Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


துன்பம் ஒழியும்...இன்பம் பெருகும்! தலைவர்களின் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Go down

துன்பம் ஒழியும்...இன்பம் பெருகும்! தலைவர்களின் புத்தாண்டு வாழ்த்துக்கள் Empty துன்பம் ஒழியும்...இன்பம் பெருகும்! தலைவர்களின் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Post by oviya Thu Jan 01, 2015 1:37 pm

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தமிழக ஆளுநர் ரோசையா

புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளை அனைத்து சகோதர, சகோதரர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரும் புத்தாண்டு, மக்களிடையே, அறியாமை எனும் இருளை அகற்றி, ஒற்றுமை எனும் பலத்தைக் கூட்டி நாட்டில் அமைதியையும், மேம்பாட்டையும், வளர்க்கும் என்று நம்புகிறேன்.

அனைத்து துறைகளிலும் இந்தியா உயர்ந்த நிலையை அடையவும் வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி:

உலக நிகழ்வுகளை வருங்காலத் தலைமுறைகளுக்குக் காலமுறைப்படி நினைவூட்டிடும் வரலாற்றிற்கு அச்சாணியாக இயேசு நாதரின் பிறப்பினை மையமாக வைத்துக் கணக்கிடப்படும் ஆங்கில ஆண்டு நிரலில் 2014 விடைபெற, புத்தாண்டு 2015 பிறக்கிறது.

2014 மறைந்திட, புதுமை விளையுமா? எனக் காத்துள்ள மக்களை நாடி வருகிறது 2015! 2014ஆம் ஆண்டு தமிழகத்திற்கு - தமிழக நலனுக்கு - தமிழர் முன்னேற்றத்திற்கு எதிராகவே தாங்க முடியாக் கேடுகளைப் பதிவு செய்து அரங்கேற்றிவிட்டு நகர்கிறது.

அவை அனைத்தையும் களையும் விதமாக இந்தப் புத்தாண்டு 2015 வழிவகுக்கும் எனும் உறுதியான நம்பிக்கையுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழக மக்களுக்கு எனது ஆங்கிலப் புத்தாண்டு தின நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

இன்பம் பெருகும், துன்பம் ஒழியும் என்ற நம்பிக்கையுடன் தமிழக மக்கள், ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை வரவேற்று கொண்டாடி மகிழ்கிறார்கள்.

இந்த நன்நாளிலிருந்தாவது தங்கள் வாழ்க்கை மேன்மையடையும் என்கின்ற நம்பிக்கையிலேயே புத்தாண்டை எதிர்நோக்குகின்றனர்.

அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். ஏழை எளிய மக்களின் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியும், ஏற்ற மிகு வாழ்வும், வாழ்வில் நம்பிக்கையும், வளர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட வேண்டுமென எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகிய மூன்றும் தமிழக மக்கள் அனைவருக்கும் கிடைத்திட வேண்டும். வரும் 2015–ம் ஆண்டு அனைவருக்கும் இன்பம் பொங்கும் ஆண்டாக அமைந்து, வாழ்வாங்கு வாழ வேண்டுமென தே.மு.தி.க. சார்பில் அனைவருக்கும் எனது இதயமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

பல்வேறு சோதனைகளை கடந்த ஆண்டில் சந்தித்திருந்தாலும் 2015 ஆம் ஆண்டு சாதனைகளை படைக்கப் போகும் ஆண்டாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

அதற்கு ஏற்றாற்போல் தமிழக மக்களிடம் புதிய நம்பிக்கையை பெறுவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன.

2016 ஆம் ஆண்டில் அரசியல் மாற்றத்திற்கு வழிவகுக்க 2015 ஆம் ஆண்டு துணை புரியும் என்கிற நம்பிக்கை உள்ளது. தமிழக மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று வாழ ஆங்கில புத்தாண்டில் வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:

ஆதி அந்தம் இல்லாத கால வெள்ளத்தில் எழுந்து தணியும் அலையின் தோற்றமாக ஆங்கிலப் புத்தாண்டு வழக்கம்போல் மலர்கிறது. தாய்த் தமிழகத்தின் உயிர்வாழ்வதாரங்களையும், இலங்கைத் தீவில் பூர்வீக தமிழர் தாயகத்தையும் நாசப்படுத்தவும், அழிக்கவும் அசுர பலத்தோடு இந்தியாவின் மைய வல்லாண்மை அரசும், சிங்களப் பேரினவாத அரசும் மூர்க்கத்தனமாக முனைந்து நிற்கின்றன.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக தஞ்சைத் தரணியும், தமிழ்நாட்டின் பல பகுதிகளும் சட்டபூர்வமான உரிமையுடன் அனுபவித்து வரும் காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு அடியோடு கிடைக்காமல் செய்ய கர்நாடக அரசும் அதற்கு பக்கத் துணையாக வஞ்சகம் செய்யும் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் வரிந்துகட்டிக்கொண்டு திட்டம் தீட்டிச் செயல்படுகின்றன.

தஞ்சை மாவட்டத்தையும், சிவகங்கை மாவட்டத்தையும் நிர்மூலமாக்க முனைகின்ற மீத்தேன் எரிவாயுத் திட்டம் ஒருபுறத்தில், கொங்கு மண்டலத்திற்கு கேடு செய்ய பாம்பாற்றில் அணை கட்ட முனைந்துள்ள கேரள அரசின் அநீதி ஒருபக்கம்.

வளரும் தலைமுறையை கலாச்சார நரக படுகொலையில் தள்ளிடும் விதத்தில் தீங்கு செய்யும் கொடிய மது அரக்கன் இன்னொரு புறத்தில், அபாயகரமான இந்தத் தீமைகளை எதிர்த்துப் போராடி முறியடிக்க அரசியல் கட்சி, மதம், சாதி எல்லைகளைக் கடந்து தமிழக மக்கள் இளைய தலைமுறை, குறிப்பாக மாணவர் சமுதாயம் நெஞ்சில் உறுதிகொண்டு சூளுரைக்கும் நாளாக புத்தாண்டைக் கொண்டாடுவோம்" என்று கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum