Top posting users this month
No user |
Similar topics
ரவை பொங்கல்
Page 1 of 1
ரவை பொங்கல்
தேவையான பொருள்கள்:
ரவை – 1கப்
பாசிப்பருப்பு – 1/4 கப்
இஞ்சி – சிறிதளவு பொடியாக நறுக்கியது
மிளகு – 1ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
முந்திரிப்பருப்பு – 7 சிறிது சிறிதாக உடைத்துக் கொள்ளவும்
கறிவேப்பிலை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
குக்கரில் பாசிப்பருப்புடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு 1 விசில் வந்தவுடன் இறக்கிவிடவும். இறக்கி தனியே வைத்து ஆறவிடவும்.
வாணலியில் ரவையை போட்டு சிறிது நெய் விட்டு பொன்நிறம் வரும் வரை வறுக்கவும். வறுத்து தனியே எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய்விட்டு உருகியதும் மிளகு, சீரகம் சேர்த்து பொன்நிறம் வரும் வரை வறுக்கவும்.
அதனுடன் முந்திரி, இஞ்சி, கறிவேப்பிலையும் சேர்த்து பொன்நிறம் வரும் வரை வறுக்கவும்.
பின்பு அதில் தேவையான அளவு உப்பு, 2 கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்.
கொதித்தவுடன் ரவையை சேர்த்து நன்கு கிளறவும். சிறிது நேரம் தண்ணீர் வற்றும் வரை கிளறவும்.
பின்பு வேகவைத்த பாசிப்பருப்பை அதில் சேர்த்து நன்கு கிளறி உதிரி உதிரியாக வரும் வரை வேகவிடவும்.
நன்கு வெந்தவுடன் கீழே இறக்கி மேலாக நெய் ஊற்றி கிளறி வைக்கவும்.
சுவையான ரவை பொங்கல் தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum