Top posting users this month
No user |
Similar topics
சுரைக்காயின் பயன்கள்
Page 1 of 1
சுரைக்காயின் பயன்கள்
சுரைக்காய் நீர்ச்சத்து மிகுந்தது. இதில் வைட்டமின் பி2, இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, புரதம் ஆகியவை உள்ளன.
சுரைக்காயை சமைத்து உண்ண உடல் வீக்கம் குறையும். சிறுநீர் அதிகமாக இறங்கும். இதை கர்ப்பிணிப் பெண்கள் பாத வீக்கம் குறைய சமைத்து உண்ணலாம்.
சுரைக்காய், துளசி, ஆடாதோடை ஆகியவற்றை ஒன்றிரண்டாக நறுக்கி, அவற்றுடன் சுக்கு, திப்பிலி, பற்படாகம், கோரைக் கிழங்கு சேர்த்து கஷாயமிட்டு குடித்து வர குளிர் காய்ச்சல் குணமாகும்.
சுரைக்கொடியை பூண்டுடன் சேர்த்து சமைத்து உண்டு வந்தாலோ அல்லது கொடியை நீர்விட்டுக் காய்ச்சி கஷாயமாக்கிக் குடித்து வந்தாலோ, உடலில் தங்கிய நீரை வெளியாக்கி, உடல் வீக்கத்தை குறைக்கும்.
சுரைக்கொடி இலையை ஒன்றிரண்டாக நறுக்கி நீர்விட்டுக் காய்ச்சி சர்க்கரை சேர்த்து குடித்து வர காமாலை குணமாகும்.
சுரை விதை, வெள்ளரி விதை, தர்பூசணி விதை, முலாம்பழ விதை இவற்றை சம அளவு எடுத்து நீரில் 2 மணி நேரமஊற வைத்து நன்கு அரைத்து நீர் விட்டுக் கஞ்சி போல காய்ச்சி உட்கொள்ள கொடுத்து வர வேண்டும்.
இவ்வாறு கொடுத்து வந்தால் சிறு நீரை நன்கு பெருகச் செய்து நீர் எரிச்சல், கல்லடைப்பு, பெருவயிறபோன்றவைகளைக் குணமாக்கும்.
சுரைவிதை, கருஞ்சீரகம், சீரகம், திப்பிலி, வெட்பாலைப் பட்டை, சுத்தி செய்த நேர்வாளம், வெடியுப்பு சுண்ணமபோன்றவற்றை சம அளவு எடுத்து கற்றாழைச்சாறு, பருத்தி இலைச்சாறு விட்டு நன்கு அரைத்து சுண்டைக்காய் அளவஉருட்டி உலர்த்திக் கொள்ளவும்.
இதனை சுரைத்தண்டு குடிநீரில் உட்கொள்ள கல்லடைப்பு, நீரடைப்பு, சதையடைப்பு, வெள்ளை நோய் போன்றவகுணமாகும்.
சுரைக்கொடி கஷாயத்தை சிறுநீர்க் கட்டுப்படல், பெரு வயிறு, உடல் வீக்கம் முதலிய நோய் உள்ளவர்களுக்கு கொடுத்து வர சிறுநீரை நன்கு கழியச் செய்து நோயை குணமாக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum