Top posting users this month
No user |
Similar topics
நெல்சிப் திட்ட மோசடி விசாரணை தொடர்பில் குற்றச்சாட்டு
Page 1 of 1

நெல்சிப் திட்டத்தில் இடம் பெற்ற பலகோடி ரூபாக்கள் மோசடி சம்பந்தமான விசாரணை பாழாங் கிணற்றில் போட்ட கல்லாக மாறியுள்ளதாக பொது மக்களும் பொது அமைப்புக்களும் குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளார்கள்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் நெல்சிப் திட்டத்தில் நூறு கோடி ரூபாவுக்கு மேல் மோசடிகள் இடம் பெற்றுள்ளதாக அன்றைய தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் ஊடகவியலாளர் மாநாட்டை கூட்டி ஆதாரங்களுடன் வெளிக்கொண்டுவந்தார்.
இந் நிலையில் அன்று இருந்த வட மாகாண ஆளுனர் ஜீ.எ.சந்திரஸ்ரீயும் இந்த விடயத்தில் அக்கறை எடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
வட மாகாண சபையில் எதிர் கட்சித்தலைவர் சி.தவராசாவும் இது சம்பந்தமாக எடுத்துரைத்து உரையாற்றியதுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் பலரும் ஆக்ரோசத்துடன் இதனையிட்டு கருத்துக்களை வெளியிட்டார்கள்
இந் நிலையில் வட மாகாண சபையினால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எஸ்.சிவயோகம் தலைமையில மூவர் கொண்டவிசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடை பெறுவதாகவும் அடுத்து வரும் கூட்டத் தொடர்களில் சபையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இது வரையில் இந்த நெல்சிப் திட்டத்தில் இடம் பெற்ற மோசடிகள் சம்பந்தமான எந்தவொரு விசாரணை அறிக்கையும் வெளிவராத நிலைமையே காணப்படுகின்றது. அரசாங்கம் பல்வேறு விசாரணைக் குழுக்களையும் அமைத்து தமிழ் மக்களை ஏமாற்றுவதாக கூறும் தமிழ் தேசியத் தலைவர்கள் தம்மால் நியமிக்கப்பட்ட பல கோடி ரூபாக்கள் மோசடி சம்பந்தமான நெல்சிப் விசாரணையை கைவிட்டு இருப்பது தமிழ் மக்களுக்கு செய்யும் பாரியதுரோகம் என பொது மக்கள் வட மாகாண சபையை குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளார்கள்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» விமல் வீரவன்ஸவுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை
» நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட சாலிய விக்ரமசூரிய பிணையில் விடுதலை
» நிதி மோசடி: தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவிடம் விசாரணை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum