேச சபை
Page 1 of 1

ஈழத்தமிழர்களின் எதிர்ப்பார்ப்புக்களை நடைமுறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் இருந்தோ அல்லது பொதுவேட்பாளர் மைத்திரிபாலவிடமிருந்தோ பெற்றுக் கொள்ள முடியாது.
எனவே, இருவரும் தமிழர்களை பொறுத்தவரை அவர்களின் தெரிவாக அமைய மாட்டார்கள் என்று ஈழத்தமிழர்களின் சர்வதேச சபை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஈழத்தமிழர்கள் தமது நீண்டகால நலனைக்கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும்.
அத்துடன் ஈழத்தேசத்தின் பாதுகாப்பு தொடர்பில் தமது வெளிப்பாட்டை சர்வதேசத்தின் முன்னால் கொண்டு செல்லும் அளவில் செயற்பட வேண்டும் என்றும் சபை கோரியுள்ளது.
சபையின் இணைத்தலைவர் பேராசிரியர் ஆர்.ஸ்ரீரஞ்சன் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச நிலைமைகள் இன்று மாறியுள்ளன. சர்வதேச அரசியல் மாறியுள்ளது. எனினும் இலங்கையின் சிங்கள அரசியல் இன்னும் மாறவில்லை.
தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் தொடர்கின்றன. சிங்கள பௌத்த தமிழர் எதிர்ப்பு கொள்கை தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படுகிறது.
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பில் சர்வதேசத்துக்கு தெளிவான செய்தி கிடைத்திருக்கிறது.
ஆதாரமாக செய்மதிப் படங்களும் கிடைத்துள்ளன. எனினும் சர்வதேசம், தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை அங்கீகரிப்பதில் தோல்வி கண்டுள்ளது.
தமிழர் தேசத்தில் சிங்களவர்களின் ஆதிக்கம் தொடர்கிறது. இதன் மூலம் தமிழர்களின் மூலவளங்கள் கைப்பற்றப்பட்டு உறிஞ்சப்படுகின்றன.
இந்தநிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலி;ல் போட்டியிடுவோர் சிங்கள பௌத்தர்களின் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகின்றனர்.
தேர்தல் விஞ்ஞாபனங்கள் அதனை உறுதப்படுத்துகின்றன. தேர்தல் விஞ்ஞாபனங்களில் ஈழத்தமிழர்களுக்கான பொறிமுறை எதுவும் கூறப்படவில்லை.
எனவே சிங்கள தேசத்தின் கட்டுக்குள் தொடர்ந்தும் தமிழ் மக்கள் இருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
எனவே எதிர்வரும் தேர்தலில் ஈழத்தமிழர்கள் தமது நீண்டகால நலன் மற்றும் சர்வதேச சமூகத்துக்கு தமிழ்தேசத்தின் பாதுகாப்பு தொடர்பான செய்தியை கூறும் வகையில் செயற்படவேண்டும் என்று ஈழத்தமிழர்களுக்கான சர்வதேச சபையின் அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக்கோரிக்கையில் பின்வரும் அமைப்புக்கள் கையொப்பம் இட்டுள்ளன.
இங்கிலாந்தின் பேராசிரியர் ஆர் ஸ்ரீரஞ்சன்( இணைத்தலைவர்)
பெல்ஜியம் தமிழ் கலாசார நிலையம்
கனேடிய தமிழர்களின் தேசிய சபை
டென்மார்க்கின் டெனிஸ் தமிழ்சங்களின் சம்மேளனம்
இத்தாலியின் ஈழத்தமிழர் சபை
பிரான்ஸின் மொய்சொன் டு தமிழ்ஈழம்
ஜேர்மனியின் ஈழத்தமிழர் சபை
நியூஸிலாந்தின் தமிழர் தேசிய சபை
நெதர்லாந்தின் டிச் ஈழத்தமிழர் பேரவை
நோர்வேயின் ஈழத்தமிழர் சபை
சுவிஸின் ஈழத்தமிழர்களின் சபை

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஈழத் தமிழர்களின் உரிமையை சர்வதேசம் பெற்றுத்தர வேண்டும்
» கலப்பு நீதிமன்றம்! தமிழர்களின் அடுத்த தெரிவு என்ன? கனடாவில் விசேட ஆலோசனை!
» தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள்! !2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum