Top posting users this month
No user |
Similar topics
பாலக்கீரை அடை
Page 1 of 1
பாலக்கீரை அடை
தேவையான பொருட்கள்:
பாலக்கீரை – 1கட்டு
பாசிப்பருப்பு – 1கப்
பச்சரிசி – 1/4கப்
மிளகு – சிறிதளவு
சோம்பு – சிறிதளவு
பூண்டு – 2
இஞ்சி – சிறிதளவு
பச்சை மிளகாய் – 2
சின்ன வெங்காயம் – 1/4கப்
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
பாலக்கீரையை மணல் இல்லாமல் நன்றாக கழுவி நீரை உலரவைத்துவிட்டு சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்…அரிசி, பாசிப்பருப்பை 1மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
மிக்ஸில் ஊறவைத்த பாசிப்பருப்பை போட்டு 1 சுற்று சுற்றி தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்… மிக்ஸில் அரிசி, பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், மிளகு , சோம்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு மைய அரைத்து வைத்துக்கொள்ளவும்…
பிறகு பாசிப்பருப்பு மாவுடன் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.. வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு சிவந்தவுடன், கீரையை போட்டு நன்கு தண்ணீர் வற்றும் வரை வதிக்கி மாவுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்… மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி கொள்ளுங்கள்… மாவு இட்லி மாவு பதத்தை விட கொஞ்சம் கெட்டியாக இருக்க வேண்டும்…
தோசைக்கல்லை காயவைத்து முதலில் எண்ணெய் ஊற்றி 1கரண்டி மாவை எடுத்து வட்டமாக லேசாகவும் ஊற்றுங்கள்.. அடிபாகம் சிவந்தவுடன் திருப்பி போட்டு எண்ணெய் ஊற்றுங்கள்… எண்ணெய்க்கு பதிலாக நெய் ஊற்றியும் சுடலாம்…
சுவையான பாலக் கீரை அடை தயார்…

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum