Top posting users this month
No user |
Similar topics
2015ம் ஆண்டே 2014 ஐ விட நீ மாற்றம் செய்வாயா!
Page 1 of 1

இன்று 2015ம் ஆண்டின் பிறப்பு. இது ஆங்கில வருடப்பிறப்பாயினும் நிர்வாகச் செயற்பாட்டில் ஆங்கில வருடமே நடைமுறையில் இருப்பதால் 2015ம் ஆண்டின் பிறப்பை வரவேற்பது நம் கடமையாகும்.
நேற்றோடு முடிந்து போன 2014ம் ஆண்டு எப்படி என்று கேள்வி எழுப்பினால் எதுவும் இல்லை என்பதாக மட்டுமே விடை இருக்கும்.
ஆண்டின் இறுதியில் என்னைப் பார்த்த 2014 கலண்டர் கேட்டது. என்னைத் தவிர வேறு என்ன கிழித்தாய் என்று.
கலண்டர் இப்படிக் கேட்டால், கலண்டரைப் பார்த்து ஓ! 2014ம் ஆண்டே! நீ நாளும் கிழிந்து போனதைத் தவிர வேறு எதைத்தான் உன் காலப்பகுதியில் கிழித்தாய் என்று கேட்கலாம்.
அந்தளவில்தான் 2014ம் ஆண்டின் முடிவு இருந்துள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் வரட்சி, முடிவில் வெள்ளம், இடையில் பஞ்சம் என்பதாக 2014 முடிந்து போயிற்று.
இன்று 2015ம் ஆண்டின் பிறப்பு. 2015ம் ஆண்டின் பிறப்பு எப்படி அமையும் என்று சாதகம் பார்ப்பதற்கு முன்பதாக 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
இன்று வியாழக்கிழமையில் பிறக்கின்ற புதுவருடம் அடுத்த வியாழக்கிழமை அன்று ஜனாதிபதித் தேர்தலைத் தருகிறது எனில் 2014 ஐ விட பல மடங்கு கடுப்பு நிறைந்த வருடமாக 2015 இருக்கும் என்று துணிந்து கூறலாம்.
எதுவாயினும் மகிந்த ராஜபக்ச - மைத்திரிபால சிறிசேன என்ற ஜனாதிபதி வேட்பாளர்களின் கடும் போட்டியின் மத்தியில் நடக்கப் போகும் தேர்தல் தரும் முடிவைப் பொறுத்தே 2015ம் ஆண்டின் சாதக பலனைக் கணிப்பிடுவது பொருத்தமானது.
குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்; மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்பது மைத்திரிபால சிறிசேனவின் அறைகூவல். மகிந்த ராஜபக்சவோ புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி அனைவரும் ஒன்று படுவோம் வாருங்கள் என்கிறார்.
இரண்டு அறைகூவல்களிலும் எது வெற்றி பெறும் என்பது நமக்குத் தெரியாதாயினும் தேர்தலுக்குப் பின்பான களநிலைமை அவ்வளவு நல்லதாகத் தெரியவில்லை.
2015ம் ஆண்டுக் குழந்தை பிறந்து எட்டாவது நாள் நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் என்பதால் அதனைத் தொடர்ந்து நடக்கப் போவது என்ன? என்று பலன் கூறுவது, கூறுபவருக்கும் வில்லங்கத்தை ஏற்படுத்தும் என்பதால் ஜனவரி 9ம் திகதிக்குப் பின்னர் 2015ம் ஆண்டுக் குழந்தையின் சாதக பலனைப் பார்க்கலாம் என்று கூறுவதே சோதிடர் தப்பித்துக் கொள்ளக் கூடிய ஒரே வழி.
இதற்கு அப்பால் 2015ம் ஆண்டு தமிழர்களுக்கு எப்படி என்று பலன் பார்ப்பதும் தேவையான ஒன்றுதான்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக அறிவித்து விட்டது. இந்த அறிவிப்பு மைத்திரிக்கு கொடுக்கக் கூடிய மகிழ்வை விட, மேலும் பல மடங்கு கூடிய மகிழ்வை மகிந்த ராஜபக்சவுக்கு கொடுக்கும்.
அதாவது தனது தேர்தல் பிரசாரத்தில் மைத்திரிக்கான கூட்டமைப்பின் ஆதரவை தனக்குச் சாதகமாக்கலாம் என்பது மகிந்தவின் நிலைப்பாடு.
எனவே 2015 தமிழர்களுக்கு எப்படி என்ற பலனுக்கும் ஜனவரி 09ம் திகதி வரை பொறுத்திருப்பது தவிர்க்க முடியாததாகும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜோதிடர்களின் ஆரூடங்களை பொய்ப்பித்த 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்
» வட மாகாணசபை செயலாளர்கள் அதிரடி மாற்றம்!
» வெற்றிக்கு மாற்றம் தேவை
» வட மாகாணசபை செயலாளர்கள் அதிரடி மாற்றம்!
» வெற்றிக்கு மாற்றம் தேவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum