Top posting users this month
No user |
Similar topics
சம்பா கோதுமை அல்வா
Page 1 of 1
சம்பா கோதுமை அல்வா
தேவையானவை:
சம்பா கோதுமை – ஒரு கப்
சர்க்கரை – ஒன்றரை கப்
நெய் – ஒரு கப்
முந்திரி – 10
ஏலக்காய் – 5
புட் கலர் ஆரஞ்சு – ஒரு சிட்டிகை.
செய்முறை:
கோதுமையை முதல் நாள் இரவே ஊற வைத்துவிட்டு, மறுநாள் கிரைண்டரில் போட்டு, தேவையான தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தின் மேல் மெல்லிய துணியை கட்டி வைத்துவிட்டு, அரைத்த கலவையை ஊற்றி, பாலை வடிகட்டவும்.
மேலே தங்கும் சக்கையை பிழிந்து எடுத்து, அதை மீண்டும் கிரைண்டரில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
இப்படியே நான்கு முறை கோதுமை ஜவ்வு போல வரும்வரை அரைத்து அரைத்து துணியில் ஊற்றி, வடிகட்டி பால் எடுக்கவும்.
இந்த பாலை அப்படியே மூடி வைத்தால், 6 அல்லது 7 மணி நேரம் கழித்து நன்கு தெளிந்து மேலே தண்ணீர் நிற்கும்.
அந்த தண்ணீரை வடித்துவிட்டு, கீழே தங்கியிருக்கும் மாவு பகுதியை எடுத்து அதில் ஆரஞ்சு கலரை கலந்து வைக்கவும்.
அடி கனமான பாத்திரம் ஒன்றில் சர்க்கரையை போட்டு கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி, கம்பி பதம் வந்ததும் கோதுமை பாலை, சர்க்கரை பாகில் சேர்த்து கைவிடாமல் கிளற வேண்டும்.
நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கொண்டே கிளறவும்.
அல்வா பதம் வந்ததும் முந்திரியை முழுதாக நெய்யில் வறுத்துபோட்டு, ஏலக்காயை பொடித்து போட்டு கிளறவும்.
சுற்றிலும் நெய் கக்கி, அப்படியே கசிந்து, அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்.
அந்த சமயத்தில் இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum