Top posting users this month
No user |
Similar topics
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
Page 1 of 1

* அன்பு, அருள், இரக்கம், கருணை, அறிவு போன்ற நற்பண்புகளால் மனிதன் தெய்வ இயல்பை பெறுகிறான்.
* ஒவ்வொரு நாளும் கடவுளை வாழ்த்தி வணங்க வேண்டும். இல்லாவிட்டால் அருள் உணர்வு நம்மிடம் இல்லாமல் போய் விடும்.
* தயவும், கருணையும் நிறைந்தவர் மனதில் அருட்பெருஞ்ஜோதியான கடவுள் குடியிருக்கிறார். தயை இல்லாதவர்களிடத்தில் கடவுள் இருந்தும் இல்லாமல் இருக்கிறார்.
* ஜாதி,சமயம், இனம், நிறம் என்று மனிதர்கள் ஒருவருக்கொருவர் உயர்வு தாழ்வு பாராட்டுவது கூடாது. நாம் அனைவருமே சமமானவர்களே.
* பிறரின் பசிக்கு உணவிடுவதோடு நம் கடமை முடிந்து விடுவதில்லை. அவருக்கு வேண்டிய பிற உதவிகளைச் செய்யவும் முயல வேண்டும்.
* முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் நமக்கு இந்த மனித உடல் கிடைத்திருக்கிறது. அதைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டியது நம் கடமை.
* ஜீவகாருண்யமே வாழ்வின் அடிப்படை. அதுவே பேரின்ப வீட்டின் திறவுகோலாகவும் இருக்கிறது.
* கற்கண்டை ருசித்து மகிழ்ந்தவன் கருங்கல்லைச் சுவைக்க விரும்புவதில்லை. அதுபோல கடவுளின் பெருமையை உணர்ந்தவன் மற்ற எதிலும் விருப்பம் கொள்ள மாட்டான்.
* எல்லாம் வல்லவர் கடவுள் ஒருவரே. அவரை உள்ளது உள்ளபடி அறிந்து விட்டால் கவலையோ, துன்பமோ நம்மை நெருங்க முடியாது.
* கையில் ஜெபமாலையும், வாயில் மந்திரமுமாக இருந்தால் மட்டும் போதாது. மனமும் கடவுளின் திருவடியில் ஒன்றி இருக்க வேண்டும்.
* பொய்மையை நம்பாதீர்கள்! வஞ்சகர்களின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்காதீர்கள். உயர்ந்த சன்மார்க்க நெறியில் வாழ்வு நடத்தி அருட்பெருஞ்ஜோதியை வழிபடுங்கள்.
* ஒன்றையே சொல்லி, ஒன்றையே செய்து சொன்ன வார்த்தையை காப்பாற்றும் விதத்தில் நடந்து கொள்பவரின் மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் எப்போதும் நிலைத்திருக்கும்.
* நல்லோர் மனம் நடுங்கும் விதத்தில் செயல்படுவது கூடாது. தானம் கொடுப்பவரைத் தடுத்து நிறுத்துவது கூடாது.
* நம்பிய நண்பனுக்கு வஞ்சகம் நினைப்பது நல்லதல்ல. ஏழை, எளியவர்களின் வயிறு எரிய தீமைகளைச் செய்வது கூடாது.
* இல்லை என்று இரந்து நிற்போருக்கு உதவ வேண்டும். பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டு பொய், களவில் ஈடுபடுவது கூடாது.
* கோள் மூட்டி பிறர் வாழ்வைக் கெடுப்பதோ, நிழல் தரும் மரங்களை அழிப்பதோ பாவச் செயல்களாகும்.
* கோபம், சோம்பல், பொய், பொறாமை, கொலை, கடுஞ்சொல் முதலிய தீய குணங்கள் மனதில் நுழைய அனுமதிப்பது கூடாது.
* உண்மையைப் பேசுங்கள். அது உங்கள் வார்த்தையைப் பாதுகாக்கும். நல்லெண்ணத்துடன் பிறருக்கு நன்மை செய்யுங்கள். உலகமே உங்களை மதித்துப் போற்றும்.
* எப்போதும் பயந்து கொண்டிருப்பதோ, அறவே பயம் என்பது இல்லாமல் இருப்பதோ கூடாது.
* படி அளவு சாம்பலை மேனியில் பூசிக் கொண்டு, பழுத்த பழம் போல இருந்து கொண்டு மனதைக் கல்லாக வைத்திருப்பது கூடாது. எண்ணமும், செயலும் ஒன்றாகி நல்வழியில் வாழ வேண்டும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum