Top posting users this month
No user |
Similar topics
உள்ளத்தில் ஏணியுளர் உயர்வர்
Page 1 of 1
உள்ளத்தில் ஏணியுளர் உயர்வர்
உள்ளத்தில் ஏணியுளர் உயர்வர்
விலைரூ.45
ஆசிரியர் : குலோத்துங்கன்
வெளியீடு: பாரதி பதிப்பகம்
பகுதி: கவிதைகள்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பாரதி பதிப்பகம், 126/108, உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை17. (பக்கம்: 148. விலை: ரூ.45)
கவிஞர் குலோத்துங்கனின் ஏழாவது கவிதைத் தொகுப்பு நூல் இது. இதில் முப்பத்தொன்பது கவிதைகள் அடங்கியுள்ளன. கவிஞரின் கவிதைகள் அனைத்தையும் தாங்கி "குலோத்துங்கன் கவிதைகள்' என்ற முழுமையான தொகுப்பு 2002ல் வெளிவந்தது. அதற்குப் பிறகு வெளிவந்த கவிதைகளின் தொகுப்புத் தான் இந்த உள்ளத்தில் ஏணியுளர் உயர்வர்.
உழைப்பைத் தவிர வேறு எதுவும் உயர்வைத் தராது. அந்த உழைப்புக்கு உந்து சக்தியாக இருப்பது முயற்சி. முயற்சியின் மூலக்கல்லாக இருப்பது முன்னேற வேண்டும் என்னும் எண்ணம். அந்த எண்ணம் இருப்பவரால் மட்டுமே உன்னதங்களை அடைய முடியும் என்பதை "உள்ளத்தில் ஏணியுளர் உயர்வர்' என்னும் கவிதை வெட்ட வெளிச்சமாக்குகிறது. இந்த கவிதையில் ஏணியை முயற்சிக்கும் உயர வேண்டும் என்ற எண்ணத்திற்கும் குறியீடாக்கியுள்ளார் கவிஞர்.
நேர்மை வழி நிற்பவர் பால்
நேயர் பலர் நிற்பதிலை
சார்புடைமை என்பதனுள்
தன்னலத்தின் வேரிருக்கும்
என்று நிகழ்ச்சி சமுதாயத்தின் நேர்மையற்ற தன்மையையும் தன்னலத்தையும் வெளிப்படுத்துகிறார் கவிஞர்.
இணையம் என்னும் இணைப்புக்குள் எத்தனை கோடிக்கணக்கான செய்திகள். அத்தனையும் தருகின்ற இணையத்தை கவிதைக்குள் புகுத்தி அதற்கு "வாமனம் தோற்றதம்மா' என்னும் தலைப்பையும் தந்துள்ளார் கவிஞர் குலோத்துங்கன்.
பொறியியல் துறையில் பூத்த அறிஞர், அறிவியலைப் பாமரனுக்கு வழங்கத் துடிக்கும் அறிவியலாளர். பழைமையை மறக்காத பண்பாளர் என்னும் தகுதிகளைத் தன்னகத்தே கொண்ட அறிஞர் வா.செ.குழந்தைசாமி. குலோத்துங்கனாய் மாறிப் படைத்த கவிதை நூல் இது.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum