Top posting users this month
No user |
Similar topics
சிறைக் கைதிகளை விடுதலை செய்யக்கோரி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்
Page 1 of 1
சிறைக் கைதிகளை விடுதலை செய்யக்கோரி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்
பல ஆண்டுகளாக சிறையில் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தற்பொழுது தம்மை விடுதலை செய்யக்கோரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வரும் நிலையில அவர்களுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும் அவர்களின் விடுதலை செய்யக்கோரியும் ...
..இன்று கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று சிறையில் உள்ள கைதிகளின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் மனித உரிமை ஆர்வலர்கள் மதகுருக்கள் கைதிகளின் உறவுகள் காணாமல் ஆக்கச் செய்யப்பட்டவர்களின் உறவுகள் அரசியல் பிரமுகர்கள் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து கிளிநொச்சி அரச செயலகத்துக்கு சென்று ஜனாதிபதிக்கான மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளது இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் வடக்கு மகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை முன்னாள் பிரதேசசபைகளின் தவிசாளர்கள் உறுப்பினர்களும் பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் வர்த்தகர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
அரசியல் கைதிகளின் உறவுகளால் கையளிக்கப்பட்ட மகஜர் பின்வருமாறு,
அதிமேதகு ஜனாதிபதி அவர்கள்
(இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு)
ஜனாதிபதி செயலகம்
கொழும்பு.
2015.10.16.
அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான கருணை மனு.
இலங்கைத் தீவில் கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக நீடித்து வந்த இனங்களுக்கிடையிலான பகை முரண்பாடு முடிவுக்கு வரக்கூடிய சூழல் தாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதன் பின்னர் ஏற்பட்டுள்ளதாக தமிழ் மக்களும் சர்வதேச சமுகமும் நம்பிக்கை கொண்டுள்ளது. யுத்தம் நிறைவு பெற்றதும் அது நிகழ்ந்தமைக்கான மூலகாரணத்தைக் கண்டறிவது மற்றும் அதற்கான பரிகாரங்களை மேற்கொள்வதும் ஒரு நல்லாட்சியின் குணாம்சம் என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.
அத்தகைய சூழல் ஒன்றை ஏற்படுத்துவதற்கான சிந்தனையும், செயலூக்கமும் தங்களுக்கு உண்டு என்று நாங்கள் நம்புகின்றோம். அத்தகைய உயர்ந்த பட்ச நம்பிக்கையின் காரணத்தினாலே தங்களுக்கு இம்மனுவை சமர்ப்பிக்கின்றோம்.
நீண்ட வருடங்களாக இலங்கையின் பல சிறைகளில் வாடும் நூற்றுக் கணக்கான அரசியல் கைதிகள் விசாரணையின்றியும், விடுதலையின்றியும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பில் கடந்த அரசுகள் எத்தகைய மனிதாபிமான சிந்தனைகளையோ நடவடிக்கைகளையோ காண்பிக்கத் தவறியமை& சமுகங்களுக்கிடையிலான முரண்பாட்டை கூர்மையடையவே செய்தன. தாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்று பத்து மாதங்கள் ஆனபோதும் அவர்கள் தொடர்பில் எத்தகைய முன்மாதிரியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமை அதிக வருத்தமளிக்கின்ற காரியமாக உள்ளது.
இந்நிலைமை தொடர்கின்ற காரணத்தினாலே எமது மக்கள் விரக்தி அடைந்திருப்பதோடு நல்லாட்சி அரசு மீதான நம்பிக்கையையும் இழக்கக்கூடிய சாத்தியங்கள் தென்படுகின்றன. இது நாட்டின் அமைதி முயற்சிகளுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் என நாம் அஞ்சுகின்றோம்.
குறிப்பாக அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது தமிழ் மக்களிடையே கொந்தளிக்கும் மன உணர்வை ஏற்படுத்தியிருக்கின்றது. அவர்களது குடும்பங்கள் பலவருடங்களாக அனுபவித்து வருகின்ற துயரங்கள் அதிகமானவை. அத்துயரங்களை இன்னும் அதிகரிக்கின்ற செயற்பாடாகவே இன்றைய நிலைமை காணப்படுகின்றது.
போரில்பங்கு கொண்டவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு இயல்புநிலைக்கு இட்டுச் செல்லப்பட்டிருக்கின்றார்கள். ஆயினும் போரில் ஈடுபட்டவர்களுக்கு உதவியமைக்காக பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பலவருடங்களாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது விரும்பத்தகுந்த செயலாக இருக்க முடியாது.
அத்துடன் தங்களுடைய நல்லிணக்க முயற்சிகளை அது பலவீனப்படுத்துவதுடன் இலங்கை அரசின் மீது வரலாற்றில் மற்றொரு கறையை அது ஏற்படுத்திவிடக்கூடும் என்பது கவலைதருவதாகும்.
எனவே இவ்விடயத்தில் எமது நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் துணிவோடும், மனிதாபிமான உணர்வோடும், வரலாற்றின் நினைவோடும் அதிக பட்ச நடவடிக்கைகளை எடுத்து தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்க வேண்டுகிறோம்.
வரலாற்றின் முக்கிய சந்தர்ப்பத்தில் நின்றுகொண்டு இவ்வேண்டுகோளை விடுக்கின்றோம். பௌத்த தர்மத்தின் பேராலும் மனித நேய மாண்புகளின் அடிப்படையிலும் இவ்வேண்டுகோளை ஏற்று செயற்படுவீர்கள் என்று எதிர்பார்த்து இக்கருணைமனுவை கையளிக்கின்றோம்
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சியில் அடையாள உண்ணாவிரதம்!
» தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி, யாழில் உண்ணாநோன்பு போராட்டம்
» வட மாகாணசபையின் 40வது அமர்வு இன்று! 5 நிமிடம் கவனயீர்ப்பு போராட்டம்
» தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி, யாழில் உண்ணாநோன்பு போராட்டம்
» வட மாகாணசபையின் 40வது அமர்வு இன்று! 5 நிமிடம் கவனயீர்ப்பு போராட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum