Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சம்மந்தன் ஆணையுடன் தன் மானச்சேனையை தட்டியெழுப்பும் புத்தாண்டு

Go down

சம்மந்தன் ஆணையுடன் தன் மானச்சேனையை தட்டியெழுப்பும் புத்தாண்டு Empty சம்மந்தன் ஆணையுடன் தன் மானச்சேனையை தட்டியெழுப்பும் புத்தாண்டு

Post by oviya Wed Dec 31, 2014 1:50 pm

விடியாத வாழ்வொன்றில் வாசலில் நின்று
நம் கொடியோடு தெருவில் கூத்தாடி
அடியோடு இருளை கலைத்த பூரிப்பை
அவனிக்கு சொல்ல முடியாத

விடியாத வாழ்வொன்றில் வாசலில் நின்று
நம் கொடியோடு தெருவில் கூத்தாடி
அடியோடு இருளை கலைத்த பூரிப்பை
அவனிக்கு சொல்ல முடியாத
அடிநெஞ்சின் அந்தரிப்பை
காவிச்சுமந்து தூக்கம் வராமல்
உழன்று ஏக்கம் தருகின்ற கனவுகளால்
அலைக்கழிக்கப்பட்டு பாவிகளாய் படுத்தெழும்பும்
பிறவிகளாய்
விடைபெறுகின்ற ஆண்டை விளிம்பில் நின்று
எழுதுகின்ற கால மொழிக்கு
வரிதருவாய் கொற்றவையே!

எம் அடிவேரில் துடிக்கும் ஆத்ம கீதமே!
அடிமையாய் கிடந்து
அசிங்கப்படுகிற நாயாய் உலவி
நக்கி
எம் வாழ்வை இனியும் சகிக்க எப்படி முடியும்.
மரணம் வருவதாய் இல்லை.
வந்தால் அந்த மாதவ சுதந்திர தேவியின்
காலில் வீழுமா உயிர்
அந்த வரத்தை பெற அதிஸ்டம் உண்டா
நத்திக்கடல் மணல் வரை
நொந்து நொந்து கொடுத்த உயிர்க்கொடைக்கு அப்பால்
தோளில் தூக்கிச்சுமந்து புனிதம் பாட
என்ன கிடக்கிறது நம்மிடம்!
சாக்கடைக்கு வாழ்க்கைப் பட்டுக்கிடக்கிறோம்.

இரத்தமும் தசையும் சிந்தி கட்டியெழுப்பிய
கசங்கா இலட்சியத்தை
கூறுபோட்டு சில குரங்குகள் கூத்தாடுகின்றன.
கட்டாக்காலிகள் சிலதுக்கும் நாம் கதிரை கொடுத்திருக்கிறோம்.
காலமாற்றத்தை உணராத
வேதாளங்களையும் நம் காலடியில் வைத்து
தேசியப்போர்வைக்குள் குளிர்காய விட்டிருக்கின்றோம்.
எதுவுமே கேட்காமல்
விடுதலைக்காய் மட்டும் வீழ்ந்த மாணிக்கங்களின்
உயிர்களால் கட்டியெழுப்பிய தேசிய உணர்வுக்கு
இப்பொழுது வரைவிலக்கணங்களும்
வியாக்கியானங்களும் கூறுகின்ற விசுப்பிலாத்திகளும்
நம் பட்டியில்தான் படுத்திருக்கின்றன.

பரவாயில்லை.
இருந்திட்டு போகட்டும்
சப்பிகளும் கூட சாயாமல் வாழ்க என்றுதான்
கொப்பும் குலையுமாய்
நம் கொஞ்சி வளர்;த்த குரும்பைகள்
செங்களத்தில் சீறி வீழ்ந்தன.
நாம் எப்போதும் சிந்திய இரத்தம் வகுத்த
சத்தியத்தின் பேரில்தால் யாவும் நடக்கின்றது என சிந்திப்பவர்கள்.
நிச்சயம் அது உண்மை.
நம் இதயங்களுக்குள் ஒரு இராஜதந்திரம்
எப்போதுமே உயிர்களின்பேரால் உலவுகின்றது.

அது உயிர்க்கும் நேரங்கள் உண்டு.
அது இரண்டாயிரத்து பதின்னான்கின்
இறுதி நாட்களில் எம் நிலத்தின்
பழுத்த தலைவன் சம்மந்;தர் திருநாவில் திரண்டிருக்கின்றது.
சம்மந்தன் இட்டிருக்கும் ஆணை
காலநியதி
இயற்கையின் விதி
தர்மத்தின் அடையாளம் என முரசறையப்படுகின்றது.

முழுத்தமிழரின் ஆத்மத்தின் மொழியாய்
தீர்மானம் எடுத்திருக்கிற தலைவர் சம்மந்தனுக்கு
தலைசாய்க்காமல் இருக்க முடியாது.
நமக்கு எதுவும் கிடைக்குமென
எடுத்த முடிவாய் இது இருக்கமுடியாது
நம் எதிரி வீழட்டும் என எடுத்;த முடிவு.

முதலில் சிங்கள இனத்துக்கும் ஒரு விடுதலை கிடைக்கட்டுமென
தீர்க்கமாய் சிந்தித்த வெளிப்பாடு.
எம் குலத்தை கடலாக குடித்த ஒரு அக்கிரமக்காரனுக்கு
எவனாவது ஒரு தமிழன் இடுவானா வாக்கு
அவன் சிலவேளை வருவானோ என்று
வீரம் செறிந்த மண்ணில் பிறந்த ஒரு தமிழன்
அச்சத்தில் உறைவானா சொல்!
மகிந்த தமிழரின் எதிரி
நம் எதிரிக்கு எதிராக திரள்வது நம் காலக்கடன்.

நாளைய சுகங்களுக்காக
நம் சந்ததிகளின் முற்றத்தில் ஒரு கொடுரக்காரனை
நம் இசைப்பிரியாக்களை
நிர்வாணமாக்கி நந்திக்கடலோரமெங்கும்
சிதைத்த கொடியவனை
தம் இனியவனை இழந்து ஆயிரமாயிரமாய்
நம் சோதரிகளின் கண்ணீர் சொரியும் இரவுக்கு காரணமானவனை
நாட்டுத்தலைவனென ஆக்க
அடிமைச்சேவகம் செய்ய யாருக்கும் மனம் ஒப்புமா!

புதிதாய் பிறக்கும் ஆண்டின் வாசலில்
தமிழன் கோபத்தை கொப்பளிக்கும் எட்டு
காத்திருக்கின்றது
ஆவலோடு ஒவ்வொரு தமிழனின்
தன் மானத்தை உரசிப்பார்ப்பதற்கு.
தமிழனே!
மனதை கழுவு
மண்டையை குலுக்கு
மாறாட்டங்களை கலக்கி எடுத்து
தூர எறி தொலைந்துபோகட்டும்.

சமுர்த்தியும் வீதியும் வெளிச்சமும் மகிந்த கூட்டம்
மண்வெட்டி பிடித்து கொத்தி உழைத்து
கொண்டுவந்து கொடுக்கும் பணமல்ல.
அரச பணம்
மக்கள் அனுபவிக்க எப்போதும் அது காத்திருக்கும்.
அண்டம் காக்கா ஆண்டாலும் ஆந்தை ஆண்டாலும்
மின்சாரம் கிடைக்கும் மகனே!

தம்பி தங்கச்சி எமக்கு தேவை சுதந்திரம்
நம் வீதியில் இறங்கி நடக்கவும்
எம் வார்த்தைகளை விழுங்காமல் பேசவும்
எம் கல்லறைகளில் நாம் தொழவும்
எம் கண்மணிகளை நினைக்கவும்
உன் காவியத்தலைவனை எழுதவும்
உன் மொழியில் உலாவிவரவும்
ஆசுவாசம் வேண்டும்
உண்டா இலங்கையில் இப்பொழுது.

காணாமல் போனவர்கள் வீடு வந்தார்களா?
விதைவைகளின் நெற்றியில் குங்குமம் ஏறியதா?
சிறையில் வாடும் எம் இளமைகளுக்கு வசந்தம் வந்ததா?
கைதுகள் நின்றதா?
விசாரணைகள் ஓய்ந்ததா?
ரோந்துகளும் துப்பாக்கிகளும் நம் தெருவில் காணாமல் போயினவா?
கேள்வியும் பதிவுகளும் இன்றி
நீ மறைவாய் உன்னால் சலம் கூட விடமுடிந்ததா?
எது உன்னால் நிமிர்ந்து கூனாமல் குறுகாமல்
நடுங்காமல் எது செய்ய முடிந்தது.

உன்னால் காத்தவிராயனை
சங்கிலியன் நாடகத்தை பண்டாரவன்னியனை
பயப்படாமல் மேடையில்
கர்ச்சித்து வீரப்பிரதாபம் செய்ய முடிந்ததா?
ஏன் முடியவில்லை.
உன்பேரில் உன் தலையில் உன் மனதில்
ஒரு அச்சம் திணிக்கப்பட்டு
முழி பிதுங்க உலாவித்திரிகின்ற பிணமா தமிழா நீ!

சர்வாதிகாரத்துக்கு எதிராய்
சமர்புரிய
இன்றைய சேனையின் தலைமகன்
அறைகூவல் விடுத்துள்ளார்
வாக்குகளை திரட்டி
அரக்கனின் பெரு இராட்சியத்தை பிளந்தெறிந்து
பெருமூச்சொன்றை முதலில் விடு.
பிறகு பார்க்கலாம் மிச்சத்தை.
அன்னமே உன் சின்னம்.
அடுத்து ஐந்தாறு நாட்களும்
கந்தசட்டி கவசம்போல
மாற்றத்திற்கான மைத்திரியின்
அன்னத்தை உச்சரி! எதிரியை எச்சரி!

திண்ணையிலும் சந்தையிலும்
பந்தியிலும் போதையிலும்
பார்க்கும் இடமெங்கும் கேட்கும் வார்த்தையெங்கும்
அன்னத்தை இருத்து
கோதாகிக் கிடக்கின்றது கொடுரக்காரனின் கோட்டை.
சிரந்தியும் புத்திரர்களும் கூட
புத்திபேதலித்துத் தடுமாறி
அன்னத்திற்கு புள்ளடியிட்டு
மனுசனிடம் அறைவாங்கலாம்.

வெற்றிலை
ஒரு வெருளியின் சின்னமாய் ஆனதால்
இதுவரை அதும் படும்பாட்டுக்கு
ஒரு விமோசனம் வேண்டமா.
அப்பனுக்கும் சித்தப்பனுக்கும் தம்பிக்கும் மகனுக்கும்
இலங்காபுரியை தாரைவார்க்கத்தவிக்கும்
தமிழின விரோதியை
அரியணையில் இருந்து இறக்கி
அவன் புலம்புகின்ற காலத்தை பார்த்து
நாம் புன்னகைக்க வேண்டாமா?

பிறக்கும் புதிய ஆண்டில்
நம் உயர்ந்த சக்தியால் ஒளி படைப்போம்.
தமிழன் நினைத்தபடி எதுவும் செய்ய முடியாதென கொக்கரிக்கும்
திமிர்பிடித்தவனை அடக்கிவிட
வடக்கும் கிழக்கும் திரளட்டும்
சம்மந்தரின் ஆணை
தமிழர் தடங்களில் இருந்தெழுந்த சத்தியத்தின் ஆணை!
எங்களின் நித்தியங்களில் மாற்றம் தேவை
நம் நிலத்தினில் நாம் நிமிர
ஒர் பிடிமானம் தேவை
மாற்றத்திற்காய் நம் தமிழ்நிலம் திரளட்டும்
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum