Top posting users this month
No user |
Similar topics
படையினருக்கு எதிரான பலமான சாட்சியங்களாக விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களைப் பயன்படுத்த திட்டம்
Page 1 of 1

இலங்கைக்குள் விரைவில் ஏற்படுத்தப்பட உள்ள கலப்பு நீதிமன்ற செயற்பாடுகளில் இராணுவத்தினருக்கு எதிராக பலமான சாட்சியாளர்களாக விடுதலை செய்யப்பட உள்ள விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை பயன்படுத்தும் திட்டங்கள் இருப்பதாக மிகவும் நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
வீரவன்ஸ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை கூறியுள்ளார். பல்வேறு பாரதூரமான குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் சந்தேக நபர்களை விடுதலை செய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் தற்போதைய அரசாங்கம் தயாராகி வருவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 30 வருடங்களில் பாரதூரமான பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட புலிகளின் உறுப்பினர்களும் விடுதலை செய்யப்படவுள்ள நபர்களில் அடங்குகின்றனர்.
இலங்கையை இரண்டாக பிளவுப்படுத்துவதற்காக பயங்கரமான பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
இலங்கையை பயங்கரவாதிகளிடம் இருந்து காப்பாற்றிய சட்டரீதியான இராணுவ உறுப்பினர்களை போர்க்குற்றவாளிகளாக கருதி தண்டனை வழங்குவதற்கு இந்த கலப்பு நீதிமன்ற செயற்பாடு வழியமைத்துள்ளது.
இது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரவுக்கு மைத்திரி – ரணில் ஆட்சியின் கீழ் கிடைக்க உள்ள பிரதிபலன்களாகும்.
2015 ஜனவரி 8 மற்றும் ஆகஸ்ட் 17 ஆம் திகதிகளில் நடைபெற்ற தேர்தல்களில் பலர் மாற்றத்தை எதிர்பார்த்து மைத்திரி மற்றும் ரணில் ஆட்சிக்காக தமது வாக்குகளை அளித்தனர்.
எனினும் எதிர்பார்த்த மாற்றத்தை விட மோசமான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகவும் வீரவன்ஸ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளை நடத்துபவர்கள் தண்டிக்கப்படுவர்!- அரசாங்கம்
» மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் கைது
» மக்கள் தங்களுடைய ஜனநாயக உரிமையை நிலை நாட்டுவதற்காக மாத்திரமே வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும்: யோகேஸ்வரன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum