Top posting users this month
No user |
Similar topics
2 பேர் சேர்ந்து செய்தால் கூட்டு பலாத்காரம் அல்ல: அமைச்சரின் சர்ச்சை பேச்சு
Page 1 of 1

இரண்டு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது கூட்டு பாலியல் பலாத்காரம் கிடையாது என்று கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் கால்சென்டர் ஊழியராக வேலை பார்க்கும் இளம்பெண் ஒருவர் கடந்த சனிக்கிழமை இரவு ஓடும் வேனில் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக 2 பேரை மடிவாளா பொலிசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் ஜார்ஜ், இரண்டு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது கூட்டு பாலியல் பலாத்காரம் கிடையாது.
கூட்டு பாலியல் பலாத்காரம் என்பது நான்கு முதல் ஐந்து பேர் ஈடுபடுவது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம் என்று தெரிவித்திருந்தார்.
அவரது இந்த பேச்சு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் லலிதா குமாரமங்கலம் கூறியதாவது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை ஆண்கள் புரிந்துக் கொள்ளவில்லை என்பதற்கு கர்நாடக அமைச்சர் பேச்சு மற்றொரு உதாரணம்.
பொது வாழ்க்கையில் உள்ள தலைவர்கள் குறிப்பாக அரசியலில் உள்ளவர்கள் பேசுவதற்கு முன்னதாக எண்ணிப்பார்க்க வேண்டும்.
அவருக்கு நாங்கள் நோட்டீஸ் அனுப்புவோம், அவருடைய பதிலை அடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இன்று தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ள அமைச்சர் ஜார்ஜ், ஒருவர் என்றாலும், பலர் என்றாலும், பலாத்காரம் என்பது பலாத்காரம்தான் என்றும் கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மேலாடையை கிழித்துவிட்டு பலாத்காரமா? அமைச்சரின் சர்ச்சை பேச்சு
» 22 வயது பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 7 பேர்: உத்தரபிரதேசத்தில் நடந்த கொடூரம்
» குழந்தைகளை பலாத்காரம் செய்தால் ஆண்மைத் தன்மை நீக்கம்: சென்னை உயர்நீதிமன்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum