Top posting users this month
No user |
Similar topics
சுரங்கப்பாதையில் மூழ்கிய அரசு பேருந்து... ஏரிகள் நிறைந்ததால் ஊருக்குள் வெள்ளம்: தத்தளிக்கும் தமிழகம்
Page 1 of 1

தமிழகத்தில் பெய்துவரும் தொடர் கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்றிரவில் இருந்து விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி மேலும் 3 பேர் பலியாகியுள்ளனர்.
சாலைகளில் வெள்ளம்:
அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில் தொடங்கி ஓட்டேரி கூவம் பாலம்வரை சாலையில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால், அப்பகுதியை வாகனங்கள் கடந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
புளியந்தோப்பு, தாஷாமக்கான் உள்ளிட்ட பகுதிகளிலும் பெரம்பூர் பேரக்ஸ் சாலையிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதிகளில் பேருந்து போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தாம்பரம், பல்லாவரம், பரங்கிமலை, கிண்டி, அசோக்நகர், கோடம்பாக்கம், மகாலிங்கபுரம், நுங்கம்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், அயனாவரம். பெரம்பூர், ஓட்டேரி, புளியந்தோப்பு, வியாசர்பாடி, மூலக்கடை, சர்மாநகர், கொருக்குப்பேட்டை, மணலி, மாதாவரம், மூலக்கொத்தளம், தங்கசாலை, புதிய மற்றும் பழைய வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மணலி, மாதவரம், ராயபுரம், காசிமேடு, பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ரயில் போக்குவரத்து:
சென்னையில் ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மூழ்கிய சுரங்கப்பாதைகள்:
பெரும்பாலான சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் சிக்கியுள்ளன.
சேத்துப்பட்டு சுரங்கப்பாதை, கத்திப்பாரா சுரங்கப்பாதை, பரங்கிமலை சுரங்கப்பாதை, ஜீவா சுரங்கப்பாதை, பெரம்பூர் சுரங்கப்பாதை உள்பட பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதைகளில் முட்டளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளது.
ஜீவா சுரங்கப்பாதை, பரங்கிமலை சுரங்கப்பாதை உள்பட சில சுரங்கப்பாதைகள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளன.
மேற்கு மாம்பாலம் அரங்கநாதன் சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த வெள்ளத்துக்குள் பயணிகள் இல்லாமல் பணிமனைக்கு சென்ற பேருந்து ஒன்று, வெள்ளத்தை கடந்து செல்ல முடியாமல் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ளது.
தற்போது அதிக அளவில் வெள்ளம் வந்ததால் பேருந்து முழுவதும் சுரங்கப் பாதையில் மூழ்கியுள்ளது.
ஏரிகளின் நிலை:
தமிழகத்தில் பெரும்பாலான அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன.
சென்னையில், பல்லாவரம் ஏரி உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது வெள்ளநீரினால் பல்லவாரம் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.
செம்பரம்பாக்கம் மற்றும் மணிமங்கலம் ஏரிகள் நிறைந்து விட்டதால், நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அடையாறு கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் அடையாறு கரையோர பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி, போரூர், ஈக்காட்டுதாங்கல், கோட்டூர்புரம், அடையாறு உள்ளிட்டவை தொடர்ந்து வெள்ளத்தில் மிதக்கும் நிலை உருவாகி உள்ளது.
அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர்:
சென்னை புறநகரில் பெய்த பலத்த மழை காரணமாக நேற்று காலை முதல் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து மழைநீர் வெளியில் செல்லும் கால்வாய்கள் நிரம்பியதால் மழைநீர் முழுவதும் மருத்துவமனைக்குள் புகுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் 113 பேர் பலி:
கனமழையால் தமிழகம் முழுவதும் இது வரை 113 பேர் பலியாகி உள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நியூசிலாந்து கடலில் தத்தளிக்கும் தமிழர்கள்: இந்திய அரசு உதவுமா?
» மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் போது ஷாருக்கான் எங்கிருந்தார்?
» என்ன கருணாநிதிக்கு 92 வயசாயிருச்சா? ஆச்சரியத்தில் மூழ்கிய நீதிபதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum