Top posting users this month
No user |
Similar topics
மலையகத்திற்கு தமிழ் கல்வியமைச்சு கிடைக்காததால் 100 மில்லியனை இழந்துள்ளோம்! ரமேஷ்வரன்
Page 1 of 1

மத்திய மாகாண தமிழ்க்கல்வி அமைச்சு எமக்கு கிடைக்காததன் காரணத்தால் கடந்த இரண்டு வருடங்களில் எமக்குக்கிடைக்க வேண்டிய தொகையான 100 மில்லியன் ரூபாவை நாம் இழந்துள்ளோம் என மத்திய மாகாண விவசாய, தோட்ட உட்கட்டமைப்பு, சிறிய நீர்ப்பாசன இந்து கலாசார அமைச்சர் ரமேஷ்வரன் தெரிவித்தார்.
ஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரிக்கு மேலதிகமாக ஒரு மாடித்தொகுதியை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று 11 மணிக்கு கல்லூரி அதிபர் எம்.சாந்தகுமார் தலைமையில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,
கடந்த இம்மாதம் 5 ஆம் திகதி இக்கல்லூரியின் ஆரம்பப்பிரிவு கட்டிடத்தில் ஏற்பட்ட மண் சரிவு அபாயம் குறித்து பழைய மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தால் எமக்கு அறிவிக்கப்பட்டது. உடனடியாக செயற்பட்ட நாம் முதலமைச்சரின் நிதியிலிருந்து 45 இலட்சம் ரூபாயை ஒதுக்கி இங்கிருக்கும் மாடிக்கட்டிடத்தில் மேலதிகமாக ஒரு தொகுதியை அமைப்பதற்கு ஆவண செய்தோம்.
அதற்கான அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண கல்வி அமைச்சுக்கு வருடந்தோறும் ஒதுக்கப்படும் நிதியில் 40 இலட்சம் சபை மூலமும் மேலும் 40 இலட்சம் மத்திய அரசாங்கத்தின் மூலமும் ஒதுக்கப்படுகின்றன.
பாடசாலை திருத்த வேலைகளுக்கு 20 இலட்சம் ரூபா தனியாக ஒதுக்கப்படுகிறது. ஆனால் தமிழ் கல்வி அமைச்சு இல்லாத காரணத்தினால் எமக்கு இந்தத்தொகை கிடைக்கவில்லை. கிடைக்கவிருந்த அமைச்சை தடுத்து நிறுத்தியவர்கள் இதற்கு பதில் கூற வேண்டும்.
இ.தொ.கா பாடசாலைகளில் அரசியல் செய்கிறது என்று கூறி எமது சமூகத்திற்குக்கிடைக்கவிருந்த அமைச்சை மட்டுமல்லாது இந்த சமூகத்திற்கு கல்விப்பணிகளையும் தடுத்து நிறுத்தியுள்ளார்கள். இதை விட ஒரு சமூகத்துரோகம் இருக்குமா?
அந்தப் பணம் இருந்திருந்தால் கடந்த இரண்டு வருடங்களில் 15 கல்லூரிகளுக்குச்சரி கட்டிட பணிகளை ஆரம்பித்திருக்கலாம். இவர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும்.
கல்வியில் என்றுமே இ.தொ.கா அரசியல் செய்ததில்லை. எமது சமூகத்திற்கு கிடைக்கும் உரிமைகளை தட்டிப்பறிப்பதில் எமது சமூகத்தைச்சேர்ந்தவர்களே முன்னிற்கும் அவலம்
ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.சக்திவேல், கணபதி கனகராஜ், பிலிப்குமார், சிங் பொன்னையா மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை
பழைய மாணவர்கள் எனப் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கை வங்கியில் பெற்ற கடன் தொகை 19,000 மில்லியனை செலுத்தாத பிரமுகர்கள்
» தமிழ் கூட்டமைப்பின் அறிவிப்பு தமிழ் மக்களை ஏமாற்றும் செயல்!- கோத்தபாய ராஜபக்ச
» சுவிஸ் பாராளுமன்றத்தில் தமிழ் குரல் ஓங்க வேண்டும்: ஈழத் தமிழ் வேட்பாளர் தர்சிக்கா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum