Top posting users this month
No user |
Similar topics
வடக்கில் பெருகும் வங்கிகளும், கடன் சுமையில் விழும் மக்களும்
Page 1 of 1

போருக்கு பின்னர் வடபகுதி மக்களின் கடன் சுமை தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளது. வடக்கில் சராசரியான குடும்பம் ஒன்றுக்கான கடன் சுமையின் அளவு 52, 000 ரூபாயிலிருந்து 194,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுனர் அர்ஜின மகேந்திரன் அண்மையில் கிளிநொச்சியில் நடந்த வங்கி திறப்புவிழா ஒன்றின் போது கருத்து தெரிவித்தார்.
கீழே காட்டப்பட்ட படமானது 2009ற்கும் 2014ற்கும் இடையே மாகாண ரீதியாக வங்கிகளின் எண்ணிக்கையில் எற்பட்ட மாற்றத்தை காட்டுகின்றது.
வங்கிகளின் அடர்த்தி என்பது, ஒரு லட்சம் (100000) மக்களுக்கு எத்தனை வங்கிக்கிளைகள் இருக்கிறது என்பதாகும். 2009 இல் வடக்கில் ஒரு லட்சம் மக்களுக்கு 9.9 ஆக இருந்த வங்கிகளின் எண்ணிக்கை 2014 இல் 118% வளர்ந்து 21.6 ஆக அதிகரித்திருக்கின்றது. மிக முக்கியமாக குறிப்பிட்டு கூற வேண்டிய விடயம், ஒரு லட்சம் மக்களுக்கு, மேல் மாகாணத்தை விட அதிகளவிலான வங்கிகள் வட மாகணத்தில் இருக்கிறது என்பது.
தரவு மூலம் : இலங்கை மத்திய வங்கியில் பேரின பொருளாதார குறிகாட்டிகள் 2014
இன்னுமொரு வகையில் நோக்குவதானால், 2014 தரவுகளின் அடிப்படையில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வெறும் 4% பங்கினை வழங்கும் வட மாகாணத்தில், உள்நாட்டு உற்பத்திக்கு பத்து மடங்குக்கும் அதிகமாக 42% பங்கினை வழங்கும் மேல் மாகாணத்தை விட அதிகமாக வங்கிகள் (ஒரு லட்சம் மக்களுக்கு) இருப்பது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகின்றது. இந்த தரவுகள் வடபகுதியில் வங்கி,நிதி நிறுவனங்களின் செயல்பாட்டில் தவறு இருப்பதை தெளிவாக காட்டி நிற்கின்றது.
தனியாருக்கும் நிறுவனங்களுக்கும் கடனுக்கான வசதிவாய்புக்கள் ஏற்படுத்தவேண்டும்.சிறிய வியாபாரங்களுக்கும், தொழில் முயற்சியாளர்களுக்கும் கடன் வசதிகள் கிடைக்கும் போது அவர்கள் தங்களது வியாபாரத்தை அல்லது சுயதொழிலை விரிவாகம் செய்வார்கள். இதனூடாக தொழில் துறைகள் விருத்தி அடையும், புதிய தொழில் வாய்ப்புக்கள் ஏற்படும்,மக்களின் வாழ்க்கை தரம் உயரும்.இவை எல்லாம் நடக்கும் போது பொருளாதார வளர்ச்சி அபிவிருத்தி ஏற்படும்.வங்கிகள் கடன் வழங்கலை பெருக்க வேண்டும் என்பதற்கு சார்பான வாதங்களே அவை.
எனினும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களும், மக்களும் வங்கிகளிடமும் நிதி நிறுவனங்களிடமும் கடன் வாங்கி நுகர்விலும்,வாகனங்கள் வாங்குவதிலும், வீடுகளில் வசதி வாய்ப்புக்களை பெருக்குவதிலும் செலவிட்டால் மேற்குறிப்பிட்ட நன்மைகள் கிடைக்க மாட்டாது.
வடபகுதி வர்த்தகர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் நிதி முகாமைத்துவம் சம்பந்தமான அறிவும்,கடன் வாங்குதல்,மீளளித்தல் போன்றவற்றில் ஒழுக்கமும் தளர்ந்திருக்கின்றது என்பது மக்களின் கடன் சுமை அதிகரிக்க ஒரு காரணம் மட்டுமே.கடனாளிகள் ஆகும் மக்களின் பின்னணியில் உள்ள அரசியலை விளங்கிகொள்வதும்,அவர்களை கடன் சுமையில் இருந்து விடுவிப்பதும் இன்றைய சூழலில் கட்டாயமானது ஆகும்.
நிதி சார்ந்த அறிவு குறைந்த வடபகுதி சாதாரண மக்கள் வங்கிகளினதும், நிதி நிறுவனங்களினதும் இலகுவான இலக்காக மாறி உள்ளன. சாதாரணமாக ஒரு நிறுவனம் மிக தேவையான காரணத்திற்கு மட்டுமே வங்கிகளிடம் இருந்து கடன் வாங்கும்.
வங்கிகளும் அவர்கள் நிதி அறிக்கைகளை ஆராய்ந்து இந்த நிறுவனத்திற்கு கடன் திருப்பி செலுத்தும் ஆற்றல் இருக்கின்றதா என்பதை மதிப்பிட்டு கடன் கொடுப்பார்கள்.நிறுவனத்திடம் இருக்கும் சொத்துக்களுக்கு அப்பால்பட்டு கடன் மீள செலுத்தும் ஆற்றல் என்பதும் முக்கியமானது.
ஆனால், வட மாகாணத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட சரியான நிதி முகாமைத்துவத்துடன் இயங்கும் நிறுவனங்கள் குறைவு. எனவே வங்கிகளினதும் நிதி நிறுவங்களினதும் அடுத்த இலக்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கடைகளை குடா நாட்டில் நடத்தும் வர்த்தகர்கள் தான்.
இவர்களின் கடைகளுக்கு வங்கிகளின் முகவர்கள் தாங்களாகவே சென்று,அழகான சோடிக்கப்பட்ட வார்த்தைகளால் பேசி (இதற்கு தனியான பயிற்சி வழங்கப்படுகின்றது) அப்பாவி வர்த்தகர்களை தங்கள் பொறிக்குள் விழ வைக்கிறார்கள், இந்த வர்த்தக நிலையங்களின் தொடர்ச்சியான செயற்படும் தன்மையோ,இலாபம் ஈட்டும் தன்மையோ எதுவும் இங்கு கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் என்ற தகுதிக்காக மட்டும் அளவுக்கும் மீறி,கட்ட முடியாது என்று தெரிந்தும் கடன் வழங்கப்படுகின்றது.
எனவே ஒரு சிறிய வர்த்தகம் மிகப்பெரிய கடன் சுமையை நீண்ட காலம் சுமக்க முடியாது,ஓரிரண்டு வருடங்களின் பூர்த்தியாகும் போது வங்கி இவ்வர்த்தக நிலையங்களை ஏலம் போட்டு யாருக்கு விற்கின்றது என்பதும்,வர்த்தகர்கள் நஞ்சு அருந்துகின்றார்களா,அவர்களின் குடும்பங்களுக்கு என்ன ஆகிறது, அவர்களின் பொருளாதார நிலையில் எவ்வளவு பெரிய தாக்கத்கை எற்படுத்துகிறது என்ற தகவல்கள் பற்றி வங்கிகள் கவலைப்படுவதில்லை.
இத்தனை வங்கிகளும் மக்களுக்கு நிதிச்சேவை வழங்கி இலாபம் உழைப்பதற்கும்,உயர்ந்த கட்டடங்களும், ஆடம்பரமான, கவர்ச்சிகரமான காட்சி அறை அமைப்புக்களை பேணுவதற்குமான பணம் எங்கிருந்து கிடைக்கின்றது என்பது கடன் சுமையுடன் திரியும் வர்த்தகர்களும், மக்களும் நன்றாகவே உணர்வார்கள்.
இத்தனை கடன் வழங்கியும் வடபகுதியில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. இத்தனை வங்கிகளும் நிதி நிறுவனங்களும் இருக்க குடா நாட்டு இளைஞர்கள் இன்னும் வேலைக்காக வீதியில் இறங்கி போராடும் நிலைமையே காணப்படுகின்றது. வழங்கப்பட்ட கடன்களினால் வடக்கின் வசந்தம் வீசியிருந்தால் வேலையில்லா பிரச்சனை ஓரளவாவது குறைந்திருக்க வேண்டும்.
வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பது அதன் போட்டித்தன்மை அதிகரிப்பதையே காட்டிநிற்கிறது.
கொழும்பை விட அதிகமான நிதி நிறுவனங்கள் (ஒரு லட்சம் மக்களுக்கு) யாழ்பாணத்தில் யாரிடம் இருந்து பணத்தை சம்பாதிக்கின்றன ,கடந்த இரண்டு மூன்று வருடங்களில் வங்கிகளும், நிதி நிறுவனங்க ளும் சம்பாதித்த அபரீதமான இலாபம் எங்கிருந்து அதிகம் சுரண்டப்பட்டிருக்கின்றது என்ற விபரங்கள் மேலதிக ஆய்வுக்கான பரப்புக்கள் ஆகும்.
அதிகமான போட்டித்தன்மை,வங்கி கிளைக்கு இலாபம் காட்டவேண்டிய நிர்ப்பந்தம்,மாதாந்தம் அடைய வேண்டிய கடன் இலக்கு, போட்டித்தன்மை கூடிய வங்கி துறையில் அடைய வேண்டிய புரமோசன்கள்,சலுகைகள், அந்தஸ்துக்காக பெறவேண்டிய அவார்ட்கள் என்பன மனிதாபிமானத்தையும் மறந்து வங்கியாளர்கையும் இந்த பொறிக்கும் சிக்க வைத்திருக்கின்றது என்பதும்,அதற்காக அவர்கள் இலகுவாக இலக்குகளையே தேடியிருக்கிறார்கள் என்பதும் கவலையுடன் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்களே.
மக்களின் நம்பிக்கைக்குரிய நிதி ஆலோசகராக இருக்க வேண்டிய வங்கிகள், அவர்களுக்கு தகுந்த வழிகாட்டியாக சேவை செய்ய வேண்டிய கடப்பாட்டினை மறந்து, தான்தோன்றிதனமாக இலாப நோக்குடன் செயற்படுவது கண்டிக்க வேண்டியதாகும்.
அத்துடன் தமது வாடிக்கையாளருக்கு தகுந்த அளவில் விளக்கம் கொடுக்காமல், வங்கிகள் கேட்கின்ற இடத்தில் கையெழுத்தை போட்டு கொடுப்பது அபாயகரமானது மட்டுமின்றி விதிகளுக்கு முரணானது என்பதை வர்த்தகர்களும், சாதாரணமக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
மத்திய வங்கி ஆளுநர் அர்ஜின மகேந்திரன் தன் உரையில்,வட பகுதி மக்களுக்கு நிதி சம்பந்தமான அறிவூட்டல் இடம்பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதை முன் நின்று நடத்த வேண்டிய கடப்பாடு வங்கிகளுக்கு உண்டு என்பதுடன் அவை கிரமமாக நடைபெறுகிறதா என்பதை முகாமை செய்கின்ற கடப்பாடு வங்கிகளின் வங்கியான மத்திய வங்கிக்கும் உண்டு. மக்களுக்கு கடனின் தேவை, அதன் முக்கியத்துவம் எவ்வாறு கிரமமாக அதை திருப்பி செலுத்துவது, சரியான நோக்கத்துக்காக மட்டும் பயன்படுத்துவது என்பன தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.மக்களின் குறைகள் சரியாக கேட்கப்பட்டு, நியாயமான முறையில் தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்.பெருமளவிலான மக்களுக்கு நிதி துறைசார் குறைகேள் அதிகாரி (ஒம்புஸ்ட்மன்) என்று ஒருவர் இருப்பதே தெரியாது.நிதி நடவடிக்கைகள் சம்பந்தமான முறைப்பாடுகளை இந்த குறைகேள் அதிகாரியிடம் தெரிவித்து நியாயமான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என்ற தகவல் சகல வாடிக்கையாளர்களுக்கும் தெளிவுப்படுத்தப்பட வேண்டும்.
30 ஆண்டுகால போருக்கு பின்னர் வட புலத்துக்கு ஏன் ஏராளமான வங்கிகளும் நிதி நிறுவனங்களும் படையெடுத்தன,நாம் இந்தளவு கடனும் வைப்புக்களும் பெற்று இவ்வளவு தூரம் வளர்ச்சி அடைந்து இருக்கிறோம் என்று வங்கிகள் பெருமையுடன் சொல்லும் விளம்பரத்துக்கு பின்னால் சாதரணமாக மக்களில் சுரண்டப்பட்ட உழைப்பும்,அவர்களது வீழ்ச்சியும் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய பாப்பரசர் நிதி நிறுவனங்கள் அல்லது நிதி முறைமைகள் சரியாகவும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார், குறிப்பாக வளர்ந்துவரும் நாடுகளை பொருத்த வரையில் சர்வதேச நாடுகளின் நிதி முகவர்கள் அதிகப்படியான கடன்களை வழங்கி மக்களை மேலும் மேலும் வறுமையில் தள்ளுவதையும், அவர்களை தங்கியிருப்பவர்களாக மாற்றி பின்னடைவுக்கு வழி செய்ய கூடாது என்று வேண்டி கேட்டுக்கொண்டார்.அவர் அதை ஐக்கிய நாடுகள் சபையின் பொது கூட்டத்தில் சர்வதேச தலைவர்களின் முன்னிலையில் தெரிவிப்பதற்கு நிறையவே காரணங்கள் இருந்திருக்கின்றது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
தேவையை மீறி பெருகும் வங்கிகளை கட்டுப்படுத்த வேண்டும். விவசாய கடன்களும், தொழில் கடன்களும் குறித்த நோக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்த மக்களை அறிவுறுத்த வேண்டும்.
பல்கலைகழக சமூகமும்,வட மாகணத்தை பிரதிநிதித்துவபடுத்தும் அரசியல்வாதிகளும் மத்திய வங்கியினையும், நிதி கொள்கை வகுப்பினரையும் அறிவுறுத்தி மக்களின் கடன் சுமையை கட்டுபடுத்த வழிவகை செய்ய வேண்டியது அவசியமாகும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நிழல் விழும் நேரம்
» துன்பம் ஒழியும்...இன்பம் பெருகும்! தலைவர்களின் புத்தாண்டு வாழ்த்துக்கள்
» சேதுக்கால்வாய்த்திட்டமும் ராமேசுவரத்தீவு மக்களும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum