Top posting users this month
No user |
Similar topics
இரகசிய சிறை முகாம் குறித்த அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்!- எம். ஏ. சுமந்திரன்
Page 1 of 1

திருகோணமலை கடற்படை முகாமில் இருந்த இரகசிய நிலத்தடி சிறை முகாம் நபர்களை தடுத்து வைக்க பயன்படுத்தப்பட்டதாக முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரல் வசந்த கரன்னாகொட கூறியுள்ளமை தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், இந்த இரகசிய சிறை முகாம் குறித்து கரன்னாகொட போன்றவர்களிடம் விசாரணை நடத்தப்படவில்லை என கேள்வி எழுப்பினர்.
இந்த நிலத்தடி சிறை முகாம் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் போது ஏற்படுத்தப்பட்டதாகவும் தான் கடற்படைத்தளபதியாக இருந்த போது சந்தேக நபர்களை தடுத்து வைக்க பயன்படுத்தியதாகவும் அவர்களை சித்திரவதை செய்யவில்லை என கரன்னாகொட நேற்று ஊடகங்களிடம் கூறியிருந்ததாகவும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் தற்போது எங்குள்ளனர், அவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்களா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த பலவந்தமாக காணாமல் செய்தல் மற்றும் விருப்பமின்றி காணாமல் போக செய்யப்பட்ட சம்பவங்கள் சம்பந்தமான ஐக்கிய நாடுகளின் குழுவினர் இரகசிய சிறை முகாம் குறித்த தகவல்களை வெளியிட்டதுடன் புலனாய்வுப் பிரிவினரை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
திருகோணமலையில் உள்ள இரகசிய சிறை முகாம் பற்றிய தகவல் வெளியாகும் என்ற காரணத்தினாலேயே கடந்த அரசாங்கம் ஐக்கிய நாடுகள் குழு இலங்கைக்கு வர அனுமதிக்கவில்லை என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை பிணையில் விடுதலை செய்ய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அண்மையில் வெளியிட்ட அறிக்கை மூலம் இனங்களுக்கு இடையில் வெறுப்புணர்வுகளை தூண்ட முயற்சித்துள்ளதாகவும் சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பொதுமக்களின் வாக்குகளை கொள்ளையடிக்க அரசாங்கம் இரகசிய திட்டம்!
» உண்மையைக் கண்டறிவதில் உறுதியாக இருக்க வேண்டும்: சுமந்திரன்- ஐ.நா. கூறியதை இலங்கை நடைமுறைப்படுத்துமா?- சி.சிறிதரன்
» அரசாங்கம் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்!- மஹிந்த ராஜபக்ச

Permissions in this forum:
You cannot reply to topics in this forum