Top posting users this month
No user |
Similar topics
சிக்கன் பிரியாணி
Page 1 of 1
சிக்கன் பிரியாணி
தேவையான பொருட்கள்
சிக்கன் – 500 கிராம் ( 2 கப்)
பாஸ்மதி அரசி – 500 கிராம்( 2 கப்)
வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி , பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை – 1 கப்
புதினா தழை – 1 கப்
புளித்த தயிர் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவைகேற்ப
எலுமிச்சை சாரு – 1/2 மூடி
தாளிக்க
எண்ணெய் – 1 தேக்கரண்டி
நெய் – 3 தேக்கரண்டி
பிரியாணி இலை – 2
பட்டை – 2 அல்லது 3
கிராம்பு – 4
ஏலம் – 2
ரோஜா மொக்கு – 1
செய்முறை
ஒரு குக்கரில் எண்ணெய் , நெய் விட்டு காய்ந்தவுடன் பிரியாணி இலை,பட்டை,கிராம்பு, ஏலம்,ரோஜா மொக்கு சேர்த்து நன்கு வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் அதனுடன் நீளவாக்கில் அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ,வெங்காயம் பொன்னிறம் ஆகும்வரை நன்கு வதக்கவும்.
இஞ்சி , பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசம் போகும்வரை வதக்கவும் .
பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து அது நன்கு மசியும் வரை வேகவிடவும் .
தக்காளி வெந்தவுடன் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து சிக்௧னுக்கு தேவையான உப்பை சேர்க்கவும்.
கழுவிய கொத்தமல்லி தழை, புதினா தழை அதனுடன் சேர்க்கவும் .
நன்கு கழுவிய சிக்கன் துண்டுகளை போட்டு நன்றாக கலந்து 5 நிமிடம் வேக விடவும் .
1 கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் என்ற அளவில் சிக்கன் கலவையில் ஊற்றி 2 அல்லது 3 விசில் வேகவிட்டு எடுக்கவும் .
அரிசியை கழுவி வைத்துகொள்ளவும் .
வெந்த சிக்கன் கலவையில் காரம் உப்பு சரி பார்த்து , அரிசியை போட்டு குறைவான நெருப்பில் 1 விசில் மட்டும் வேகவைத்து எடுக்கவும் .
அடுப்பில் இருந்து உடனே இறக்கி நன்கு ஆறவிடவும் .
ஆவி அடங்கிய பின் எலுமிச்சை சாரு பிழிந்து சாதம் உடையாமல் லேசாக கலக்கி தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.
குறிப்பு
சிக்கன் வேகும் போது நீர் விடும் , அதனால் அரிசிக்கு தண்ணீர் வைக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.
அரிசி போட்டு வேக வைக்கும் போது ஒரு விசிலுக்கு மேல் விடக்கூடாது அதே போல் நெருப்பும் குறைந்த அளவில் இருக்க வேண்டும் , இல்லா விட்டால் சாதம் குழைந்து விடும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum